Tamil News | Online Tamil News |
- கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது என்ன?
- வரித் துறையினருக்கு மோடி 'அட்வைஸ்'
- குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் வருகிறது! சென்னை, கோவை, மதுரையில் ஆலை அமைகிறது
- 'அமெரிக்காவின் நட்பு நாடு அந்தஸ்து கிடைக்கும்'
- 'தினமலர்' இதழை பின்னுக்கு தள்ளிய சட்டசபை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியுமா
- நடிகர் ரஜினி பற்றி இணையதள செய்தியால் பரபரப்பு: நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தகவல்
- தாது மணல் விற்பனையை அரசே நடத்தும்: கவர்னர் உரையில் தகவல்
- கவர்னர் உரை வெற்று அறிக்கை கருணாநிதி விமர்சனம்
- தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம்
- தே.மு.தி.க.,வுக்கு ஓட்டு குறைந்தது ஏன்: நான்கு நாட்களாக தேடியும் விடையில்லை
- இந்தியாவில் வருடத்திற்கு 45 ஆயிரம் பிரசவ மரணங்கள்!
- கடல் வழி பயங்கரவாதம் பெரும் ஆபத்து: ராஜ்நாத் சிங்
- வீட்டிற்குள் புகுந்த ராட்சத பல்லி: வைரலாக பரவுது வீடியோ
| கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடுவது என்ன? Posted: 16 Jun 2016 08:39 AM PDT புதுடில்லி:இணைய தேடுபொறியான, 'கூகுள்' பயன்படுத்தும் இந்தியர்கள், சினிமா மற்றும் நடிகர், நடிகையரை பற்றிய விஷயங்களை தான், அதிகம் தேடுவதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும், கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை விற்பனை அதிகாரியான சப்னா சத்தா கூறியதாவது:கூகுளில் தகவல் தேடும் இந்தியர்களில், 10ல் ஒருவர், சினிமா, நடிகர், நடிகையர் தொடர்பான தகவல்களையே தேடுகிறார். இந்தியர்களின் இந்த ஆர்வத்துக்கு தீனிப்போடும் வகையில், உள்ளூர் திரைப்படங்கள், நடிகர்கள் உள்ளிட்டவிவரங்கள், கூகுளில் உடனடியாக சேர்க்கப்பட்டு வருகின்றன. ... |
| வரித் துறையினருக்கு மோடி 'அட்வைஸ்' Posted: 16 Jun 2016 08:41 AM PDT புதுடில்லி,:''இம்சை செய்வர் என்ற பயத்தை, மக்களிடம் இருந்து நீக்கம் வகையில், வரித் துறையினர் செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். நேரடி மற்றும் மறைமுக வரித் துறைகளின் ஆண்டு கூட்டம், டில்லியில் நடந்தது; இதில், பிரதமர் மோடி பேசியதாவது:மக்கள் மனதில் உள்ள பயத்தை நீக்கும்வகையில், வரித் துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும். மென்மையாக வும், நிதான மாகவும் நடந்து கொள்ள வேண்டும்.வரி விதிப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். வரி விதிப்புகளின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவை சுலபமாகவும், வெளிப் படையாகவும் ... |
| குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் வருகிறது! சென்னை, கோவை, மதுரையில் ஆலை அமைகிறது Posted: 16 Jun 2016 09:47 AM PDT 'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்த, மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை உட்பட, நாடு முழுவதும், 95 இடங்களில், இந்த உரத் தயாரிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்காக உரத் தயாரிப்பு நிறுவன ங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பிரச்னை, குப்பை கழிவுகள் அதிகம் சேருவது தான். இந்த குப்பை கழிவுகளை, குறிப்பிட்ட பகுதிகளில் கொட்டி வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.இந்தப் பிரச்னைக்கு ... |
| 'அமெரிக்காவின் நட்பு நாடு அந்தஸ்து கிடைக்கும்' Posted: 16 Jun 2016 09:51 AM PDT புதுடில்லி,:'அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற அந்தஸ்தை, இந்தியாவுக்கு அளிக்கும் தீர்மானம், அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்படவில்லை; இருப்பினும், இந்த சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது' என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.கூட்டறிக்கை: சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை யில், 'அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற சிறப்பு அந்தஸ்து, இந்தியாவுக்கு அளிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அதை ... |
| 'தினமலர்' இதழை பின்னுக்கு தள்ளிய சட்டசபை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியுமா Posted: 16 Jun 2016 10:33 AM PDT சென்னை,:தமிழக சட்டசபையில், 'தினமலர்' நாளிதழுக்கு ஒதுக்கப்பட்ட, நான்காவது இருக்கை திடீரென மாற்றப்பட்டு, 54வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியுமா அல்லது சட்டசபை செயலர் ஜமாலுதீனே இந்த மாற்றத்தை செய்துள்ளாரா என்பது தெரியவில்லை. சட்டசபையில், பாரம்பரியமான பத்திரிகை களுக்கு தரை தளத்திலும், புதிய பத்திரிகை மற்றும், 'டிவி' சேனல்களுக்கு, மாடத்திலும் இடம் ஒதுக்கப்படுவது வழக்கம். இதுவரை சபாநாயகர் இருக்கைக்கு பக்கவாட்டில், 'இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 'தினமணி' நாளிதழ்களுக்கு அடுத்தபடியாக, தினமலர்' ... |
| நடிகர் ரஜினி பற்றி இணையதள செய்தியால் பரபரப்பு: நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தகவல் Posted: 16 Jun 2016 10:42 AM PDT நடிகர் ரஜினியின் உடல் நலம் குறித்து, இலங்கை தமிழ் இணையதளம் ஒன்று, வெளியிட்ட தவறான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. 'ரஜினி நலமாக இருக்கிறார்; அவரது உடல் நிலை குறித்த உறுதிப்படுத்தாத எந்த தகவலையும், யாரும் நம்ப வேண்டாம்' என, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூறியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், கபாலி படப்பிடிப்பை முடித்து, சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு, ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். 10 நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் தங்காத ரஜினி, இந்த முறை அதிக நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அங்கு ஓய்வில் இருப்பதுடன், இயக்குனர் சங்கரின், 2.0 பட வேலையிலும் ... |
| தாது மணல் விற்பனையை அரசே நடத்தும்: கவர்னர் உரையில் தகவல் Posted: 16 Jun 2016 11:29 AM PDT சென்னை:''மாநில அரசுக்கான நிதி ஆதாரங்களை பெருக்க, புதிய கிரானைட் கொள்கை வகுக்கவும்; தாது மணல் விற்பனையை, அரசே நேரடியாக ஏற்று நடத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்தார். தமிழக சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது:* தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' அமைப்பு ஏற்படுத்தப்படும்.* மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும், தமிழை அறிவிக்க, அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.* ஜல்லிக்கட்டு மீதான தடையை அகற்ற, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.* முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 152 ... |
| கவர்னர் உரை வெற்று அறிக்கை கருணாநிதி விமர்சனம் Posted: 16 Jun 2016 11:34 AM PDT சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல திட்டங்களின் செயலாக்கத்திற்கான அறிவிப்புகள், கவர்னர் உரையில் இடம் பெறும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளில், முதல்வர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத உரையாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, முல்லைப் பெரியாறு, நதி நீர் இணைப்பு, ... |
| தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம் Posted: 16 Jun 2016 11:34 AM PDT புதுடில்லி : ஒரே டிக்கெட்டில், தென் மாநிலங்களில் உள்ளபிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்கும் வகையிலான புதிய ரயில் சேவை, விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில், 'சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதிய ரயில்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி,இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யுடன் இணைந்து, முதல் முறையாக, தென் மாநிலங்களில் உள்ள திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், நடுத்தர மற்றும் சொகுசு வசதி உடைய ரயில் இயக்கப்பட உள்ளது. என்னென்ன ... |
| தே.மு.தி.க.,வுக்கு ஓட்டு குறைந்தது ஏன்: நான்கு நாட்களாக தேடியும் விடையில்லை Posted: 16 Jun 2016 11:54 AM PDT நான்கு நாட்களாக ஆலோசித்தும், தே.மு.தி.க., வுக்கு ஓட்டு குறைந்ததற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல், விஜயகாந்த் திணறி வருகிறார். சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட வாரியாக, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, வட்ட அளவிலான கீழ்மட்ட நிர்வாகிகளை சந்தித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார். நான்கு நாட்களாக, இந்த ஆலோசனை நீடித்து வருகிறது; வரும், 20ம் தேதி வரையும் தொடர உள்ளது.நேற்று தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை ... |
| இந்தியாவில் வருடத்திற்கு 45 ஆயிரம் பிரசவ மரணங்கள்! Posted: 16 Jun 2016 01:05 PM PDT
புதுடில்லி : இந்தியாவில் வருடத்திற்கு 45 ஆயிரம் பிரசவ மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததாவது: இந்தியாவில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பெண்களில் 174 பேர் மரணமடைகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 5 பெண்கள் உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு 45 ஆயிரம் பேர் பிரசவத்தின் போது மரணமடைகின்றனர். இது உலக அளவில் ஏற்படும் பிரசவ மரணத்தில் 17% பேர். இந்தியாவில் பிரசவ மரணங்கள் அதிகம் நிகழ்வதற்கு, பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு ஏற்படும் அதிகளவிலான ரத்தக் ... |
| கடல் வழி பயங்கரவாதம் பெரும் ஆபத்து: ராஜ்நாத் சிங் Posted: 16 Jun 2016 02:44 PM PDT
மும்பை : கடல்வழி பயங்கரவாதம் நாட்டுக்கே மிகப்பெரும் ஆபத்து என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடலோர பாதுகாப்பு குறித்து மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மும்பையில், 2008ல், கடல் வழியாக வந்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், கடல் வழி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். கடல் வழி பயங்கரவாதம், மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது; பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உலக நாடுகள், இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன; இந்தியாவும், ... |
| வீட்டிற்குள் புகுந்த ராட்சத பல்லி: வைரலாக பரவுது வீடியோ Posted: 16 Jun 2016 03:38 PM PDT பாங்காங்க்: தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த ராட்சத பல்லியால் பரபரப்பு ஏற்பட்டது. இக்காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தில் கிராமபகுதியில் அட்டானி தையாங்ஹோங் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பினார்.அபு்போது வீட்டின் முன்பக்க கதவினை முட்டிகொண்டு ராட்சத பல்லி நின்றதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். தகவலறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராட்சத பல்லியை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த செல்போனில் படம் எடுத்தனர். காட்ஸில்லா என்ற ஆங்கில ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 17,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |