Tamil News | Online Tamil News |
- * மின் வாரியத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை ரூ.285 கோடி!... * வசூலிப்பது எப்படி என தெரியாமல் மின் வாரியம் திணறல்
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம்... இணையுமா? கடைசி ரேஷன் ஒதுக்கீட்டை அளித்தது மத்திய அரசு
- காங்., தலைவராகிறார் ராகுல்? பொறுப்பை ஒப்படைக்க சோனியா விருப்பம்
- சொத்துக்கள் குவிப்பது குற்றமல்ல : ஜெ., வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
- கடிதம் எழுதினால் மட்டும் போதாது :ஜெ.,வுக்கு கருணாநிதி 'அட்வைஸ்'
- உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரம் : கலெக்டர்களுடன் விரைவில் ஆலோசனை
- ஐவர் அணிக்கு முதல்வர் ஜெ., கல்தா : ஆய்வு கூட்டத்தில் துறை அமைச்சர் மட்டும் பங்கேற்பு
- 'லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை திருப்பிக்கொடு!': சார் - பதிவாளருக்கு பொறியாளர் 'நோட்டீஸ்'
- வக்கீல்களின் சங்கமமாகும் ராஜ்யசபா விவாதங்களில் அனல் பறக்குமா?
- கேதார்நாத்துக்கு மீண்டும் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை
| Posted: 01 Jun 2016 09:37 AM PDT தமிழக மின் வாரியத்திற்கு மின் கட்டண வகையில் உள்ளாட்சி அமைப்புகள் 285 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்துள்ளன. ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் மின் வாரியம் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து இந்த தொகையை எப்படி வசூலிப்பது என தெரியாமல் திணறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம், தெரு விளக்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு, சமூக நலக்கூடம், அங்கன்வாடி மையம் போன்றவற்றிற்கு, தமிழ்நாடு மின் வாரியம் சார்பில், மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்த, ... |
| தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழகம்... இணையுமா? கடைசி ரேஷன் ஒதுக்கீட்டை அளித்தது மத்திய அரசு Posted: 01 Jun 2016 09:41 AM PDT நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு பலனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேராத தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு, கடைசி வாய்ப்பாக ரேஷன் ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013ல் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்களுக்கு, அரிசி கிலோ, 3 ரூபாய்; கோதுமை கிலோ, 2 ரூபாய் என, தலா, 5 கிலோ வீதம் வழங்கப்படும்.முதலில் இத்திட்டத்தில் சேர, மாநில அரசுகள் தயக்கம் காட்டினாலும் தற்போது, 33 மாநிலங்கள் ... |
| காங்., தலைவராகிறார் ராகுல்? பொறுப்பை ஒப்படைக்க சோனியா விருப்பம் Posted: 01 Jun 2016 09:44 AM PDT புதுடில்லி,:காங்கிரசின் தலைமை பொறுப்பை, மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக, அக்கட்சி தலைவர் சோனியா கூறியுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில், புதுச்சேரி தவிர, பிற மாநிலங்களில், காங்., படுதோல்வி அடைந்தது. பெரும்பாலான மாநிலங்களில், காங்., வலிமையின்றி காணப்படுகிறது. இதையடுத்து, காங்., தலைமை பொறுப்பில் மாற்றம் செய்ய வேண்டியது குறித்து, மூத்த தலைவர்கள் பேச துவங்கி உள்ளனர். சமீபத்தில், காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் பேசுகையில், 'காங்கிரசில், அறுவை சிகிச்சை ... |
| சொத்துக்கள் குவிப்பது குற்றமல்ல : ஜெ., வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து Posted: 01 Jun 2016 09:47 AM PDT புதுடில்லி:'வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துக்கள், சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத்தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே, அது குற்றமாகிறது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், பினாகி ... |
| கடிதம் எழுதினால் மட்டும் போதாது :ஜெ.,வுக்கு கருணாநிதி 'அட்வைஸ்' Posted: 01 Jun 2016 09:49 AM PDT சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:இலங்கையில், எத்தனை ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், நம் மீனவர்கள் பிரச்னைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படாது போல உள்ளது. 45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே, தமிழக மீனவர்கள் ஏழு பேர், இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் பலர், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைத் தாக்கி, விரட்டி அடித்ததுடன், சேசு இருதயம்என்பவரின் விசைப் படகையும், அதிலிருந்த ராமேஸ்வரம் ... |
| உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரம் : கலெக்டர்களுடன் விரைவில் ஆலோசனை Posted: 01 Jun 2016 09:50 AM PDT உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தவுள்ளார்.தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மேயர்கள், துணை மேயர்கள், தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதவிக்காலம், அக்., மாதத்துடன் முடிகிறது. 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 458பதவிகளுக்கு நேரடியாகவும், 14,020 பதவிகளுக்கு மறைமுகமாகவும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளை, தமிழக தேர்தல் ஆணையம் ... |
| ஐவர் அணிக்கு முதல்வர் ஜெ., கல்தா : ஆய்வு கூட்டத்தில் துறை அமைச்சர் மட்டும் பங்கேற்பு Posted: 01 Jun 2016 09:51 AM PDT முதல்வரின் ஆய்வுக் கூட்டத்திற்கு, மூத்த அமைச்சர்கள் அழைக்கப்படாமல், துறை அமைச்சர் மட்டும் அழைக்கப்படுவது, அதிகாரிகள் மட்டத்திலும், அ.தி.மு.க.,விலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011 முதல், 2016 வரை, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய, ஐவர் அணிக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.முதல்வர் தலைமையில் நடைபெறும், முக்கிய ஆலோசனை கூட்டங்களில், துறை அமைச்சர்களுடன், ஐவர் அணி அமைச்சர்களும் பங்கேற்பது வழக்கம். முதல்வரும், ஐவர் அணியுடன் ... |
| 'லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை திருப்பிக்கொடு!': சார் - பதிவாளருக்கு பொறியாளர் 'நோட்டீஸ்' Posted: 01 Jun 2016 09:53 AM PDT 'சொத்து பத்திரத்தை பதிவு செய்து கொடுக்க, ஏழு மாதங்கள் அலைக்கழித்ததால், லஞ்சமாக வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும்' எனக்கேட்டு, திருத்தணி சார் - பதிவாளருக்கு, சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் வழக்கறிஞர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் சாப்ட்வேர் பொறியாளர் செந்தில்குமார். இவர், திருத்தணி மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் உள்ள குடும்ப சொத்தை பத்திரப்பதிவு செய்ய, 2015 ஆக., 26ல் திருத்தணி சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். இதற்கான பத்திரங்களை ... |
| வக்கீல்களின் சங்கமமாகும் ராஜ்யசபா விவாதங்களில் அனல் பறக்குமா? Posted: 01 Jun 2016 10:51 AM PDT சுப்ரீம் கோர்ட்டில், முக்கிய வழக்குகளில் வழக்கறிஞர்களாக ஆஜராகி வரும், சட்டத்துறை பிரபலங்கள் பலரும், ஒரேநேரத்தில் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த பிரபலங்களின் வாத, பிரதிவாதங்களால் ராஜ்யசபாவில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்குள் மட்டும் ராஜ்யசபாவில் தற்போதுள்ள எம்.பி.,க்களில், 15 மாநிலங்களைச் சேர்ந்த, 55 பேர் ஓய்வு பெறுகின்றனர். இந்த காலியிடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்சிகளில் இருந்தும், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.பல்வேறு கட்சிகள் சார்பில், தற்போது ... |
| கேதார்நாத்துக்கு மீண்டும் ஆபத்து? நிபுணர்கள் எச்சரிக்கை Posted: 01 Jun 2016 01:17 PM PDT டேராடூன்: 'உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு, பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மீண்டும் ஆபத்து ஏற்படும்' என, தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரிஷ் ராவத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் ரிஷிகேஷ், ஹரித்வார், ருத்ர பிரயாக் உள்ளிட்ட, ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த தலங்களை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த, 2013, ஜூன் மாதம், உத்தரகண்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |