Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு.!. .அமெரிக்க பார்லி.,யில் நாளை உரை நிகழ்த்துகிறார்

Posted: 06 Jun 2016 09:42 AM PDT

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவை இன்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து பேச்சு நடத்தும் பிரதமர் மோடி, நாளை, அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

ஆப்கானிஸ்தான், கத்தார் பயணத்தை முடித்து சுவிட்சர்லாந்து சென்ற மோடி, அங்கிருந்து நேற்று இரவு அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் மூன்று நாட்கள், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, மெக்சிகோ நாட்டுக்கு செல்கிறார்.பிரதமராக பதவியேற்ற பின் மோடி,அமெரிக்க அதிபர் ஒபாமாவை, ஆறாவது முறையாக சந்திக்கிறார். ...

கறுப்பு பணத்தை மீட்கும் மத்திய அரசு நடவடிக்கையில் முன்னேற்றம் !...தகவல்களை பரிமாறும் பேச்சுக்கு சுவிட்சர்லாந்து தயார்

Posted: 06 Jun 2016 09:47 AM PDT

ஜெனீவா: கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சை துவங்க தயாராக உள்ளதாக, சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுவிட்சர்லாந்தில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் உட்பட, ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு, சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். நேற்று காலை, சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹான் சினிடர் அம்மானை சந்தித்து, பல்வேறு அம்சங்கள் குறித்து ...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ரத்து : சட்டமாக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை

Posted: 06 Jun 2016 09:52 AM PDT

புதுடில்லி,:'ஓட்டுக்கு பணம் கொடுத்தால், தேர்தலை ரத்து செய்யும் அதிகாரத்தை அளிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, மத்திய அரசிடம் வலியுறுத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய தேர்தல் ஆணைய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தலின் போது, 'பூத்' கைப்பற்றுதல் போன்ற வன்முறைகள் நடந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தலை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.அதே நேரத்தில், ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அரசியலமைப்பு சட்டத்தின்படியே நடவடிக்கை ...

எம்.எல்.ஏ. ஆகாமல் புதுச்சேரி முதல்வரானார் நாராயணசாமி

Posted: 06 Jun 2016 09:54 AM PDT

புதுச்சேரி: புதுச்சேரியில், நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு நேற்று பதவி ஏற்றது. உடன், ஐந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். கவர்னர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில், காங்., - தி.மு.க., கூட்டணி, 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நாராயணசாமி தலைமையிலான, அமைச்சரவை பதவியேற்பு விழா, கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நேற்று பகல், 12:00 மணிக்கு நடந்தது.முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஒப்புதலை, தலைமைச் செயலர் மனோஜ் பரிதா வாசித்தார்.இதைத்தொடர்ந்து, நாராயணசாமி ...

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்: முதல்வர் ஜெ., உத்தரவாதம்

Posted: 06 Jun 2016 09:57 AM PDT

''சட்டசபை தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், விரைவில் நிறைவேற்றி முடிப்பேன் என்ற உத்தரவாதத்தை, உங்களுக்கு அளிக்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு, நேற்று நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட, எம்.ஜி.ஆர்.சிலை, காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு உட்பட, பல பகுதிகளுக்கும் சென்று, வாக்காளர்களுக்கு நன்றிகூறினார்.சாலைகளின் இரு ...

'மெட்ரோ ரயில்' விரிவாக்கம்: பிரதமருக்கு கருணாநிதி நன்றி

Posted: 06 Jun 2016 10:04 AM PDT

சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:'மெட்ரோ ரயில்' சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு, தன் ஆட்சி காலத்தில் உருவானது போல, சமீபத்தில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, பெருமை தேடிக் கொள்ள முயன்றுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

தற்போது, பிரதமர் அறிவித்திருப்பது மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கான ஒப்புதல்.இந்த விரிவாக்கமும், தன் ஆட்சிக் காலத்தில் உருவான திட்டம் என்பது போல, முதல்வர் கூறுவதில் உண்மையில்லை.கடந்த, -2009ல், தி.மு.க., ஆட்சியில், தமிழக கவர்னர், சட்டசபையில் படித்த அறிக்கையை பார்த்தாலே, மெட்ரோ ...

