Tamil News | Online Tamil News |
- * மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று... முடிவு! * பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்
- தெலுங்கானா நீதிபதிகளின் போராட்டம் தீவிரமடைகிறது ! தனி ஐகோர்ட் கோரிக்கையும் வலுக்கிறது
- உனக்கெந்த பாவமும் சேராது: மோடிக்கு சாமி பதில்
- நம்பிக்கை வீண் போகாது: முதல்வர் ஜெ., பேச்சு
- 11 மாடி மவுலிவாக்கம் கட்டடம் 10 நொடியில் தூள் : * இடிப்பு பணியை ஏற்றுள்ள நிறுவனம் தகவல்
- கட்டம் கட்டப்படுகிறார் விஜயகாந்த்: நெருக்கடி கொடுக்கும் மா.செ.,க்கள்
- சுவாதி கொலை எதிரொலி: ஐகோர்ட் காட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்வி
- தி.மு.க.,வில் மேலும் 3 மா.செ., பதவி பறிப்பு கூட்டணி கட்சியினர் புகார் மீது நடவடிக்கை
- 2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மெட்ரோ ரயில்
- சுகாதார வசதிகள் குறைவால் 12 லட்சம் குழந்தைகள் இறப்பு
- துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 50 பேர் பலி
| Posted: 28 Jun 2016 09:51 AM PDT மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன. எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.இந்த ஊழியர்கள் முன் வைப்பது மொத்தம், 36 அம்ச கோரிக்கைகள். அவற்றில், 18 முக்கிய கோரிக்கைகள் வருமாறு:1. ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க ... |
| தெலுங்கானா நீதிபதிகளின் போராட்டம் தீவிரமடைகிறது ! தனி ஐகோர்ட் கோரிக்கையும் வலுக்கிறது Posted: 28 Jun 2016 09:58 AM PDT தெலுங்கானா மாநில கீழ் கோர்ட் நீதிபதிகளாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், நீதிபதிகளின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவுக்கு தனி ஐகோர்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம், கடந்த 2014ல் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது.'முதல், 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத், பொது தலைநகராக இருக்கும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐதராபாத், தெலுங்கானா மாநில ... |
| உனக்கெந்த பாவமும் சேராது: மோடிக்கு சாமி பதில் Posted: 28 Jun 2016 10:04 AM PDT புதுடில்லி:பகவத் கீதையை மேற்கோள்காட்டி, பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார், பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி. ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, விமர்சனம் செய்தார் சுப்பிரமணியன் சாமி. மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி குறித்தும் மறைமுகமாக விமர்சனம் செய்தார்; இது, கட்சி மற்றும் அரசில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று ... |
| நம்பிக்கை வீண் போகாது: முதல்வர் ஜெ., பேச்சு Posted: 28 Jun 2016 10:09 AM PDT சென்னை,:'வளமான தமிழகத்தை படைத்து, எல்லாரும் பயன்பெற வேண்டும்; சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும். இதுவே, அ.தி.மு.க., லட்சியம்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - த.மா.கா., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகளில் இருந்தும், பிற அமைப்புகளில் இருந்தும் விலகிய, 11,967 பேர், நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி, சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே உள்ள, திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அனைவரும் இணைந்தனர்.நிகழ்ச்சியில், முதல்வர் ஜெ.,பேசியதாவது:எத்தகைய நம்பிக்கையுடன், இக்கட்சியில் இணைய வந்துள்ளீர்களோ, ... |
| 11 மாடி மவுலிவாக்கம் கட்டடம் 10 நொடியில் தூள் : * இடிப்பு பணியை ஏற்றுள்ள நிறுவனம் தகவல் Posted: 28 Jun 2016 10:11 AM PDT சென்னை:'சென்னை, மவுலிவாக்கம், 'ஏ பிளாக்' கட்டடத்தை வெடி வைத்து தகர்க்கும் பணி, 10 நொடியில் முடிந்துவிடும்' என, இடிப்பு பணியில் ஈடுபடவுள்ள தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் பொன்லிங்கம் தெரிவித்தார். சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி குடியிருப்பு கட்டடம், 2014 ஜூன், 28ல் இடிந்து விழுந்ததில், 61 பேர் உயிரிழந்தனர். இந்த வளாகத்தில் எஞ்சியுள்ள, 'ஏ பிளாக்' கட்டடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இக்கட்டடத்தை இடிக்கலாம் என, மே, 12ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கட்டடத்தை வெடி வைத்து ... |
