Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பெண் கடத்தல் முயற்சி – ஒருவர் கைது

Posted: 12 Jun 2016 07:21 PM PDT

l

lஒன்ராறியோவின் நயகரா பகுதியில் இரண்டு ஆட்கடத்தல் முயற்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் காவல்த்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு ஆட்கடத்தல் முயற்சிகளில் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 அளவில் நையகராவின் உல்லாசப் பயணிகள் உலவும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பெண் ஒருவர் வாகனத் தரிப்பிடப் பகுதியினால் நடந்து சென்றுகொண்டிருந்ததாகவும், அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் அந்த பெண்ணை பின்புறத்தில் இருந்து பிடித்ததுடன், காரில் ஏறுமாறு கூறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த பெண் தன்னை விடுவிக்கும் முயற்சியாக அந்த ஆண் நபரின் பாதங்களை பலமான மிதித்ததாகவும், அப்போது அந்த நபர் அந்த பெண்ணை பிடித்திருந்த கையை விடுதித்துக்கொண்டமையால், குறித்த அந்த பெண் தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த அந்த ஆண் நபரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளதுடன், ஆட்கடத்தல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அந்த நபர் மீது சுமத்தியுள்ளனர்.

அந்த பகுதியில் இவ்வாறான மேலும் ஒரு முயற்சி ஏற்கனவே இடம்பெற்றுள்ள நிலையில் அந்த ஆட்கடத்தல் முயற்சியையும் குறித்த நபரே மேற்கொண்டிருக்கலாம் என காவல்த்துறையினர் கருதுகின்றனர்.

The post பெண் கடத்தல் முயற்சி – ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டப்ளின் – வன்கூவர் இடையே நேரடி சொகுசு விமான சேவைகள் – எயர் கனடா அறிவிப்பு

Posted: 12 Jun 2016 09:11 AM PDT

u8

u8கனேடிய தேசிய விமான நிறுவனமான எயர் கனடா, அயர்லாந்து நாட்டின் டப்ளின்(Dublin) நகருக்கும், கனடாவின் வன்கூவருக்கும் இடையே நேரடி சொகுசு விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் தமது நிறுவனம் முதன்முறையாக ஆரம்பிக்கவுள்ள இந்த நேரடி விமான சேவை, வாரத்தில் மூன்று முறை இடம்பெறும் என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

டப்ளினுக்கும் ரொரன்ரோவுக்கும் இடையே ஆண்டு முழுவதுக்குமான தொடர் விமானச் சேவைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே, எயர் கனடா டப்ளின் - வன்கூவர் சொகுசு விமானச் சேவையை ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த புதிய சேவைக்கு கனடாவில் இருந்தும் அயர்லாந்தில் இருந்தும் நிச்சயம் பலத்த ஆதரவு கிடைக்கும் என தாம் நம்புவதாக டப்ளின் விமான நிலையத்தின் நிர்வாக இயக்குநர் வின்சென்ட் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே பயணிப்போரின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளாக பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஏனைய விமான நிலையங்கள் ஊடாகவும் இந்த சேவையை ஆரம்பிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

The post டப்ளின் – வன்கூவர் இடையே நேரடி சொகுசு விமான சேவைகள் – எயர் கனடா அறிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேட்டாவில் சிக்கலுக்குள்ளாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்!

Posted: 12 Jun 2016 09:02 AM PDT

o

oஅண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட அல்பேர்ட்டா மாநிலத்தில் வேலைவாய்ப்பு நிலைமை சிக்கலுக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அல்பேர்ட்டாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நாட்டின் எண்ணெய்வளத் துறையில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாளாந்தம் ஒரு மில்லியன் பரல்களுக்கும் அதிகமான மசகு எண்ணெ உற்பத்தி ஃபோர்ட் மக்முரேயில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் மே மாதத்தில் மட்டும் அங்கு சுமார் 24,000 பேர் வேலை இழந்துள்ளதாகவும், அல்பேர்ட்டாவின் வேலையற்றோர் வீதம் 7.2 இலிருந்து 7.8ஆக அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.o

அதேவேளை இந்த நிலைமைக்கு மாறாக நாடுதழுவிய ரீதியில் கடந்த மாதம் கனடாவின் வேலையற்றோர் வீதம் குறைவடைந்துள்ளதாகவும், 7.1 ஆக காணப்பட்ட கனடாவின் வேலையற்றோர் வீதம் 6.9ஆக உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் கடந்த மாதத்தில் அரசாங்கத் துறைகளில் 30,200 பேர் உட்பட, 13,800 பேருக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனடாவின் வேலையற்றோர் வீதம் எதிர்பார்க்கப்பட்ட அளவினை விடவும் குறைவாக உள்ள போதிலும், இன்னமும் அது சிறந்த நிலையை எட்டவில்லை என பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

The post அல்பேட்டாவில் சிக்கலுக்குள்ளாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜமைக்காவில் கனேடியர் படுகொலை

Posted: 12 Jun 2016 08:58 AM PDT

oi

oiஜமைக்காவின் நெக்றில்(Negril) நகரில் கனேடிய பிரஜை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அங்குள்ள சுற்றுலா தளம் ஒன்றில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது எனவும் ஜமைக்காவின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த அந்த கனேடியர் தனது காதலியுடனேயே ஜமைக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்ததாகவும், இந்த சம்பவத்தின் போது அவரின் காதலிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் அவை தெரிவித்துள்ளன.

இதேவேளை குறித்த கனேடியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை கனேடிய வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.oi

நேற்று இரவு இதனை உறுதிப்படுத்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்த சம்பவம் குறித்து தற்போதைக்கு தம்மால் சிறிதளவு விபரத்தினையே வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இரகசிய பாதுகாப்பு கருதியே மேலதிக தகவல்களை வழங்க முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், கிங்ஸ்டனில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை ஜமைக்காவில் கொல்லப்பட்டு குறித்த கனேடியரின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துள்ளார்.

The post ஜமைக்காவில் கனேடியர் படுகொலை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™