Tamil News | Online Tamil News |
- பி.காம்., - கம்ப்யூ., சயின்ஸ், ஆங்கில இலக்கியம் படிக்க... ஆர்வம் கலை கல்லூரிகளில் சேர மாணவர்கள் போட்டாபோட்டி
- காங்கிரஸ் தலைவர் மாற்றம்?: பயனில்லை என கட்சிக்குள் விமர்சனம்
- தேவை அதிகரிப்பை சமாளிக்க மத்திய அரசு...அதிரடி 5 ஆண்டில் 10,000 மின் உற்பத்தி நிலையங்கள்
- தொழில் திறன் ஊக்குவிக்க மோடி அதிரடி திட்டம்
- சரமாரி விமர்சனங்களால் மதுராவுக்கு ஓடிவந்த ஹேமா
- 'பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி., தடை
- தூய்மை இந்தியா திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில்... சோப்பு செயல் திட்டம் தயாரிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
- அன்பழகனின் வெளிப்படை பேச்சுஸ்டாலினுக்கு மறைமுக 'குட்டு'
- சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி...சரண்!:உடந்தையாக இருந்த பிரபலங்கள் பற்றி விசாரணை
- கடுமையான உழைப்புக்காக பாராட்டபடும் இந்தியர்கள் : பிரதமர் மோடி
| Posted: 04 Jun 2016 07:26 AM PDT பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம், கலை, கல்லுாரிகளில் பி.காம்., படிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஆங்கில இலக்கிய படிப்புக்கும் மாணவியரிடம் அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுஉள்ளன. கல்லுாரிகளில் உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவங்கவில்லை. அதேநேரம், இன்ஜி., படிப்பை போல், கலை, அறிவியல் பாடங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்ஜி.,க்கு செல்ல விரும்புவோரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், ... |
| காங்கிரஸ் தலைவர் மாற்றம்?: பயனில்லை என கட்சிக்குள் விமர்சனம் Posted: 04 Jun 2016 07:32 AM PDT காங்கிரசின் அகில இந்திய தலைவராக, ராகுலை அறிவிக்க வேண்டும் என்ற குரல், அக்கட்சியில் எழுந்துள்ளது. இதையடுத்து, விரைவில் கட்சியின் தலைவராக ராகுலை அறிவிக்க உள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. 'கட்சியின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தாமல், கட்சியின் தலைவராக ராகுலை அறிவிப்பதால் மட்டும், அடுத்து அக்கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து விடப் போவதில்லை' என, கட்சிக்குள் இருந்தே தலைவர்கள் விமர்சனம் கிளப்புகின்றனர்.நெருக்கடிஇது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியின் தொடர் தோல்வியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், இளைய தலைமுறையை சேர்ந்த ... |
| தேவை அதிகரிப்பை சமாளிக்க மத்திய அரசு...அதிரடி 5 ஆண்டில் 10,000 மின் உற்பத்தி நிலையங்கள் Posted: 04 Jun 2016 07:55 AM PDT புதுடில்லி:இந்தியாவில் மின் தேவை கணிசமாக அதிகரித்து வருவதால், ஒருபுறம், 'மெகா' திட்டங்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம், சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும், 10 ஆயிரம் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில், தொழில் வளர்ச்சி, புதிய கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற காரணங் களால், ஆணடுதோறும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மின் தேவையை, பெருமளவு, மரபுசார் மின் திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மின் தேவை உயர்வை ... |
| தொழில் திறன் ஊக்குவிக்க மோடி அதிரடி திட்டம் Posted: 04 Jun 2016 07:57 AM PDT ''நாட்டில் வளர்ந்து வரும் தொழில் திறன்களை மேம்படுத்துவதுடன், இதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொண்டு செல்ல வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 'திறன் மேம்பாட்டு இந்தியா' திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் முதல் நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. பல்வேறு துறை அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிரபல தொழிலதிபர்கள், நிபுணர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ... |
