Tamil News | Online Tamil News |
- உடல் உறுப்புகள் விற்பனைக்கு அங்கீகாரம் கிடைக்குமா:மோசடியை தடுக்க நிபுணர்கள் ஆலோசனை
- விஜய் மல்லையாவுக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' எப்போது?
- கடன் ஏய்ப்பாளர்களுக்கு ஜெட்லி எச்சரிக்கை
- அடிக்கடி வெளிநாடு செல்பவரா? புதிய வசதி அறிமுகமாகிறது
- மதுரா கலவரத்தில் புரட்சி கும்பல்; அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்
- கணக்கு தராத கட்சிகள் மீது நடவடிக்கை:தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை
- 'அ.தி.மு.க., உதவி பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது'
- கத்தார் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வசூல்! ரசீது வழங்காமல் ஏமாற்றுவதாக பெற்றோர் புகார்
| உடல் உறுப்புகள் விற்பனைக்கு அங்கீகாரம் கிடைக்குமா:மோசடியை தடுக்க நிபுணர்கள் ஆலோசனை Posted: 05 Jun 2016 09:56 AM PDT புதுடில்லி;சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதில் உள்ள கட்டுப்பாடு களால் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்கு, உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை சட்டப் பூர்வமானதாக்க வேண்டும் என, பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில், ஒவ்வொரு, 15 நிமிடங்களுக்கு ஒருவர், மாற்று உடல் உறுப்புகள் தேவைக்காக காத்திருப்போர் பட்டியலில் சேருகிறார். அதே நேரத்தில், ஒவ்வொரு, 10 நிமிடங்களுக்கு ஒருவர், மாற்று உடல் உறுப்பு கிடைக்காமல் உயிரிழக்கிறார். சட்டப்பூர்வ அனுமதி:இறப்புக்கு பின், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. அதே ... |
| விஜய் மல்லையாவுக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' எப்போது? Posted: 05 Jun 2016 09:57 AM PDT புதுடில்லி; இந்தியாவிலிருந்து தப்பியோடி,பிரிட்டனில் பதுங்கியிருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்து ஒப்படைக்கும்படி, அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக, சில விளக்கங்களை, சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போல்' கேட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த, பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், இந்திய வங்கிகளிடம், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு, சமீபத்தில் தப்பியோடினார். இந்நிலையில், ஐ.டி.பி.ஐ.,வங்கியில், 900 கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக, ... |
| கடன் ஏய்ப்பாளர்களுக்கு ஜெட்லி எச்சரிக்கை Posted: 05 Jun 2016 09:58 AM PDT புதுடில்லி; வங்கிகளின் வாராக் கடன் மற்றும் நஷ்டம் அதிகரித்து வரும் நிலையில், ''வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றுபவர்கள், இனி, நிம்மதியாக துாங்க முடியாது,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, ஜப்பானுக்கு ஆறு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார் அருண் ஜெட்லி. ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன், அவர் கூறியதாவது:நாட்டின், 10 பொதுத் துறை வங்கிகள்,கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வங்கிகளின் வாராக் கடன்கள் ... |
| அடிக்கடி வெளிநாடு செல்பவரா? புதிய வசதி அறிமுகமாகிறது Posted: 05 Jun 2016 09:58 AM PDT புதுடில்லி : வெளிநாடுகளுக்கு செல்வோர், பாஸ்போர்ட், விசா என பல்வேறு ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல மணி நேரம் முன்னதாக விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதை தவிர்க்க, அடிக்கடி வெளிநாடுகள் செல்பவர்களுக்கும், திரையுலகினர், பிரபலங்கள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கும் இதில் இருந்து விலக்கு அளித்து, இந்த ஆவண சரிபார்ப்பை எளிமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வசதியை பெறுபவர்கள் மீது, குற்ற வழக்குகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ... |
| மதுரா கலவரத்தில் புரட்சி கும்பல்; அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் Posted: 05 Jun 2016 10:07 AM PDT மதுரா;நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில், செயல்பட்டு வந்த, புரட்சி கும்பல், தனி ராஜ்யம் நடத்தி வந்தது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மதுராவில் ஜவஹர்பாக் பகுதியில், சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது, நடந்த மோதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட, 29 பேர் கொல்லப்பட்டனர்; இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை, 368 பேர் கைதாகியுள்ளனர். பிரபல ... |
| கணக்கு தராத கட்சிகள் மீது நடவடிக்கை:தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை Posted: 05 Jun 2016 10:11 AM PDT 'லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் குறித்த கால அவகாசத்திற்குள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால், அந்த கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 77வது பிரிவின் கீழ், ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் முடிவுகள் வெளியான, 30 நாட்களுக்குள், தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். குறித்த காலத்திற்குள் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களை, மூன்றாண்டுகள் வரை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு ... |
| 'அ.தி.மு.க., உதவி பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது' Posted: 05 Jun 2016 10:15 AM PDT சென்னை;'பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க.,வின் உதவி டில்லியிலும், அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ.,வின் துணை தமிழகத்திலும் தேவைப்படுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார். அவரது நேற்றைய அறிக்கை:குத்துச் சண்டை வீரரான முகமது அலி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முகமது அலி தன் துணைவியாருடன், 1990ல் சென்னை வந்து, என் இல்லத்தில், அன்போடு உரையாடினார். அறிவாலயத்திற்கு சென்று அவர் சுற்றிப் பார்த்ததும், என் நினைவிலே நிலைத்திருக்கும் நிகழ்வுகளில் ஒன்று. நிறவெறிக்கு எதிரான தன் உணர்வுகளை பதிவு செய்யும் வகையில், ஒரு முறை தான் ... |
| கத்தார் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு Posted: 05 Jun 2016 10:35 AM PDT தோஹா;இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்படி, கத்தார் நாட்டு தொழிலதிபர்களை, பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் பயணமாக, ஆப்கன் சென்ற அவர், ஹிராட் மாகாணத்தில் இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்ட, நட்புறவு அணையை திறந்து வைத்தார்.ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், மேற்கு ஆசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு சென்றார். நேற்று, ... |
| அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் வசூல்! ரசீது வழங்காமல் ஏமாற்றுவதாக பெற்றோர் புகார் Posted: 05 Jun 2016 10:57 AM PDT அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பு வாரியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள், ரசீது தராமல் ஏமாற்றுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் இலவச பொருட்களும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும் அரசு நிதியில் தான் சம்பளம் தரப்படுகிறது.ஆனாலும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 06,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |