Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மவுசு! * இந்த ஆண்டு இ.சி.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு... * அண்ணா பல்கலையில் துவங்கியது இன்ஜி., பொது கவுன்சிலிங்

Posted: 27 Jun 2016 09:53 AM PDT

அண்ணா பல்கலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டில், இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள், இப்பிரிவுகள் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்தனர்.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 524 பொறியியல் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு, ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 1.31 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள நிலையில், ...

சுப்பிரமணியன் சாமிக்கு பிரதமர் மோடி... கண்டிப்பு ! கட்சியை விட யாரும் பெரியவர் அல்ல என்கிறார்

Posted: 27 Jun 2016 09:59 AM PDT

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்த கருத்துக்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அதிரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உள்ளார். ''சமீபத்திய சில விமர்சனங்கள் தேவையில்லாதவை; விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல; அரசு மற்றும் கட்சியை விட, யாரும் பெரியவர் அல்ல,'' என, அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான ...

ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புஉறுப்பினராக இந்தியா சேர்ந்தது

Posted: 27 Jun 2016 10:01 AM PDT

புதுடில்லி, :அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் வகையில் செயல்படும் இந்தியாவின் கொள்கைக்கு வலுவூட்டும் வகையில், எம்.டி.சி.ஆர்., எனப்படும், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பின், 35வது உறுப்பினராக, இந்தியா இணைந்துள்ளது.

ஏவுகணைகள், ராக்கெட்கள், ஆளில்லா விமானம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் தயாரிப்பதை கட்டுப்படுத்தவும், 500 கிலோ எடையுள்ள, 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய அணு ஆயுதம் மற்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத் தயாரிப்பை கட்டுப்படுத்தவும் அமைக்கப்பட்டது, இந்த அமைப்பு.இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள், மிகவும் ...

முதன் முறையாக பத்திரிகையாளரிடம் 'மன் கி பாத்!'

Posted: 27 Jun 2016 10:07 AM PDT

பிரதமராக பதவிக்கு வந்த நாள் முதல், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த நரேந்திர மோடி, தற்போது தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருப்பதன் மூலம், தன் அரசியல் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார். காரணம், குஜராத் மாநில முதல்வராக இருந்த காலம் முழுவதுமே, அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமலே பதவி வகித்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்று வந்திருக்கிறார்.

முதல்வர் பதவி ஆகட்டும், பின்னர் பிரதமர் பதவி ஆகட்டும், மோடி, பொதுஜன தொடர்பு சாதனங்களை சிறிதளவும் நம்பாமல், தனி ஒரு மனிதனாக போட்டி அரசியலில் குதித்து ...

சுவாதியை கொன்றவன் சுற்றிவளைப்பு! * வழக்கு விசாரணை சென்னை போலீசுக்கு மாற்றம்

Posted: 27 Jun 2016 10:18 AM PDT

சென்னை:மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளியை, சென்னை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். 'அவனை, இன்று கைது செய்து விடுவோம்' என, நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றிய இவர், மே மாதம் ஓய்வு பெற்றார். சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவில், குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.இவரது இளைய மகள் சுவாதி, 24, செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இம்மாதம், ...

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு அறிய பொதுமக்கள் ஆவல்:கருணாநிதி

Posted: 27 Jun 2016 10:43 AM PDT

சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவலாக உள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக 'லோக் ஆயுக்தா'வின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, 'பண பலமும், செல்வாக்கும் இருந்தால், எவரும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து விடலாம்' என, பொதுமக்கள் கருதுகின்றனர். அது தனக்கும் ...

மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :விஜயகாந்த் விசாரணை ஆரம்பம்

Posted: 27 Jun 2016 10:47 AM PDT

தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்களை சென்னைக்கு அழைத்து, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், இன்று விசாரணை நடத்தவுள்ளார்.

தே.மு.தி.க., தலைமையை விமர்சித்தும், அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் சொத்துகள் மற்றும் அறக்கட்டளை விவகாரங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில், ஒன்பது பக்க கடிதம் வெளியானது.இக்கட்சியைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்கள், இந்த கடிதத்தை எழுதியதாக, தகவல் பரவியது. இது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, 14 மாவட்ட செயலர்களையும் அழைத்து, இன்று விஜயகாந்த் விசாரணை நடத்த உள்ளார்.இந்நிலையில், கிருஷ்ணகிரி, ...

மின் வாரிய வேலைக்கு பண வசூல் 'ஜோர்' : அலட்சியத்தால் பட்டதாரிகள் ஏமாறும் அபாயம்

Posted: 27 Jun 2016 10:50 AM PDT

தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சிலர் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், 250 இளநிலை உதவியாளர் - கணக்கு; 25 ஸ்டெனோ; 100 'லேப் டெஸ்டர்;' 900 களப்பணி உதவியாளர்; 100 இளநிலை உதவியாளர் - நிர்வாகம்; 500 தொழில்நுட்ப உதவியாளர் - எலக்ட்ரிக்கல்; 25 தொழில்நுட்ப உதவியாளர் - மெக்கானிக்கல் என, காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான எழுத்து தேர்வு, ஆக., 27, 28ம் தேதிகளில் நடக்கிறது. ஏமாற வேண்டாம்இந்நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி, பட்டதாரிகளிடம் சிலர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மின் ...

மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? : பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்

Posted: 27 Jun 2016 10:56 AM PDT

'மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு உள்ளது என, டில்லியில் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேரடியாக அழைக்கப்பட்டார். விளக்கம்தமிழகத்தில் கல்வித்தரம் குறைய என்ன காரணம்; மத்திய அரசின் ...

'பிரிட்டனும் மஹாராஷ்டிராவும் ஒன்றே!': ராஜ் தாக்கரே ஆவேசம்

Posted: 27 Jun 2016 11:57 AM PDT

மும்பை : ''ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிரிட்டன், எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை போலவே, மஹாராஷ்டிரா மாநிலத்திலும், பிரச்னைகள் அதிகமாக உள்ளன,'' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம், அகதிகள் வருகை, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சமீபத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக, பிரிட்டன் மக்கள் கருத்து ஓட்டெடுப்பில் ஓட்டளித்திருந்தனர். இந்நிலையில், எம்.என்.எஸ்., எனப்படும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் நேற்று நடந்த ...

யதுவீர் - திரிஷிகா குமாரி திருமண கோலாகலம்

Posted: 27 Jun 2016 12:27 PM PDT

மைசூரு: மைசூரு யது வம்சத்தின் யதுவீருக்கும், ராஜஸ்தான் துர்கார்பூர் வம்சத்தின் திரிஷிகா குமாரிக்கும் நேற்று காலையில், மன்னர் குடும்ப சம்பிரதாய மரபுப்படி மந்திரங்கள் ஓத, திருமணம் நடந்தது.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் திருமண வைபவத்தை ஒட்டி, மைசூரு அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது. யதுவீரின் தத்து தாயாரும், மைசூரு மகாராணியுமான பிரமோதா தேவி திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்; விழாவின் போது ஆனந்த கண்ணீர் விட்டார்; தன் கணவரை நினைவுகூர்ந்தார்.
அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர் யதுவீர். மணமகளான திரிஷிகா, ...

ஆதாருக்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி

Posted: 27 Jun 2016 02:33 PM PDT

மும்பை : 'குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, 'ஆதார்' எண் விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா மாநில அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிரான மனுவை, மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ஆதார் எண்ணை கட்டாயம் கொடுக்க வேண்டும்' என, கடந்தாண்டு, மஹாராஷ்டிரா சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, சமூக சேவகர் ஒருவர், மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்; ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

Posted: 27 Jun 2016 03:46 PM PDT

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய நிதித் துறை செயலர் அசோக் லாவசா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™