| சரமாரி விமர்சனங்களால் மதுராவுக்கு ஓடிவந்த ஹேமா Posted: 04 Jun 2016 08:42 AM PDT மதுரா: மதுராவில் நடந்த மோதலின் போது, சமூக வலைதளங்களில், தனது புதிய திரைப் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, அந்த தொகுதியின் பா.ஜ., - எம்.பி., ஹேமமாலினி, நேற்று, அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். சட்டவிரோத குடியிருப்புஉத்தரப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மதுராவில் ஜவஹர்பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போதுநடந்த மோதலில், இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட, 24 பேர் கொல்லப்பட்டனர்; 124 பேர் கைது செய்யப்பட்டனர்.இச்சம்பவம் ... |
| 'பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி., தடை Posted: 04 Jun 2016 08:50 AM PDT பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன. நேர்காணல்சென்னை, பெங்களூரு,கவுகாத்தி, காரக்பூர், டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,க்களில் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்த, வணிக நிறுவனங்களுக்கு, அகில இந்திய ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி அனுமதி அளிக்கும். இந்த அனுமதி படியே, ஐ.ஐ.டி., நிர்வாகம் அனுமதி வழங்கும்.கடந்த ஆண்டு நேர் காணலுக்கு வந்த நிறுவனங்களில், ... |
| Posted: 04 Jun 2016 09:32 AM PDT துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள முதல், 10 தலங்களில், தமிழகத்தின் மதுரை மீனாட்சி கோவில், ஆந்திராவின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், பிரசித்தி பெற்ற கோவில்கள், சுற்றுலா தலங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, 100 தலங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இவற்றில், 10 தலங்கள், முதல்கட்டமாக, துாய்மைப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.இப்பட்டியலில், மதுரையில் உள்ள ... |
| அன்பழகனின் வெளிப்படை பேச்சுஸ்டாலினுக்கு மறைமுக 'குட்டு' Posted: 04 Jun 2016 10:49 AM PDT கருணாநிதி சொல்வதை வேதவாக்காக கருதி செயல்பட்டிருந்தால், தோல்வியை தழுவி இருக்க மாட்டோம்' என, தி.மு.க., பொது செயலர் அன்பழகன் பேசிய பேச்சு, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினம் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசும் போது, 'தி.மு.க., தோல்விக்கு எதிர்க்கட்சிகள் காரணமல்ல. தி.மு.க.,வினர் தான் காரணம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கருணாநிதியின் அறிக்கை, ... |
| சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி...சரண்!:உடந்தையாக இருந்த பிரபலங்கள் பற்றி விசாரணை Posted: 04 Jun 2016 10:51 AM PDT சென்னை:பெங்களூரில் பதுங்கி இருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், போலீசாரிடம் சரணடைந்தான். சிலை கடத்தலில் அவனுக்கு உடந்தையாக இருந்த பிரபலங்கள் பற்றி, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆழ்வார்பேட்டை, 'முர்ரேஸ் கேட்' சாலையில் உள்ள பங்களாவில், 'ஆர்ட் கேலரி' என்ற பெயரில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள், 1,700 ஆண்டுகள் பழமையான சிலைகளை பதுக்கி வைத்து இருந்தான். மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி.,சுந்தரம் தலைமையிலான போலீ சார், அதிரடி சோதனை நடத்தி, ஐம்பொன், கற்சிலைகள் என, 112சிலைகளை பறிமுதல் ... |
| கடுமையான உழைப்புக்காக பாராட்டபடும் இந்தியர்கள் : பிரதமர் மோடி Posted: 04 Jun 2016 12:28 PM PDT
தோகா:கடுமையான உழைப்புக்காக இந்தியர்கள் பாராட்டபடுகின்றனர் என தோஹாவில் பிரதமர் மோடி பேசினார்.6 நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பயணத்தின் முதல் நாளான நேற்று(04-06-16) ஆப்கன் சென்றடைந்தார். அங்கு இந்தியா சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஹெராத் மாகாணத்தில் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சிஸ்ட்- இ- ஷரிப் என்ற இடத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார்.ஆப்கன் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு சென்றார். அங்கு தோஹா நகரில் இந்திய தொழிலாளர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். மருத்துவ ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 05,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |