Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


1.92 லட்சம் இடங்களுக்கான இன்ஜி., கவுன்சிலிங் துவக்கம் : கம்ப்யூட்டர் சயின்ஸ் முதல் இடமாக ஒதுக்கீடு

Posted: 24 Jun 2016 08:26 AM PDT

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள, 1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது.

முதல் மாணவி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்தார். தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள் அண்ணா பல்கலையின் இணைப் புடன் செயல்படுகின்றன. மொத்தம், 524 கல்லுாரிகள் இந்த முறை பி.இ., - பி.டெக்., அட்மிஷன் நடத்துகின்றன. இவற்றில், 13 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை.
விளையாட்டு பிரிவு : இந்த கல்லுாரிகளில், 65 சதவீதம் அரசு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக இடங்களாகவும் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், தலா, ...

மேட்டூரில் கண் ஆபரேஷன் செய்த 16 பேர் பார்வை 'அவுட்'பரிதாபம்! அரசு டாக்டர்கள் தவறா; கிருமி தொற்றா என தீவிர விசாரணை

Posted: 24 Jun 2016 11:02 AM PDT

மேட்டூர்:மேட்டூரில், அரசு தலைமை மருத்துவமனையில், கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்த, 16 பேருக்கு கண்களில் சீழ் பிடித்து பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. டாக்டர்களின் கவனக்குறைவா அல்லது கிருமி தொற்று காரணமா என்பது குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூரில், அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு உள்ளது. இந்த பிரிவில் ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.இம்மாதம், 14ம் தேதி, ஏழு பேர்; 15ம் தேதி, எட்டு பேர்; 16ம் தேதி, எட்டு பேர் என, மொத்தம், 23 பேருக்கு டாக்டர்கள் ராஜேந்திரன், ...

லடாக் வழியாக மானசரோவர் யாத்திரை: சீனாவிற்கு அத்வானி வலியுறுத்தல்

Posted: 24 Jun 2016 11:10 AM PDT

ஸ்ரீநகர்: இந்திய யாத்திரீகர்கள் லடாக் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல சீனா அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரின் லே பகுதியில் சிந்து தர்ஷன் என்ற விழாவை துவக்கி வைத்து பா.ஜ.மூத்த தலைவர் அத்வானி பேசியது, இந்திய யாத்திரீகர்கள் ஆண்டு தோறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை நேபாளம் வழியாக மேற்கொள்கின்றனர். இது அவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதற்கு பதிலாக லடாக் வழியாக யாத்திரை மேற்கொள்வது எளிதாக உள்ளது. எனவே இந்திய யாத்திரீகர்களின் சவுகரியத்தை கருத்தில் கொண்டு லடாக் வழியாக செல்ல சீனா ...

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன்... வெளியேறுகிறது : கருத்து ஓட்டெடுப்பில் மக்கள் ஆதரவு

Posted: 24 Jun 2016 12:08 PM PDT

லண்டன் : மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து ஓட்டெடுப்பில், அமோக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

கடந்த, 43 ஆண்டுகளாக, 28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய கூட்டமைப்பில், பிரிட்டனும் உறுப்பினராக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என, பிரிட்டனில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன; பல்வேறு அமைப்புகளும் இதை வலியுறுத்தி வந்தன.
மீண்டும் பிரதமரானால், மக்களின் கருத்தை கேட்கும் ...

என்.எஸ்.ஜி.,யில் இடம் கிடைக்காமல் இந்தியா ஏமாற்றம் : முடிவெடுக்காமல் முடிந்த சியோல் சிறப்பு கூட்டம்

Posted: 24 Jun 2016 12:09 PM PDT

சியோல் : என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில், இந்தியாவை உறுப்பினராக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள், தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும், என்.எஸ்.ஜி., அமைப்பில், 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு விண்ணப்பித்திருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
பாகிஸ்தானும் முயற்சி : அதே நேரத்தில் சீனா பிரதமர் ஜி ஜின்பிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், ...

47 ஆண்டு போராட்டத்துக்கு பின் தங்கப்பதக்கம் பெற்ற 'மாஜி' அதிகாரி

Posted: 24 Jun 2016 12:15 PM PDT

ஜெய்ப்பூர் : ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், ராஜஸ்தான் பல்கலையுடன், 47 ஆண்டுகள் போராடி, தனக்குரிய தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பிகானிரில் உள்ள ராஜஸ்தான் பல்கலையில், 1969ல் அப்பகுதியை சேர்ந்த, சிங்வி, 81, சட்டப்படிப்பை முடித்தார். இந்த தேர்வில், அவர் பல்கலை அளவில் இரண்டாமிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இதனை ஏற்காத சிங்வி, 'சட்ட படிப்புக்கான தேர்வில், பல்கலை அளவில் முதலிடம் பெறும் வகையில் தேர்வு எழுதிய நிலையில், இரண்டாமிடம் பெற்றதாக பல்கலை அறிவித்ததை ஏற்க ...

கூலிப்படை அட்டகாசத்தை அடக்க ஜெ.,வுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Posted: 24 Jun 2016 12:34 PM PDT

சென்னை:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னையில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நேற்று இரவு முதல் இதுவரை, ஆறு பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். இது, தாய்மார்களை நிலை குலையச் செய்துள்ளது.

கூலிப் படையினரின் அட்டகாசம் தொடர்பாக, தொடர்ந்து அறிக்கை விட்டு வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டசபையிலும் இது தொடர்பாக பேசினேன். ஆனால், என் குற்றச் சாட்டுக்கு நேரடியாக பதில்அளிக்காத முதல்வர் ஜெயலலிதா, முழுப் பூசணிக்காயை ஒரு பிடி ...

கருணாநிதிக்கு அமெரிக்க விருது!

Posted: 24 Jun 2016 12:52 PM PDT

சென்னை: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த, 'ரோச்சஸ்டன்' நிறுவனத்தின் சார்பில், 'தனிச் சிறப்பு மிக்க அரசியல் தலைவர்' என்ற விருது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும், உலகில் உள்ள சிறந்த சிந்த னையாளர்களுக்கும், அரசியல் கட்சிகளை நடத்தி வரும் மக்கள் தலைவர்களுக்கும், 'தனிச் சிறப்பு மிக்க அரசியல் தலைவர்' என்ற விருதை, அமெரிக்காவின் ரோச்சஸ்டன் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கானவிருதை, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்க, தேர்வு செய்துள்ளது.கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமெங்கும் உள்ள மக்களுக்கு ஊக்கம் ...

பிரிட்டன் முடிவால்...உருக்கு, வாகனம், மருந்து துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

Posted: 24 Jun 2016 01:31 PM PDT

புதுடில்லி:'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற உள்ளதால், அங்கு உருக்கு, வாகனம், மருந்து உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் நடைபெற்ற கருத்து ஓட்டெடுப்பின் முடிவு, நேற்று வெளியானது. அதில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற, பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக, பிரிட்டன் முடிவெடுத்து உள்ளது. இதனால், பிரிட்டனில் செயல்பட்டு வரும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, மதர்சன் சுமி ...

அதீத தாக்கம் தான் ஆனால் பாதிப்பலை நமக்கு!

Posted: 24 Jun 2016 01:55 PM PDT

ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற பொது ஓட்டெடுப்பின் முடிவு, உள்நாட்டு அரசியலிலும், உலக அளவில் பொருளாதார குறியீடுகளிலும், அதீத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக இந்திய பங்கு மற்றும் பணச் சந்தைகளிலும் இது எதிரொலிக்கிறது. என்றாலும், இரு நாட்டு பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், இது உதவலாம்.பிரிட்டன் மக்களின் இந்த முடிவு, எதிர்பார்க்காதது அல்ல; மாறாக, பொது ஓட்டெடுப்பிற்கான பிரசாரம் துவங்கிய நாளில் இருந்தே வெளிவந்த கருத்து கணிப்புகள், மாறி மாறி ஆதரவு- மற்றும் எதிர்ப்பு நிலைகளையே, தொடர்ந்து பிரதிபலித்து வந்துள்ளன. ...

சீனாவை புரட்டியெடுத்த பெருமழை: 98 பேர் பலி; 800 பேர் காயம்

Posted: 24 Jun 2016 02:06 PM PDT

பீஜிங் : சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, 18ம் தேதி முதல், பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில், நேற்று முன்தினம், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சில இடங்களில், மணிக்கு, 125 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. மழை, வெள்ளத்தில் சிக்கி, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் ...

சென்னை, கோவை நகரங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' பணி இன்று துவக்கம்

Posted: 24 Jun 2016 02:14 PM PDT

புதுடில்லி:சென்னை, கோவை உட்பட, 20நகரங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கி வைக்கப்படுகிறது.

நகர் பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்ட மாக, 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, 20 நகரங்களில், 1,770 கோடி ரூபாய் மதிப்பிலான, 82 திட்டங்களை பிரதமர்நரேந்திர மோடிதுவக்கி வைக்கிறார்.இந்த நகரங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான கட்டமைப்பு வசதிகள் ...

1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி

Posted: 24 Jun 2016 02:47 PM PDT

தமிழகத்தில் அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து, 95 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில், ஐ.டி., என்னும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில், ஏழு இடங்களில், 'எல்கோசெஸ்' எனப்படும் ஐ.டி., சார்ந்த சிறப்பு மண்டலங்களை, 'எல்காட்' எனப்படும் தமிழக மின்னணு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அவற்றில், பல நுாறு சாப்ட்வேர் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. சாப்ட்வேர் ஏற்றுமதியில், நாட்டில், தொடர்ந்து மூன்று இடங்களுக்குள், தமிழகம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™