Tamil Star |
- இளையோருக்கான வேலைவாய்ப்பிற்காக மேலும் 600,000 டொலர் நிதி
- பிஸ்தாவின் மகத்துவங்கள்
- அகதிகளை மீள்குடியேற்றும் முக்கிய நாடுகளின் வரிசையில் கனடா
- GO தொடரூந்து மோதி ஒருவர் பலி
- கனடாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்பும் ரஷ்யா
| இளையோருக்கான வேலைவாய்ப்பிற்காக மேலும் 600,000 டொலர் நிதி Posted: 20 Jun 2016 09:14 PM PDT
ரொரன்ரோ நகரின் வடமேற்குப் பகுயில் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொரன்ரோ பகுதியைப் பிரநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய லிபரல் அரசாங்கத்தினருக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, இது குறித்த அறிவிப்பை ரொரன்ரோ நகரபிதா யோன் ரொரி வெளியிட்டுள்ளார். இந்த கோடை காலத்தில் இளையோருக்கான மேலதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசாங்கத்தின் இந்த நிதி வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் 100 அல்லது அதற்கும் அதிகமான மேலதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த மேலதிக நிதி ரொரன்ரோவில் ஏற்படும் துப்பாக்கி வன்முறைகளை முற்றாக கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் ரொரன்ரோ நகரபிதா யோன் ரொரி தெரிவித்துள்ளார். ஒரே இரவில் குற்றச் செயல்களை நிறுத்திவிட முடியாது என்ற போதிலும், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண இது உதவியாக அமையும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். The post இளையோருக்கான வேலைவாய்ப்பிற்காக மேலும் 600,000 டொலர் நிதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 20 Jun 2016 09:01 AM PDT
சிறிய முடப்பட்ட திண்ணமான ஓட்டிற்குள் பச்சை நிறத்தில் காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ' என்று உலக அளவில் அழைக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளதால் இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. வைட்டமின் "பி6"ஆனது, மனிதனுக்கு நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு மட்டுமில்லாமல் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அழகான சருமம் பிஸ்தாவில் வைட்டமின் "ஈ" மிகுந்துள்ளதால், இது தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அழகான தோலினை தருகிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது புறஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான பார்வை பிஸ்தா பருப்பில் சியாசாந்தின்(Zeaxanthin)மற்றும் லூட்டின்(Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை(Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய ஆரோக்கியம் பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும். நீரிழிவு நோய் பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது. மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.. மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். The post பிஸ்தாவின் மகத்துவங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகளை மீள்குடியேற்றும் முக்கிய நாடுகளின் வரிசையில் கனடா Posted: 20 Jun 2016 08:27 AM PDT
இது தொடர்பில் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில், மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இது வரை பதிவானதிலேயே, மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் கடைசியில் உலக அளவில் 65 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக அல்லது இந்த உலகத்தில் 113 நபர்களில் ஒருவர், அகதியாகவோ, அல்லது தஞ்சம் கோருவோராகவோ அல்லது உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களாகவோ உள்ளனர் எனவும் அது தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே உலக நாடுகளில் தமக்கான நிரந்தர தங்குமிடத்தினை பெற்றுள்ளதாகவும், அவ்வாறான வசதி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததில் கனடா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகளை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் கனடா தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான சிரிய அகதிகளை லிபரல் அரசாங்கம் உள்ளீர்த்தமை அதற்கு சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய நாடுகளில் அகதிகளாக ஏற்கப்பட்டவர்களை விடவும், கனடாவில் அகதிகளாக ஏற்கப்பட்டவர்களுக்கே விரைவாக கனேடிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. The post அகதிகளை மீள்குடியேற்றும் முக்கிய நாடுகளின் வரிசையில் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| GO தொடரூந்து மோதி ஒருவர் பலி Posted: 20 Jun 2016 07:29 AM PDT
Mimico மற்றும் Exhibition ஆகிய தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும், இதில் பாதசாரி ஒருவர் தொடரூந்தினால் மோதுண்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மேற்கு நோக்கிய Lakeshore தடத்தினூடான தொடரூந்துப் பயணம் சுமார் இரண்டு மணிநேரங்கள் தாமதமாகியதாகவும், 8.30 மணிக்கு சற்று முன்னராக மீண்டும் சேவைகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளதாகவும் தொடருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக கிழக்கு நோக்கிய தொடரூந்து போக்குவரத்துகளிலும் சிறு அளவிலான தடங்கல்கள் ஏற்பட்டதாக GO நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில் இடம்பெற்ற இந்த தொடரூந்து பயணத் தடங்கலால் பாதிக்கப்பட்ட பயணிகள் போக்குவரத்தை தொடர்வதற்காக TTC பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post GO தொடரூந்து மோதி ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்பும் ரஷ்யா Posted: 20 Jun 2016 07:23 AM PDT
கனடாவில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய லிபரல் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை ரஷ்யா வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் துருக்கியில் இடம்பெற்ற G20 மாநாட்டின் போது பிரதம்ர் ஜஸ்டின் ரூடோவைச் சந்தித்துள்ளதையும் நினைவுபடுத்தியுள்ள அவர், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கனடாவின் புதிய பிரதமர் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், உறவுகளை மீளக்கட்டியெழுப்பும் சந்தர்ப்பம் இரு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவினை மீண்டும் சீர்செய்வதற்கு காத்திரமான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அவை தொடர்பில் இரு தரப்புகளும் தீர்மானிக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் மேலும் தெரிவித்துள்ளார். The post கனடாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்பும் ரஷ்யா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கோடைகாலத்தில் இளையோருக்கான வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் மேலும் 600,000 டொலர் நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
பேச்சு வழக்கில் கூட நீ பெரிய பிஸ்தாவா? எனக் கேட்கும் நமக்கு அதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை.
அனைத்துலக அகதிகள் நாள் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், அகதிகளை மீள்குடியேற்றும் முக்கிய நாடுகளின் வரிசையில் கனடா முன்னணியில் திகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
GO தொடரூந்து மோதி ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
