Tamil Star |
- 2012 ஆண்டின் பின்னர் முதல் தடவையாக திறந்துவிடப்பட்டுள்ள ஒன்ராறியோ பிளேஸ்
- மக்முரேக்குத் திரும்புமும் முதல் தொகுதி குடியிருப்பாளர்கள்
- ஐக்கிய அரசு இராட்சியத்தில் தடுத்து வைக்கப்பட்ட கனேடியர் விடுதலை
- கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி
- ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை?
| 2012 ஆண்டின் பின்னர் முதல் தடவையாக திறந்துவிடப்பட்டுள்ள ஒன்ராறியோ பிளேஸ் Posted: 01 Jun 2016 09:04 AM PDT
1971 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்ட "ஒன்ராறியோ பிளேஸ்", கடந்த 2012 ஆம் ஆண்டு வருகையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததை அடுத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாக உள்ள கலை மற்றும் உலக இசைத் திருவிழாவை முன்னிட்டு "ஒன்ராறியோ பிளேஸ்" பகுதியை மீண்டும் முழுமையாக திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. "ஒன்ராறியோ பிளேஸ்" பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கலை மற்றும் உலக இசைத் திருவிழா எதிர்வரும் செப்பரம்பர் மாதம் 15ஆம் நாளில் இருந்து 25ஆம் நாள் வரையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளுக்கான ஒழுங்கமைப்பு மற்றும் ஆதரவுகள் 25 கலை அமைப்புக்கள் மற்றும் 60 இற்கும் மேற்பட்ட ஒன்ராறியோவைத் தளமாக கொண்ட கலைஞர்களால் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வுக்கள் அனைத்தையும் கண்டு கழிப்பதற்கான நுளைவு அனுமதியை 80 டொலர் கட்டணம் செலுத்தி எதிர்வரும் யூன் 15ஆம் திகதிவரை www.infuture.ca என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், ஒரு நாளுக்கான நுளைவு அனுமதிகளை வழங்குவதற்கான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post 2012 ஆண்டின் பின்னர் முதல் தடவையாக திறந்துவிடப்பட்டுள்ள ஒன்ராறியோ பிளேஸ் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்முரேக்குத் திரும்புமும் முதல் தொகுதி குடியிருப்பாளர்கள் Posted: 01 Jun 2016 08:50 AM PDT
இந்த நிலையில் இடம்பெயர்ந்த அந்த பகுதி மக்களுக்களின் நிவாரண உதவிக்காக மேலும் 40 மில்லியன் டொலர்களை சென்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் அல்பேட்டா செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி தலைவர் Jenn McManus விளக்கமளிக்கையில், வழங்கப்பட்டுள்ள இந்த 40 மில்லியன் டொலர் நிதியில் 15மில்லியன் டொலர் நிதி மீளக் குடியரமவுள்ள மக்களின் போக்குவரத்துத் தேவைக்காக பயன்படுத்தபட இருப்பதாகவும், எஞ்சிய 25 மில்லியன் டொலர்கள் மீள் குடியேறும் சமூகத்திற்கான சேவைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு ஒத்துக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 112 மில்லியன் டெலர்களை நிவாரணத்திற்காக செஞ்சிலுவை சங்கம் ஒதுக்கியுள்ள அதேவேளை, மத்திய மற்றும் அந்த மாநில அரசாங்கங்களும் தனித்தனியே அதே அளவான தொகைகளை வழங்கியுள்ள நிலையில் மொத்தமாக 336 மில்லியன் டொலர் அந்த பகுதி ம்க்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் அல்பேட்டாவின் மக்முரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அந்த பகுதியில் இருந்த 80,000 வரையிலான மக்கள் இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதிக்கான காட்டுத் தீ அணைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் மீண்டும் சென்று வசிப்பதற்கான ஏற்பாடுகளை அல்பேட்டா மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் முதல்கட்டமாக இன்று புதன்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவுள்ளதுடன், எதிர்வரும் நான்காம் நாள் வரையில் அந்த பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு கட்டம் கட்டமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அங்கு சில குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாம்பலில் நச்சுத் தன்மை காணப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, இடம்பெயர்ந்தவர்களின் சுமார் 2000 குடியிருப்பாளர்கள் குறித்த நாட்களினுள் தங்களின் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியா நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post மக்முரேக்குத் திரும்புமும் முதல் தொகுதி குடியிருப்பாளர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐக்கிய அரசு இராட்சியத்தில் தடுத்து வைக்கப்பட்ட கனேடியர் விடுதலை Posted: 01 Jun 2016 08:20 AM PDT