டீ கடை அருகே புகை பிடிக்கலாமா: சுகாதார துறை, டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்'

Posted: 06 Jun 2016 10:05 AM PDT

சென்னை: பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பதிலளிக்க, மாநில சுகாதார துறை மற்றும் டி.ஜி.பி., சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவர், தாக்கல் செய்த மனு:பொது இடங்களில் புகைபிடிக்க, சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா, மருத்துவமனை, ஓட்டல், பொழுது போக்கு பூங்கா, நுாலகம், நீதிமன்றம் என, பொது இடங்களாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில், புகைபிடிக்க தடை உள்ளது.பள்ளி, கல்லுாரி உள்ள இடத்தின் அருகில், புகையிலை பொருட்களை ...

மூட வேண்டிய 500 மது கடைகள் பட்டியல் அனுப்பியது 'டாஸ்மாக்'

Posted: 06 Jun 2016 10:07 AM PDT

மூட வேண்டிய, 500 மதுக் கடைகளின் பட்டியலை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் அனுப்பி உள்ளது. தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.

மக்கள் எதிர்ப்பு உள்ள கடைகள்; குறைந்த விற்பனை உள்ள கடைகள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில், மூட வேண்டிய மதுக் கடைகளின் பட்டியலை, மாவட்டம் வாரியாக, டாஸ்மாக் அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
1,000 மனுக்கள்
அதன்படி, சென்னை, 55; கோவை, 12; திருப்பூர், 11; வேலுார், 10; திருவண்ணாமலை, 12; காஞ்சிபுரம், 18; திருவள்ளூர், 12; திருவாரூர், 6; நீலகிரி, 13; மதுரை, 14; விருதுநகர், 18 கடைகள் ...

கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி: 'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

Posted: 06 Jun 2016 11:37 AM PDT

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி, பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ., என, பல துறைகளின் கீழ், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இடம் மாறுதல், விடுப்புகளை சரிசெய்தல், பாஸ்போர்ட் வாங்க அனுமதி, பி.எப்., மற்றும் பதவி உயர்வு பெறுவது என, அனைத்து வகையான ...

டிரம்ப் 'டாய்லெட் பேப்பர்': அமெரிக்காவில் விற்பனை 'ஜோர்'

Posted: 06 Jun 2016 11:56 AM PDT

பீஜிங்: அமெரிக்க வேலைவாய்ப்புகளை, சீனா பறிப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது உருவம் பொறித்த, 'டாய்லெட் பேப்பருக்கு' அமோக வரவேற்பு காணப்படுகிறது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர், 8ல் நடக்கவுள்ளது. இதில், இரு கட்சிகளிலும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக பிரைமரி தேர்தல் தற்போது நடக்கிறது. குடியரசு கட்சியின் சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், உத்தேச வேட்பாளராக முன்னிலை பெற்று விட்டார். ஜனநாயக கட்சி சார்பில் அவரை எதிர்த்து நிற்க, ஹிலாரி கிளிண்டன், ...

பா.ஜ.,வுக்கு வில்லியானார் மாயாவதி ராஜ்யசபா தேர்தலில் காய் நகர்த்தல்

Posted: 06 Jun 2016 02:07 PM PDT

மூன்று மாநிலங்களில், பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தோல்வியுற செய்யும் வகையில், மாயாவதியுடன், காங்., ரகசியமாக கைகோர்த்து உள்ளதால், ராஜ்யசபா தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்., அரசை கவிழ்ப்பதற்கு, பா.ஜ., தரப்பில் தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரை வளைத்தும் கூட, தன் முயற்சியில் பா.ஜ., தோல்வியடைந்தது. அதற்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததே காரணம்.மிகவும் இக்கட்டான அந்த சூழ்நிலையில், காங்கிரசை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™