Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி!

Posted: 19 Jun 2016 06:16 PM PDT

download

download"சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்பது பழமொழி. உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு.

உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம்பிடித்துள்ளது. இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக்கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்

இஞ்சி திறம்பட மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.

The post புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உந்துருளி, காவல்த்துறை வாகனம் மோதி ஒருவர் பலி

Posted: 19 Jun 2016 12:27 PM PDT

i

iமிசிசாகாவில் உந்துருளி ஒன்றும், காவல்த்துறை வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tomken மற்றும் Derry வீதிகள் அமைந்துள்ள பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்தவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட காவல்த்துறை வாகனம் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காவல்த்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாக விபத்துக் குறித்த விசாரணைகளில் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

Derry விதி மற்றும் Pacific Gate ஆகியவற்றுக்கு இடைப்பட்ட Tomken வீதி காவல்த்துறையினரின் விசாரணைகளுக்காக சில மணித்தியாளங்களுக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உந்துருளி, காவல்த்துறை வாகனம் மோதி ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Woburn அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

Posted: 19 Jun 2016 08:51 AM PDT

p

pWoburn அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

Scarborough Golf Club வீதி மற்றும் Lawrence Avenue பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடிக் கட்டத்தில் அதிகாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானவர்களில் ஒருவர் 30 வயது மதிக்கத தக்க ஆண் என நம்புவதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.p

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர் தொடர்பில் காவல்த்துறையினர் தகவல் எதனையும் வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பில் சாட்சியாளர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post Woburn அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெக்சிக்கோ நாட்டினருக்கான வீசா கட்டுப்பாட்டை தளர்த்துகிறது கனடா

Posted: 19 Jun 2016 08:43 AM PDT

oi

oiமெக்சிக்கோ நாட்டினருக்கான வீசா கட்டுப்பாட்டை கனடா தளர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிக்கோ நாட்டினர் கனடாவிற்கு நுளைவதற்கு முன்னர் வீசா தேவையற்றதாக இருந்து வந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து வீசா நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்த வீசா அனுமதி இந்த மாத்தின் இறுதிப்பகுதியில் தளர்த்தப்பட இருப்பதாக கனேடிய அனைத்துலக வர்த்தக அமைச்சர் கிறிஸ்டிய ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.oi

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பங்காளித்துவத்தின் அடிப்படையிலேயே இந்த பயணத் தளர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் மெக்சிக்கோ சனாதிபதி கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும், இந்த நிலையில் குறித்த நுளைவிசைவு நீக்க அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

The post மெக்சிக்கோ நாட்டினருக்கான வீசா கட்டுப்பாட்டை தளர்த்துகிறது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவுடனான தடையற்ற வர்த்தகத்தில் அவசரம் காட்டப்பட மாட்டாது – கனடா

Posted: 19 Jun 2016 08:38 AM PDT

o

oகனடா, சீனா இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் அவசரம் காட்டப்பட மாட்டாது என்று கனடா தெரிவித்துள்ளது.

இந்த உடன்பாட்டிற்கு முன்னராக சீனாவின் மனித உரிமைகள் மற்றும் நிர்வாக விடயங்களில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியுள்ளது.

இந்த கருத்தை முன்வைத்துள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படுவதுடன், சீனாவில் உள்ள கனேடிய நிறுவனங்களை அணுகுவதில் நீதித் தன்மை கடைப்பிடிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் சீனா வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாது இணக்கப்பாடுகளை செய்துகொள்வதில் அவசரம் காட்டப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், சீனாவுடன் தடையற்ற வர்த்தக உடன்பாட்டினைச் செய்துகொள்வதில் கனடாவிற்கு எந்தவித அவசரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவே கனடா விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இரு நாட்டு உறவுகள் பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்ட வரலாற்றைக் கொண்டவை என்றும், இதனை வலுவாக்குவதன் மூலம் இரு நாடுகளும் நன்மையடைய முடியும் என்று தாம் நம்புவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.

The post சீனாவுடனான தடையற்ற வர்த்தகத்தில் அவசரம் காட்டப்பட மாட்டாது – கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊளைச்சதையை குறைக்கும் சூப்

Posted: 19 Jun 2016 07:46 AM PDT

g

gமூலிகை வகைகளில் ஒன்றான தூதுவளையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேவையானவை

தூதுவளை அரைக் கட்டு, தக்காளி, வெங்காயம் 1, பூண்டு பல் 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.

செய்முறை

தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தூதுவளைக் கீரையை, முள் நீக்கி சுத்தம் செய்யவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, தூதுவளை சேர்த்து வதக்கவும்.

அரைத்த தக்காளி விழுது, 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். தக்காளி விழுதுக்குப் பதில் வேகவைத்த பருப்புத் தண்ணீர் சேர்க்கலாம்.

பலன்கள்

கப நாசினி. ஆஸ்துமா அலர்ஜி, காது மந்தம், சளி, இருமல், கக்குவான் விலகும். தாது விருத்தியாகும். கை, கால் அசதியைப் போக்கும்.

நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும். தலைவலி மற்றும் காது, மூக்கு வலிகளுக்கு நிவாரணம் தரும். பசி, ஜீரணத்துக்கு நல்லது. ஊளைச்சதை, தொப்பையைக் குறைக்கும்.

The post ஊளைச்சதையை குறைக்கும் சூப் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™