தமது தந்தை விடுதலை செய்யப்பட்டமை தமக்கு பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த தருணத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக தாங்கள் காத்துக்கொண்டிருந்ததாகவும், தடுத்து வைத்திருந்து விடுதலை செய்யப்பட்ட Salim Alaradi மகள் Marwa Alaradi தெரிவித்துள்ளார். அத்துடன் தமது தந்தையாரை புதன்கிழமை அதிகாலைக்குள் துருக்கிக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை கனேடிய அரசாங்கம் செய்யும் என தாம் நம்புவதாகவும், அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தானும் உடனடியாகவே துருக்கிக்கு செல்லவுள்ளதாகவும், அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும், தந்தையாரை மீண்டும் பழைய Salim Alaradiஆக மாற்றப் போவதாகவும் அவரின் மகள் Marwa Alaradi தெரிவித்துள்ளார். Salim Alaradi கடந்த 1998 ஆம் ஆண்டு ஐக்கிய அரசு இராட்சியத்தில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்ததுடன், கடந்த 2007 ஆம் ஆண்டு வியாபார நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக மீண்டும் ஐக்கிய அரசு இராட்சியத்திற்கு சென்றிருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவர் அந்த நாட்டு அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுடிருந்தார். கைது செய்யப்பட்ட Salim Alaradiஐ விடுதலை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அவர் நேற்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு வைத்திருந்த நாட்களில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்றும், மின்சாரக் நாற்காலியில் வைத்து அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் தெரிவித்துள்னர். The post ஐக்கிய அரசு இராட்சியத்தில் தடுத்து வைக்கப்பட்ட கனேடியர் விடுதலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி Posted: 01 Jun 2016 07:17 AM PDT
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய ஆதரவை வழங்கியதை அடுத்து அந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் இலகுவாக நிறைவேற்ற முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சட்டமூலத்தினை நிறைவேற்ற நாடாளுமன்றில் நேற்று நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது மொத்தமுள்ள 186 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் 137 பேர் சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். குறித்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், அது செனற் சபைக்க அனுப்பி வைக்கப்படவுள்ளது. செனட் சபையிலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்குமானால் குறித்த சட்மூலம் சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. The post கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை? Posted: 01 Jun 2016 01:02 AM PDT
ஆனால் நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது. 35 கிராம் தேவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம். சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம். என்ன சாப்பிடலாம்? மைதா பிரட்டுக்கு பதில் கோதுமை பிரட் சாப்பிடுங்கள். கேக், பிஸ்கட், இனிப்புகளை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். The post ஒரு நாளைக்கு எத்தனை கிராம் நார்ச்சத்து தேவை? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கடந்த 2012 ஆம் ஆண்டின் பின்னர் ரொரன்ரோவின் "ஒன்ராறியோ பிளேஸ்" (Ontario Place)முதல் தடவையாக மக்கள் பாவனைக்காக முழுமையாக திறந்து விடப்படவுள்ளது.
அல்பேட்டாவின் மக்முரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்களில் முதல் தொகுதியினர் இன்று புதன்கிழமை தங்களின் வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.
ஐக்கிய அரசு இராட்சியத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியரான Salim Alaradi நேற்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை தொடர்பான மத்திய அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு நாடாளுமன்றில் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள் சமைப்பதன் மூலமும், வறுப்பதன் மூலமும் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன.
