Tamil Star |
- எதற்காக மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது?
- கர்ப்பிணிகளே பீட்ரூட் சாப்பிடுங்கள்
- ஆயுத உதிரிப்பாகங்களை ஈராக்கிற்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு
- ரொரன்ரோவில் என்றும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துக்கள் அதிகரிப்பு!
- துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பலி – மூவர் கைது
- குப்பை சேரிக்கும் வாகனத்தில் தீ: வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிப்பாளர்கள்
| எதற்காக மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது? Posted: 02 Jun 2016 07:44 AM PDT
பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியை விட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதிமாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைகிறார்கள் என ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்படும் விளைவுகள் என்ன? மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம்வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல மாரடைப்பு எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம்வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம். The post எதற்காக மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கர்ப்பிணிகளே பீட்ரூட் சாப்பிடுங்கள் Posted: 02 Jun 2016 07:40 AM PDT
கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், ரத்தசோகை ஏற்பட்டால் பிரசவகாலத்தில் சிக்கலாகி விடும். எனவே இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கின்றது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள போலிக் அமிலம், கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு கண் சம்மந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுப்பதுடன், முதுகெலும்பு நன்றாக வளர்ச்சியடைய துணைபுரியும். கர்ப்பிணி பெண்கள் சோம்பலாகவோ, மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தாலோ பீட்ரூட் சாலட், ஜூஸ், சூப் செய்து சாப்பிடலாம். The post கர்ப்பிணிகளே பீட்ரூட் சாப்பிடுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆயுத உதிரிப்பாகங்களை ஈராக்கிற்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு Posted: 02 Jun 2016 07:32 AM PDT
இந்த முறியடிப்பு நடவடிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தியில், குறித்த ஆயுத உதிரிப்பாகங்கள் ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் ஊடாக ஈரக்கிற்கு கொண்டுசெல்லப்படவிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவனரின் கண்காணிப்பில் இருந்த ஒருவரிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது இந்த ஆயுத உதிரிப்பாகங்களின் கடத்தல் தொடபான விபரங்கள் பெறப்பட்டதாகவும், அதனை அடுத்து ரொரன்ரோ விமான நிலையத்தின் சரக்கு ஏற்றும் பகுதியில் குறிப்பிட்ட பொதியினை சோதனையிட்டதில், அதற்குள் துப்பாக்கி உதிரிப்பாகங்களும், காவல்த்துறையினர் பயன்படுத்தும் சாதனங்களும் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் முறியடிப்பு சிலகாலத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்ட போதிலும், நேற்று செவ்வாய்க்கிழமையே இது தொடர்பிலான விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஈராக் தொடர்பிலான ஐ.நா சட்டதிட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடமிருந்து சில உறுதிப்படுத்தல்களை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்ததன் காரணமாகவே குறித்த செய்தி காலதாமதமாக வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. The post ஆயுத உதிரிப்பாகங்களை ஈராக்கிற்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் என்றும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துக்கள் அதிகரிப்பு! Posted: 02 Jun 2016 07:22 AM PDT
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் வாகனங்களின் சாரதிகளும் பயணிகளுமாக 16பேர் உயிரிழந்தள்ளனர் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்றும், அதேவேளை கடந்த ஆண்டு வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் இது கூடுதலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவையற்ற அலட்சியப்படுத்தல்கள் காரணமாகவே அதிக அளவிலான விபத்துக்கள் சம்பவித்துள்ளதாகவும், இடம்பெற்ற அனைத்து விபத்துக்களும் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே எனவும் ரொரன்ரோ காவல்த்துறை அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அளவுக்கு அதிகமான வேகமும், சமிக்கை விளக்குகளில் நிற்காது சென்றமையுமே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணங்களாக அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வாகனத்தை செலுத்திச் செல்லும்போது பல்பயன் கைபேசிகளை இன்னமும் சிலர் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். The post ரொரன்ரோவில் என்றும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துக்கள் அதிகரிப்பு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பலி – மூவர் கைது Posted: 02 Jun 2016 07:09 AM PDT
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,இருவர் காயமடைந்தனர் என்றும் காவல்த்துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிராபத்தான நிலையில் காணப்பட்ட 16 வயது சிறுவன் உலங்கு வானூர்தி மூலம் ஹமிட்டன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு சிகிச்சைகள் பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஏனைய இரண்டு ஆண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். The post துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் பலி – மூவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குப்பை சேரிக்கும் வாகனத்தில் தீ: வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிப்பாளர்கள் Posted: 02 Jun 2016 07:04 AM PDT
நேற்று முற்பகல் வேளையில் Natanya Boulevard மற்றும் Sherie Drive பகுதியில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பை சேரிக்கும் வாகனம் ஒன்றினுள்ளே தீ மூண்டிருந்த போதிலும் அதிலிருந்து நச்சுத் தன்மையான புகை வெளியேறியதை அடுத்தே, அந்த பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இந்த புகையால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளனர். எனினும் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் பிற்பகல் 3 மணிக்கு பின்னர் மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post குப்பை சேரிக்கும் வாகனத்தில் தீ: வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிப்பாளர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மையோக்ளோபின் என்ற புரோட்டீனே மாட்டிறைச்சிக்கு சிவப்பு நிற வண்ணத்தை அளிக்கிறது.

கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே, அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
கனடாவில் இருந்து ஈரக்கிற்கு ஆயுத உதிரிப்பாகங்களை கொண்டு செல்ல முயற்சி ஒன்றை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
ரொரன்ரோவில் இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்த்துறை தரப்பின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
ஒன்ராறியோவின் பிரான்ட்ஃபோர்ட்டிற்கு தெற்காக அமைந்துள்ள சிக்ஸ் நேசன்ஸ் பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.