| கட்டம் கட்டப்படுகிறார் விஜயகாந்த்: நெருக்கடி கொடுக்கும் மா.செ.,க்கள் Posted: 28 Jun 2016 10:16 AM PDT 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் நிறைய செலவு செய்தும், இவர்கள் படுதோல்வி அடைந்தனர். இதனால், இவர்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமையும் பணம் கொடுக்கவில்லை. இதை தோல்விக்குப் பின், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தலைவர் விஜயகாந்த் ஆலோசனை ... |
| சுவாதி கொலை எதிரொலி: ஐகோர்ட் காட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்வி Posted: 28 Jun 2016 10:20 AM PDT சென்னை,:மென் பொறியாளர் சுவாதியின் கொடூர கொலையை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தது.சுவாதி கொலை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஜூன், ௨௭ம் தேதி அனுப்பிய கடிதம்:பட்டப்பகலில், ரயில் நிலையத்தில், ௨௪ம் தேதி காலையில், மென் ... |
| தி.மு.க.,வில் மேலும் 3 மா.செ., பதவி பறிப்பு கூட்டணி கட்சியினர் புகார் மீது நடவடிக்கை Posted: 28 Jun 2016 10:39 AM PDT சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, 'உள்ளடி' வேலை பார்த்த புகாரில் சிக்கிய, மாவட்ட செயலர்கள், மூன்று பேருடைய பதவிகளை தி.மு.க., தலைமை பறித்துள்ளது. துாத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் ராஜாராம், நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலர் குத்தாலம் கல்யாணம், நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட செயலர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை, பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது தி.மு.க., தலைமை.அவர்களுக்கு பதிலாக, முறையே சுப்பிரமணியன், நிவேதா முருகன், கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொது செயலர், அன்பழகன் நேற்று ... |
| 2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மெட்ரோ ரயில் Posted: 28 Jun 2016 10:48 AM PDT கடந்த ஆண்டில் இதே நாளில் தான், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. ஆலந்துார் - கோயம்பேடு இடையே முதல் ரயிலை, பிரீத்தி என்ற பெண் ஓட்டுனர் இயக்கினார். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து ஆலந்துார் மார்க்கமாக, பயணிகள் சேவை துவங்கியது. மின்சார ரயிலில் மட்டுமே பயணித்து பழகிப் போன பயணிகளுக்கு மெட்ரோ ரயில் புதிய அனுபவத்தை தந்தது. கட்டணம் சற்று அதிகம் என்கிற போதிலும், ரயில் முழுவதும், 'ஏசி' வசதி; பணத்தை செலுத்தினால் இயந்திரம் தரும் டிக்கெட்; ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு;பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா போன்ற நவீன வசதிகள் அதை மறக்க ... |
| சுகாதார வசதிகள் குறைவால் 12 லட்சம் குழந்தைகள் இறப்பு Posted: 28 Jun 2016 12:57 PM PDT புதுடில்லி : போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்ட, 12 லட்சம் குழந்தைகள், நோய்களுக்கு பலியானதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்து, யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: * சிகிக்சை அளிக்கக் கூடிய மற்றும் தடுக்கக் கூடிய நோய்களால், உலகெங்கும், கடந்த ஆண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட, 59 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தன * இதில், 50 சதவீதம், இந்தியா, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளில் நிகழ்ந்துள்ளது * ... |
| துருக்கி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு; 50 பேர் பலி Posted: 28 Jun 2016 01:47 PM PDT இஸ்தான்புல் : துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 50 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 29,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |