Tamil News | Online Tamil News |
- பிளாஸ்டிக் குப்பையை குறைக்க மத்திய அரசு முயற்சி! அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்கு தடை
- ஒரே நேரத்தில் தேர்தல்; ஆணையம் ஆதரவு
- காங்., தலைவர் சோனியாவுக்கு எதிராக கேரள நிறுவனம் வழக்கு
- தி.மு.க.,விலும் வருகிறது நடவடிக்கை விரைவில் மா.செ.,க்கள் மாற்றம்?
- 'தம்பிதுரையை காணவில்லை' வீடு வீடாக 'பிட் நோட்டீஸ்'
- இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு
- காலத்திற்கேற்ப மாறாத பாடத்திட்டம் : நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம்
- பயங்கரவாதத்தை வளர்த்து வரும் அண்டை நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்: அமெரிக்க பார்லி.,யில் மோடி ஆவேசம்
- இருதயத்தில் ஓட்டை விழுந்த சிறுமியி்ன் மருத்துவ சிகிச்சைக்கு மோடி உதவி
- ஜெயலலிதா நடவடிக்கை : 16 மா.செ.,க்கள், மாநில நிர்வாகிகள் மாற்றம்
- லாலு வழக்கு தொடர்பான கோப்புகள் திடீர் மாயம்
| Posted: 08 Jun 2016 09:34 AM PDT 'மத்திய, மாநில அரசுகள் நடத்தும் விழாக்கள், கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்தக் கூடாது' என மத்திய குடிநீர் மற்றும் துாய்மை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. பிளாஸ்டிக் குப்பையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதையும் துாய்மைப்படுத்தும் 'ஸ்வச் பாரத்' என்ற 'துாய்மை இந்தியா' திட்டம் மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியே சாலைகளை சுத்தப்படுத்தி திட்டத்தை துவக்கி ... |
| ஒரே நேரத்தில் தேர்தல்; ஆணையம் ஆதரவு Posted: 08 Jun 2016 09:48 AM PDT புதுடில்லி:'நாடு முழுவதும், லோக்சபா மற்றும் மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல்களை, ஒரே சமயத்தில் நடத்தலாம்' என, பார்லி., நிலைக்குழு அளித்த பரிந்துரைக்கு, தேர்தல் கமிஷன் ஆதரவு தெரிவித்து உள்ளது. கடந்த டிசம்பரில், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒருங்கே நடத்தினால், பணம், நேரம், மனிதசக்தி வெகுவாக மிச்சமாகும்' என, கருத்து தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக அமைக்கப்பட்ட,பார்லி., நிலைக்குழு அளித்த அறிக்கையில், ... |
| காங்., தலைவர் சோனியாவுக்கு எதிராக கேரள நிறுவனம் வழக்கு Posted: 08 Jun 2016 09:52 AM PDT திருவனந்தபுரம் : காங்., தலைவர் சோனியா, பாக்கித் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி, கேரளாவை சேர்ந்த, ஒரு கட்டுமான நிறுவனம், அளித்த புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த, ஹெதர் கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் ராஜிவ், திருவனந்தபுரத்தில்,ராஜிவ் மேம்பாட்டு கல்வி மையத்துக்கான கட்டடம் கட்ட, காங்., தலைவர் சோனியா சார்பில், 'ஆர்டர்' தரப்பட்டதாகவும், கட்டட பணிகளுக்கான நிலுவைத் தொகையை தரவில்லை என்றும் கூறி, போலீசில் புகார் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில், சோனியா மீது, எப்.ஐ.ஆர்., ... |
| தி.மு.க.,விலும் வருகிறது நடவடிக்கை விரைவில் மா.செ.,க்கள் மாற்றம்? Posted: 08 Jun 2016 09:59 AM PDT சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்த தி.மு.க., மாவட்ட செயலர்களை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கட்சி தலைமை தயாராகி வருகிறது. இந்த முறை எப்படியும் ஆட்சிக்கு வந்து விட முடியும் என, தி.மு.க., தலைமை நம்பியது. அதற்காக தீவிரமாக பணியாற்றியது. இருப்பினும், அக்கட்சியால், ௮௯ இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.இதற்கு, கட்சிக்குள் நடந்த உள்ளடி வேலைகளே காரணம் என, தோல்வி அடைந்த 'வேட்பாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் புகார் தெரிவித்து வருகின்றனர்.தேர்தலுக்கு பின் நடந்த கட்சியின் செயற்குழு ... |
| 'தம்பிதுரையை காணவில்லை' வீடு வீடாக 'பிட் நோட்டீஸ்' Posted: 08 Jun 2016 10:02 AM PDT கரூர்:அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, கரூர் எம்.பி.,யாக இருக்கிறார். 2014ல் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், தம்பிதுரையை பல பகுதிகளில் நுழைய விடாமல் பொது மக்கள் தடுத்தனர்.மேலும், கரூர் நகராட்சி பகுதிகளில், கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பொதுமக்களிடம் குறை கேட்க சென்ற தம்பிதுரையை, அடிப்படை வசதி செய்து தரவில்லை எனக்கூறி, பொது மக்கள் முற்றுகையிட்டனர்.இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய தம்பிதுரை வரவில்லை.அரவக்குறிச்சி தொகுதியில்மட்டும், சில இடங்களில், அ.தி.மு.க., ... |
| இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு Posted: 08 Jun 2016 10:23 AM PDT தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலையில் விற்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகத்தில், முறைகேடு நடக்கிறது. இதைத் தடுக்க, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதை, அக்., முதல் செயல்படுத்த, உணவுத் துறை காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.திட்டம் செயல்படுத்தும் முறை ● அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 'டேப்ளட்' இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என, பெயரிடப்பட்டு ... |
| காலத்திற்கேற்ப மாறாத பாடத்திட்டம் : நுழைவுத்தேர்வில் சொதப்பும் தமிழகம் Posted: 08 Jun 2016 10:27 AM PDT 'மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது.அவ்வப்போதுசமச்சீர் கல்வி கமிட்டி பரிந்துரைப்படி, காலத்துக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும். ஆனால், தமிழக அரசு, ஐந்தாண்டுகளுக்கு மேலாக, சமச்சீர் கல்வி ... |
| பயங்கரவாதத்தை வளர்த்து வரும் அண்டை நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்: அமெரிக்க பார்லி.,யில் மோடி ஆவேசம் Posted: 08 Jun 2016 11:09 AM PDT வாஷிங்டன்: ''பயங்கரவாத நடவடிக்கைகள், இந்தியாவின் அண்டை நாட்டால்தான் பேணி காக்கப்பட்டு, வளர்க்கப்படுகின்றன; இவ்வாறு பயங்கரவாதத்தை ஊக்குவிப்போரை தனிமைப்படுத்த வேண்டும்,'' என, அமெரிக்க பார்லிமென்டில், பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றிபோது, பல சமயங்களில், அமெரிக்க எம்.பி.,க்கள் எழுந்து நின்று, கைதட்டி பெருமைபடுத்தினர்.மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்:பயங்கரவாதம் என்பது ... |
| இருதயத்தில் ஓட்டை விழுந்த சிறுமியி்ன் மருத்துவ சிகிச்சைக்கு மோடி உதவி Posted: 08 Jun 2016 11:43 AM PDT புதுடில்லி: தனது இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி கோரி பிரதமருக்கு 6 வயது சிறுமி கடிதம் எழுதினார். உடன் சரியான நேரத்தில் நிதிஉதவி செய்ய உத்தரவிட்டார் பிரதமர். இதையடுத்து அச்சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.உ.பி. மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் வைஷாலி யாதவ்,6 , அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அச்சிறுமிக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அதற்கு ரூ. 3 முதல் 4லட்சம்வரை செலவாகும் எனவும் ... |
| ஜெயலலிதா நடவடிக்கை : 16 மா.செ.,க்கள், மாநில நிர்வாகிகள் மாற்றம் Posted: 08 Jun 2016 01:11 PM PDT அ.தி.மு.க.,வில், ஒரே நாளில் அதிரடியாக, மாற்றம், நீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார். அதன் விளைவாக, 16 மாவட்ட செயலர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். மாநில நிர்வாகிகளும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கட்சி அமைப்புகளில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு, புகாரில் சிக்கியவர்கள், கட்சியை விட்டே நீக்கப்பட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தலில், உட்கட்சி பூசல், உள்ளடி வேலைகள் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியை அ.தி.மு.க.,வால் பெற முடியவில்லை. அதன் விளைவாக, தி.மு.க., 89 இடங்களை பிடித்து, வலுவான எதிர்க்கட்சியாக வந்து விட்டது. மிக முக்கியமாக, கடந்த ... |
| லாலு வழக்கு தொடர்பான கோப்புகள் திடீர் மாயம் Posted: 08 Jun 2016 02:59 PM PDT லக்னோ: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் குறித்த கோப்புகள் உட்பட, 500 கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி அரசு உள்ளது. கடந்த, 1990 - 97ல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீஹார் முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவனம் சப்ளை செய்வது தொடர்பாக ஊழல் நடந்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மாட்டுத் தீவனம் வழங்கியதாக, போலி நிறுவனங்களுக்கு, 950 கோடி ரூபாய் வரை, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |