Tamil News | Online Tamil News |
- வரி ஏய்ப்போர் அதிகரிப்பதை தடுக்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி!: பான் கார்டு, காஸ் மானியம் ரத்தாகும் என எச்சரிக்கை
- 30 ஆயிரம் பேருடன் பயிற்சி செய்து மோடி அசத்தல் : சர்வதேச யோகா தினத்தில் கோலாகலம்
- கேன்சரை உருவாக்கும் ரசாயன பொருட்களுக்கு... தடை : 'பிரெட், ஜாம், சாக்லேட்'களில் பயன்படுத்தப்பட்டவை- நமது சிறப்பு நிருபர் -
- மீத்தேன் திட்டம் அனுமதித்தது யார்? : தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
- 'வாசனுக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேன்': ஞானதேசிகன்
- மா.செ.,க்களை மாற்ற மறுப்பு : விஜயகாந்த் மீது கட்சியினர் கடுப்பு
- என் மீது வசை புராணம் பாடுவதை ஜெ., நிறுத்த வேண்டும்: கருணாநிதி
- செருப்பை விட கேவலமாக நடத்தினார்:சித்தராமையா மீது அம்பரிஷ் பாய்ச்சல்
- இந்தியாவுக்கு ஆதரவு கொடுங்கள் என்.எஸ்.ஜி., நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
- துப்பாக்கி கலாசாரத்துக்கு அமெரிக்காவில் தீர்வு எப்போது?
- சோனியா மருமகன் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
| Posted: 21 Jun 2016 10:48 AM PDT புதுடில்லி:வரி ஏய்ப்போர் அதிகரிப்பதை தடுக்க, கைது செய்தல், காவலில் வைத்தல், குற்றம் சாட்டப்பட்டோரின் முடக்கப்பட்ட சொத்துக் களை ஏலம் விடுதல் போன்ற சட்ட நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொள்ளும் படி, வருமான வரித்துறைக்கு,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் அட்டை, சமையல் காஸ் மானியம் போன்றவற்றை முடக்கும்படியும், வரித்துறையை வலியுறுத்தி உள்ளது.நாடு முழுவதும், வருமான வரியை முறையாக செலுத்தாதோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தபடி உள்ளது. வரி செலுத்தாமல் ஏய்ப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படாததே, இதற்கு காரணம் என, மத்திய அரசிடம் ... |
| 30 ஆயிரம் பேருடன் பயிற்சி செய்து மோடி அசத்தல் : சர்வதேச யோகா தினத்தில் கோலாகலம் Posted: 21 Jun 2016 11:17 AM PDT சண்டிகர்: இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில், சர்வதேச யோகா தினம், நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சண்டிகர் நகரில் நடந்த யோகா தினவிழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து, 30,000 பேர் யோகா பயிற்சிகளை செய்து அசத்தினர். பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக, ஐ.நா., சபை அறிவித்தது. கடந்தாண்டில், இந்தியா உட்பட பல நாடுகளில் யோகா தினம் சிறப்பாககொண்டாடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது ஆண்டாக, சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் நகரங்களிலும், யோகா தின நிகழ்ச்சிகளில் ... |
| Posted: 21 Jun 2016 11:20 AM PDT பிரெட் போன்ற பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும், 'பொட்டாசியம் புரோமேட்' மற்றும் ஜாம், சாக்லேட், பால் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், சைக்ளா மேட்' ஆகிய ரசாயன பொருட்கள், புற்றுநோயை உண்டாக்குவதாக ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உணவு பொருட்களில் கலப்படத்தை தடுக்க, நாட்டில் பல்வேறு சட்டங்கள் இருந்தன. இவை, பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இதை ஒழுங்குபடுத்தும் வகையில், 2006ல், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ... |
| மீத்தேன் திட்டம் அனுமதித்தது யார்? : தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் Posted: 21 Jun 2016 11:23 AM PDT சென்னை: ''மீத்தேன் திட்டத்துக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது; அனுமதி வழங்கவில்லை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார். சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: அ.தி.மு.க., - வெற்றிவேல்: மீத்தேன் திட்டத் துக்கு, தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கினர். ஆனால், அதை இப்போது தடுக்க, விவசாய சங்கப் பிரதிநிதிகளை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துள்ளார்.ஸ்டாலின்: மீத்தேன் திட்டத்துக்கு, தி.மு.க., ஆட்சி யில் அனுமதி வழங்கியதாக, தவறான தகவலை தொடர்ந்து சொல்லி வருகின்றனர். மீத்தேன் திட்டத்துக்கு, புரிந்துணர்வு ... |
| 'வாசனுக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேன்': ஞானதேசிகன் Posted: 21 Jun 2016 11:37 AM PDT மக்கள் நல கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றதால், அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. த.மா.கா., தலைவர் வாசன் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ளார். மற்றொரு மூத்த துணை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மீண்டும் காங்கிரசில் சேர்ந்து விட்டார். அக்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க தீவிரமாக உள்ளார்.கோஷ்டி அரசியல் இந் நிலையில், சென்னை யில் த.மா.கா., இளை ஞரணி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில்,பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த ... |
| மா.செ.,க்களை மாற்ற மறுப்பு : விஜயகாந்த் மீது கட்சியினர் கடுப்பு Posted: 21 Jun 2016 11:38 AM PDT சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களை சந்தித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக, சென்னையில் ஆலோ சனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்தே பெரும்பாலானவர்கள் குறை கூறினர். இதுமட்டுமின்றி, செயல்படாத நிர்வாகிகளை நீக்கினால் மட்டுமே, கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறினர். இந்த கோரிக்கையை, விஜயகாந்த் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப் ... |
| என் மீது வசை புராணம் பாடுவதை ஜெ., நிறுத்த வேண்டும்: கருணாநிதி Posted: 21 Jun 2016 11:38 AM PDT சென்னை: 'கச்சத்தீவு விவகாரத்தில், என்னை பற்றி வசைபுராணம் பாடுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'கச்சத்தீவு பிரச்னை என்பது, மற்றொரு நாட்டுடனான பிரச்னை.அதை மீட்கக் கூடிய அதிகாரம், மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வருக்கு அந்த அதிகாரம் இருந்திருந் தால், அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்' என்றார். அதைமறந்து, அல்லது மறைத்து விட்டு, இப்போது கச்சத்தீவை நான் தான் தாரை வார்த்தேன் என, சட்டசபையில் ... |
| செருப்பை விட கேவலமாக நடத்தினார்:சித்தராமையா மீது அம்பரிஷ் பாய்ச்சல் Posted: 21 Jun 2016 11:40 AM PDT பெங்களூரு:''கர்நாடக முதல்வர் சித்தராமையா வுக்கு மரியாதை தெரியவில்லை; செருப்பை விட கேவலமாக நடத்தினார்,'' என, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, காங்கிரசைச் சேர்ந்த அம்பரிஷ், காட்டமாக கூறினார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், நடிகர் அம்பரிஷ் உட்பட, 14 பேரை, அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இதையடுத்து அம்பரிஷ், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, தன் செயலர் மூலம், சட்ட சபை துணை சபாநாயகரிடம் அனுப்பினார்; ஆனால், அதை அவர் நிராகரித்தார்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் அம்பரிஷ் கூறியதாவது: ... |
| இந்தியாவுக்கு ஆதரவு கொடுங்கள் என்.எஸ்.ஜி., நாடுகளுக்கு அமெரிக்கா வலியுறுத்தல் Posted: 21 Jun 2016 11:55 AM PDT புதுடில்லி:என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா சேருவதற்கு ஆதரவு அளிக்கும்படி, அந்த அமைப்பில் உள்ள நாடுகளை, அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்கள், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும், என்.எஸ்.ஜி., யில் தற்போது, 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினராக சேர, இந்தியா விண்ணப்பம் அளித்துள்ளது.இந்த விண்ணப்பம் குறித்து, தென் கொரிய தலைநகர் சியோலில் நடக்கும், என்.எஸ்.ஜி., யின் ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டம்,நேற்று முன்தினம் ... |
| துப்பாக்கி கலாசாரத்துக்கு அமெரிக்காவில் தீர்வு எப்போது? Posted: 21 Jun 2016 12:06 PM PDT வாஷிங்டன் : பொதுமக்களிடம் துப்பாக்கி பயன்பாட்டை குறைக்கும் வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கும் நான்கு மசோதாக்களை, அமெரிக்க செனட் நிராகரித்து உள்ளது. அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில், இரவு விடுதியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 49 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, நான்கு மசோதாக்கள் உருவாக்கப்பட்டு, அமெரிக்க செனட்டின் ஒப்புதல் பெற முன்வைக்கப்பட்டன. பயங்கரவாத ... |
| சோனியா மருமகன் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் Posted: 21 Jun 2016 02:53 PM PDT பைகனூர்: ராஜஸ்தானில் காங். தலைவர் சோனியா மருமகன் வாத்ரா நிறுவனம் நிலமோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ராஜஸ்தானின் பைகனூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் பல்லாயிர கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2014-ம் ஆண்டு 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் காங்.தலைவர் சோனியா மருமகன் வாத்ராவிற்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனம் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்தது.இது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 22,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |