Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கல்வி பெற உதவியமைக்கு நன்றி...!முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இளைஞர், மாணவி
- நெய்வேலியில் ஜூலை 1-இல் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
- சுவாதி கொலை வழக்கில் 8 தனிப்படைகள்:காவல் ஆணையர் பேட்டி
- பொதுமக்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம்:மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
- இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
- அருணாசலப் பிரதேச ஆளுநர் கோவையில் சிகிச்சைக்கு அனுமதி
- காலமானார் :நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள்
- வினுப்ரியாவின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் தர்னா:எஸ்.பி. சமரசத்துக்குப் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு
- மதுரையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனையால் பரபரப்பு
- ஆசிட் வீச்சு வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனை உறுதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
- தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்: மத்திய தொல்லியல்துறை மீண்டும் ஆய்வு
- இளங்கோவன் சகோதரர் உள்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர்
- மிதமான மழை நீடிக்கும்
- தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 528 குறைந்தது
- 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பம்:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
- ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது
- 16 பேருக்கு பார்வை பாதிப்பு சம்பவம்: விரைவில் ஆய்வு முடிவு வெளியீடு
- மு.க.ஸ்டாலினுடன் வி.சி.சந்திரகுமார் சந்திப்பு
- காவல் துறை வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
- குடவாசல், நன்னிலம் ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணி
- கரூரில் கட்டுமான தொழிலாளி கொலை
- சாலை விபத்தில் தொழிலாளி சாவு
- மாவட்டத்தில் 25,000 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்ய திட்டம்
- குடந்தை அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
- தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி குழந்தை சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்
- நகைக் கடை உரிமையாளர் வீட்டில் 28 பவுன் நகைகளை திருடிய கார் ஓட்டுநர், ஊழியர் கைது
- இருசக்கர வாகனம் மோதி விவசாயி சாவு
- கால்நடை பண்ணை கதவைப் பூட்டி மக்கள் போராட்டம்
- சாலை விபத்தில் முதியவர் சாவு
- சாஸ்த்ரா பல்கலை.யில் ஜூலை 2-ல் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
- பட்டுக்கோட்டையில் போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி சாவு
- அதிராம்பட்டினத்தில் தன்னிறைவு திட்டத்தில் கட்டப்படும் மழைநீர் வடிகால் வாய்க்கால்
- ரூ.18.50 லட்சம் முஸ்லிம்களுக்கு கடனுதவி
- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: 3 பேர் புகார்
- உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் கட்சியை வலுவாக்கவே முன்னுரிமை: வாசன்
- ஆவுடையார்கோவில் ஆனித்திருமஞ்சன பெருவிழா நாளை தொடக்கம்
- கூட்டணி சேர்ந்தது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
- அழகியநாச்சியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
- பறவை வளர்க்கும் செவிலியருக்கு பாராட்டு
- மேலைச்சிவபுரி கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
- "இளைஞர் சக்தியின் ஆரோக்கியமே நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும்'
- பட்டா கோரி மனு
- தக்காளி இலைச்சுருள் நச்சுயிரியை அழிக்க யோசனை
- நபார்டு மூலம் 3 மீனவக் கிராமங்களின் கரைகளை ஆழப்படுத்த ரூ. 4.50 கோடியில் திட்ட மதிப்பீடு
- மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம்
- திருச்சி பெல் நிறுவனத்தில் தேர்தல்; 6 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம்: முதன்மை சங்கமாக தொ.மு.ச. தேர்வு
- உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: ஆட்சியர் தகவல்
- துவரங்குறிச்சி அருகே டிராக்டர் மீது பேருந்து மோதி ஓட்டுநர் சாவு
- குடிநீர் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி
- பேராசிரியர்களுக்குப் பயிற்சி
- வாங்கப்பாளையத்தில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்ட இடம் தேர்வு
- சின்னதாராபுரத்தில் சிறப்பு முகாம்
- இளைஞர் தற்கொலை
- சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை
- பரணி வித்யாலயா பள்ளி மாணவிக்கு விருது
- பாம்பு கடித்து தொழிலாளி சாவு
- கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல நடைபாதை வேண்டும்
- தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளது : வைகோ
- அரசின் திட்டங்களைப் பொதுமக்கள் நன்கு அறிந்து பயன் பெற வேண்டும்
- குரும்பலூரில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி
- அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குடிநீர் பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி
- ஜயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு
- பெரம்பலூரில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- சிலையை மறைத்து வைக்கப்படும் பதாகைகளை அகற்ற வலியுறுத்தல்
- கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது
- மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழிப் பயிற்சி
- தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஜூலை 4 முதல் கலந்தாய்வு
- ராமநாதபுரம் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஜூலை 2 இல் ஆடித் திருவிழா தொடக்கம்
- காரைக்குடியில் நகராட்சி வாகனக் காப்பகங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க உறுதி
- காய்கறிகள் சாகுபடியுடன் தேனீ வளர்க்கும் விவசாயி: இரண்டு வருமானம் கிடைப்பதாக ஆட்சியரிடம் தகவல்
- காரைக்குடியில் தி.க. பொதுக்கூட்டம்
- நியமனக் குழு கூட்டம் ஒத்திவைப்பு
- ராமநாதபுரத்தில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா
- விசாலயன்கோட்டை கிராம விவசாயிகள் சங்க ஆண்டு விழா
- பைக் கவிழ்ந்து முதியவர் சாவு
- குரும்பூரில் அரசுப் பேருந்து-பைக் மோதல்: இரு இளைஞர்கள் காயம்
- கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை
- மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் தில்லி பயணம்
- கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை: பரமக்குடி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்
- சாயல்குடி அருகே பிரபல ரௌடி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை
- சாத்தனூரில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
- சிவகங்கையில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடிநீர் எடுக்கச் சென்றவர் சாவு
- பரமக்குடி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
- வட்ட சட்டப் பணிகள் பயிற்சி முகாம்
- இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 13 பேருக்கு மீண்டும் சிறைக்காவல் நீட்டிப்பு
- இலங்கை சிறையிலுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் நிவாரணம் கோரி மனு
- நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு
- இலங்கை அகதிகள் மீது போலீஸார் தாக்குதலை கண்டித்து மானாமதுரையில் போராட்டம்
- ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஜூலை 5 இல் ஆனித் திருவிழா தொடக்கம்
- சாத்தூர் பகுதியில் வாறுகாலை சுத்தம் செய்ய வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
- ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கக் கூட்டம்
- போலி நகை, ஆவணத்தை வைத்து ரூ. 50.55 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது
- அருப்புக்கோட்டையில் சிறப்பு துப்புரவுப் பணி: நகராட்சித் தலைவர் வேண்டுகோள்
- நரிக்குடியில் சோலார் பேனல்கள் திருட்டு
- விருதுநகர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- விருதுநகரில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி
- விடுதலைச் சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம்
| கல்வி பெற உதவியமைக்கு நன்றி...!முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இளைஞர், மாணவி Posted: 28 Jun 2016 02:50 PM PDT கல்விச் செலவு உள்பட அனைத்து உதவிகளைச் செய்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெறக் காரணமான முதல்வர் ஜெயலலிதாவை இளைஞர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதேபோல், மருத்துவப் படிப்பில் சேர நிதியுதவியை பெற்ற மாணவியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். |
| நெய்வேலியில் ஜூலை 1-இல் புத்தகக் கண்காட்சி தொடக்கம் Posted: 28 Jun 2016 02:49 PM PDT நெய்வேலியில் நடைபெற உள்ள 19ஆவது புத்தகக் கண்காட்சியை, புதுச்சேரி மாநில தலைமைச் செயலர் மனோஜ் பரிதா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். |
| சுவாதி கொலை வழக்கில் 8 தனிப்படைகள்:காவல் ஆணையர் பேட்டி Posted: 28 Jun 2016 02:49 PM PDT பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் விசாரணை நடத்த 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் தே.க.ராஜேந்திரன் கூறினார். |
| பொதுமக்களின் பாதுகாப்புக்கு புதிய சட்டம்:மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி Posted: 28 Jun 2016 02:48 PM PDT ஆந்திர மாநிலத்தைப் போன்று, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் Posted: 28 Jun 2016 02:47 PM PDT இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| அருணாசலப் பிரதேச ஆளுநர் கோவையில் சிகிச்சைக்கு அனுமதி Posted: 28 Jun 2016 02:46 PM PDT அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். |
| காலமானார் :நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் Posted: 28 Jun 2016 02:46 PM PDT சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.சி. ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் (69), சென்னையில் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2016 02:45 PM PDT சேலத்தில் முகநூலில் ஆபாசமாகப் படத்தை வெளியிட்டது தொடர்பாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மாவட்ட எஸ்.பி. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டனர். பெற்றோரிடம் வினுப்ரியாவின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. |
| மதுரையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனையால் பரபரப்பு Posted: 28 Jun 2016 02:44 PM PDT மதுரையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டது. பள்ளிகள் முன் பெற்றோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஆசிட் வீச்சு வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனை உறுதி : உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 28 Jun 2016 02:44 PM PDT ஆசிட் வீச்சில் உயிரிழந்த இளம்பெண் வினோதினி வழக்கில், குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்: மத்திய தொல்லியல்துறை மீண்டும் ஆய்வு Posted: 28 Jun 2016 02:43 PM PDT சென்னை ஆழ்வார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல்துறையினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆய்வு செய்தனர். |
| இளங்கோவன் சகோதரர் உள்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர் Posted: 28 Jun 2016 02:42 PM PDT ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உள்பட 11,967 பேர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான நிகழ்ச்சி நடை |
| Posted: 28 Jun 2016 02:42 PM PDT தமிழகத்தில் மிதமான மழை மேலும் ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும். |
| தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 528 குறைந்தது Posted: 28 Jun 2016 02:42 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 528 குறைந்து விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 குறைந்துள்ளது. |
| 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பம்:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு Posted: 28 Jun 2016 02:41 PM PDT நிகழ் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 272 பணியிடங்களுக்கானப் போட்டித் தேர்வு விண்ணப்பங்கள் ஜூலை 15-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. |
| ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது Posted: 28 Jun 2016 02:41 PM PDT வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை அது சார்ந்த பிற வங்கிகளுடன் இணைப்பதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் |
| 16 பேருக்கு பார்வை பாதிப்பு சம்பவம்: விரைவில் ஆய்வு முடிவு வெளியீடு Posted: 28 Jun 2016 02:41 PM PDT சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 16 பேரின் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு சில நாள்களில் வெளியாகும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். |
| மு.க.ஸ்டாலினுடன் வி.சி.சந்திரகுமார் சந்திப்பு Posted: 28 Jun 2016 02:40 PM PDT திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் வி.சி.சந்திரகுமார் சந்தித்தார். |
| காவல் துறை வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் Posted: 28 Jun 2016 02:40 PM PDT சென்னையில் காவல் துறை வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதியாக தலா ரூ.1 லட்சத்தை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார். |
| குடவாசல், நன்னிலம் ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணி Posted: 28 Jun 2016 02:26 PM PDT குடவாசல், நன்னிலம் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார். |
| கரூரில் கட்டுமான தொழிலாளி கொலை Posted: 28 Jun 2016 02:26 PM PDT கரூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளியைக் குத்திக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 28 Jun 2016 02:25 PM PDT பாபநாசம் அருகே இனாம்கிளியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் இளையராஜா (28), விவசாய தொழிலாளி. |
| மாவட்டத்தில் 25,000 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்ய திட்டம் Posted: 28 Jun 2016 02:25 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 25,000 இடங்களில் குடிநீர் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| குடந்தை அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு Posted: 28 Jun 2016 02:24 PM PDT கும்பகோணம் அருகே பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி குழந்தை சடலத்துடன் உறவினர்கள் போராட்டம் Posted: 28 Jun 2016 02:24 PM PDT தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் குழந்தை சடலத்துடன் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். |
| நகைக் கடை உரிமையாளர் வீட்டில் 28 பவுன் நகைகளை திருடிய கார் ஓட்டுநர், ஊழியர் கைது Posted: 28 Jun 2016 02:24 PM PDT கும்பகோணத்தில் நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருடியதாக அவரின் கார் ஓட்டுநர், ஊழியர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து நகையை மீட்டனர். |
| இருசக்கர வாகனம் மோதி விவசாயி சாவு Posted: 28 Jun 2016 02:23 PM PDT கும்பகோணம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதியில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| கால்நடை பண்ணை கதவைப் பூட்டி மக்கள் போராட்டம் Posted: 28 Jun 2016 02:23 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள நடுவூர் மாவட்ட கால்நடை பண்ணையில் 157 எருமை மாடுகள், 32 பசுமாடுகள் என மொத்தம் 189 மாடுகள் உள்ளன. |
| Posted: 28 Jun 2016 02:22 PM PDT தஞ்சாவூர் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| சாஸ்த்ரா பல்கலை.யில் ஜூலை 2-ல் வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி Posted: 28 Jun 2016 02:22 PM PDT தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 2-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| பட்டுக்கோட்டையில் போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது Posted: 28 Jun 2016 02:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி 76 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டார். |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி சாவு Posted: 28 Jun 2016 02:21 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். |
| அதிராம்பட்டினத்தில் தன்னிறைவு திட்டத்தில் கட்டப்படும் மழைநீர் வடிகால் வாய்க்கால் Posted: 28 Jun 2016 02:21 PM PDT கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் அடிப்படைத் தேவைகளை அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் நிறைவு செய்து கொள்வதற்காக அரசு தன்னிறைவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| ரூ.18.50 லட்சம் முஸ்லிம்களுக்கு கடனுதவி Posted: 28 Jun 2016 02:20 PM PDT அறந்தாங்கியில் 321 முஸ்லிம் பயனாளிகளுக்கு ரூ. 18.48 லட்சத்தில் செவ்வாய்க்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது. |
| வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: 3 பேர் புகார் Posted: 28 Jun 2016 02:20 PM PDT வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ. 16 லட்சம் வரை பணத்தை மோசடி செய்தவரைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தர வேண்டுமெனக் கோரி மாவட்ட காவல் துறையிடம் 3 பேர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். |
| உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் கட்சியை வலுவாக்கவே முன்னுரிமை: வாசன் Posted: 28 Jun 2016 02:19 PM PDT உள்ளாட்சித் தேர்தலில் வெல்லும் வகையில் கட்சியை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். |
| ஆவுடையார்கோவில் ஆனித்திருமஞ்சன பெருவிழா நாளை தொடக்கம் Posted: 28 Jun 2016 02:19 PM PDT அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா வரும் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| கூட்டணி சேர்ந்தது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம் Posted: 28 Jun 2016 02:18 PM PDT கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தைப் பாதுகாக்க வேறு வழியின்றி மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தோம் என்றார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன். |
| அழகியநாச்சியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு Posted: 28 Jun 2016 02:18 PM PDT பொன்னமராவதி அழகிய நாச்சிம்மன் கோயிலில் திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி காலபைரவருக்கு கும்பபூஜை, யாகவேள்வி, மகாபூர்ணாஹுதி செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை குழுவினர் செய்தனர். |
| பறவை வளர்க்கும் செவிலியருக்கு பாராட்டு Posted: 28 Jun 2016 02:17 PM PDT புதுக்கோட்டையில் பறவைகளை வளர்த்துவரும் செவிலியருக்கு பிரம்மகுமாரிகள் சங்கம் சார்பில் பாராட்டி சான்றளிக்கப்பட்டது. |
| மேலைச்சிவபுரி கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் Posted: 28 Jun 2016 02:17 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| "இளைஞர் சக்தியின் ஆரோக்கியமே நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும்' Posted: 28 Jun 2016 02:17 PM PDT இளைஞர் சக்தியின் ஆரோக்கியமே நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் என்றார் நமனசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ஏ. அழகம்மை. |
| Posted: 28 Jun 2016 02:16 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி, அப்பகுதியில் வசித்து வந்த ஆதிதிராவிட இன மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| தக்காளி இலைச்சுருள் நச்சுயிரியை அழிக்க யோசனை Posted: 28 Jun 2016 02:16 PM PDT தக்காளிப் பயிரைத் தாக்கும் இலைச்சுருள் நச்சுயிரியை அழிப்பது தொடர்பாக தொலைபேசியில் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நபார்டு மூலம் 3 மீனவக் கிராமங்களின் கரைகளை ஆழப்படுத்த ரூ. 4.50 கோடியில் திட்ட மதிப்பீடு Posted: 28 Jun 2016 02:15 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மீனவக் கிராமங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளிலே நிறுத்தும் வகையில் கரைகளை ஆழப்படுத்த நபார்டு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ. 1.50 கோடி வீதம் மொத்தம் ரூ. 4.50 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஆட்சியர் சு. கணேஷ். |
| மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம் Posted: 28 Jun 2016 02:15 PM PDT பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம், உயிரி தொழில் நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ரத்த வகை கண்டறியும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2016 02:12 PM PDT திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 6 சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 891 வாக்குகள் பெற்று திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. முதலிடம் பெற்றது. |
| உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: ஆட்சியர் தகவல் Posted: 28 Jun 2016 02:12 PM PDT முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்ட உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: |
| துவரங்குறிச்சி அருகே டிராக்டர் மீது பேருந்து மோதி ஓட்டுநர் சாவு Posted: 28 Jun 2016 02:12 PM PDT விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பாத்திமாபாளையத்தைச் சேர்ந்தவர் சிவாஜி (50). டிராக்டர் ஓட்டுநர். புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தானியம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் சிவாஜியின் மைத்துனர் குழாய் பதிக்கும் பணியை ஒப்பந்தம் மூலம் செய்து வருகிறாராம். அவருக்கு உதவி செய்வதற்காக சிவாஜி உறவினரின் டிராக்டரில் திங்கள்கிழமை இரவு மேலத்தானியம் நோக்கி சென்றுகொண்டிருந்தாராம். |
| குடிநீர் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி Posted: 28 Jun 2016 02:11 PM PDT கரூரில் குடிநீர் பாதுகாப்பு வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2016 02:11 PM PDT கரூர் ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வாங்கப்பாளையத்தில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்ட இடம் தேர்வு Posted: 28 Jun 2016 02:11 PM PDT கரூர் வாங்கப்பாளையத்தில் நகராட்சி சார்பில் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான இடத்தை செவ்வாய்க்கிழமை நகர்மன்றத் தலைவர் எம்.செல்வராஜ், துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். |
| சின்னதாராபுரத்தில் சிறப்பு முகாம் Posted: 28 Jun 2016 02:11 PM PDT சின்னதாராபுரம் ஊராட்சியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவிதொகைப் பெற மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2016 02:11 PM PDT க.பரமத்தி அருகே அரசு வேலை கிடைக்காத ஏக்கத்தில் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை Posted: 28 Jun 2016 02:11 PM PDT சூரியகாந்தியில் பச்சைக் காய் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| பரணி வித்யாலயா பள்ளி மாணவிக்கு விருது Posted: 28 Jun 2016 02:11 PM PDT இசைத் துறை மற்றும் பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கி பல பரிசுகள் பெற்று சாதனை புரிந்த பரணி வித்யாலயா பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி ஈ.வர்ஷினியை பாராட்டி அகில இந்திய கலாசார மையம் இளம் வளர்மணி விருதையும், நடனத் திறமையை பாராட்டி நடன மயில் விருதையும் வழங்கி அண்மையில் பாராட்டியது. |
| Posted: 28 Jun 2016 02:11 PM PDT தென்னிலை அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல நடைபாதை வேண்டும் Posted: 28 Jun 2016 02:11 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள திருவெங்கனூர் கிராமம்,காலனி தெருவைச் சேர்ந்த மக்கள் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்றுவர நடைபாதை வேண்டி ஆட்சியர் எ.சரவணவேல்ராஜூயிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளது : வைகோ Posted: 28 Jun 2016 02:11 PM PDT தமிழகத்தில் கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| அரசின் திட்டங்களைப் பொதுமக்கள் நன்கு அறிந்து பயன் பெற வேண்டும் Posted: 28 Jun 2016 02:11 PM PDT பொதுமக்கள் அரசின் திட்டங்களை நன்கு அறிந்து பயன் பெற வேண்டும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| குரும்பலூரில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி Posted: 28 Jun 2016 02:11 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட செய்தி, மக்கள் - தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் குடிநீர் பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jun 2016 02:11 PM PDT தேசிய ஊரகக் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை (ஜூன் 27 முதல் ஜூலை 3) முன்னிட்டு அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடைபெற்றன. |
| ஜயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு Posted: 28 Jun 2016 02:11 PM PDT ஜயங்கொண்டம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது குறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| பெரம்பலூரில் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jun 2016 02:11 PM PDT பெரம்பலூரில், சர்வதேச போதை மருந்து மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சிலையை மறைத்து வைக்கப்படும் பதாகைகளை அகற்ற வலியுறுத்தல் Posted: 28 Jun 2016 02:11 PM PDT பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு சிலையை மறைத்து வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது Posted: 28 Jun 2016 02:11 PM PDT அரியலூர் அருகே ஒலி பெருக்கி நிலைய உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி, செல்லிடப்பேசி மற்றும் பணத்தைப் பறித்தவர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழிப் பயிற்சி Posted: 28 Jun 2016 02:10 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் அடிப்படை ஆங்கில மொழிப் பயிற்சி முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை தொடங்கியது. |
| தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஜூலை 4 முதல் கலந்தாய்வு Posted: 28 Jun 2016 02:10 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் ஜூலை 4 முதல் 9 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றார் ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொ) சி. குணசேகரன். |
| ராமநாதபுரம் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஜூலை 2 இல் ஆடித் திருவிழா தொடக்கம் Posted: 28 Jun 2016 01:08 PM PDT ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா, ஜூலை 2 ஆம் தேதி காப்புக்கட்டும் உற்சவத்துடன் தொடங்குகிறது. |
| காரைக்குடியில் நகராட்சி வாகனக் காப்பகங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க உறுதி Posted: 28 Jun 2016 01:08 PM PDT காரைக்குடி நகராட்சியில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூல் செய்யப்படும் என்று, நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. |
| காய்கறிகள் சாகுபடியுடன் தேனீ வளர்க்கும் விவசாயி: இரண்டு வருமானம் கிடைப்பதாக ஆட்சியரிடம் தகவல் Posted: 28 Jun 2016 01:07 PM PDT ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் காய்கறிகள் சாகுபடியுடன், தேனீக்களும் வளர்த்து வருவதால் இரண்டு வருமானம் கிடைப்பதாக அக்கிராம விவசாயி செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் தெரிவித்தார். |
| காரைக்குடியில் தி.க. பொதுக்கூட்டம் Posted: 28 Jun 2016 01:07 PM PDT சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| நியமனக் குழு கூட்டம் ஒத்திவைப்பு Posted: 28 Jun 2016 01:07 PM PDT தேவகோட்டை நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனக் குழு கூட்டம், ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| ராமநாதபுரத்தில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி Posted: 28 Jun 2016 01:06 PM PDT ராமநாதபுரத்தில் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான பேரணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. |
| நிறைகுளத்து அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா Posted: 28 Jun 2016 01:05 PM PDT முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் ஊராட்சியில் அருள்மிகு நிறைகுளத்து அய்யனார் கோயில் 3 ஆவது வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விசாலயன்கோட்டை கிராம விவசாயிகள் சங்க ஆண்டு விழா Posted: 28 Jun 2016 01:05 PM PDT தேவகோட்டை அருகே விசாலயன்கோட்டை கிராமத்தில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் கிராம விவசாயிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. |
| Posted: 28 Jun 2016 01:05 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எல்.பள்ளபட்டியைச் சேர்ந்தவர் அழகு என்ற அழகர்சாமி (65). இவர் இருசக்கர வாகனத்தில் மூங்கில்பட்டி வழியாக கரடிப்பட்டிக்கு திங்கள்கிழமை சென்றுள்ளார். வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அழகர்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| குரும்பூரில் அரசுப் பேருந்து-பைக் மோதல்: இரு இளைஞர்கள் காயம் Posted: 28 Jun 2016 01:04 PM PDT குரும்பூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர். |
| கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை Posted: 28 Jun 2016 01:03 PM PDT கயத்தாறு அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் தில்லி பயணம் Posted: 28 Jun 2016 01:03 PM PDT தமிழக மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து வலியுறுத்துவதற்காக, திமுக எம்.பி. திருச்சி சிவா தலைமையில், ராமேசுவரம் பகுதி மீனவர்கள் செவ்வாய்க்கிழமை தில்லி சென்றுள்ளனர். |
| கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை: பரமக்குடி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் Posted: 28 Jun 2016 01:03 PM PDT பரமக்குடி நகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என, உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். |
| சாயல்குடி அருகே பிரபல ரௌடி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை Posted: 28 Jun 2016 01:02 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் பிரபல ரௌடியான பட்டுராஜாவை 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. |
| சாத்தனூரில் இன்று மக்கள் தொடர்பு முகாம் Posted: 28 Jun 2016 01:01 PM PDT முதுகுளத்தூர் வட்டம், மேலக்கொடுமலூர் வருவாய் பிர்காவைச் சேர்ந்த சாத்தனூர் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. |
| சிவகங்கையில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி Posted: 28 Jun 2016 01:01 PM PDT சிவகங்கையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி குடிநீர் எடுக்கச் சென்றவர் சாவு Posted: 28 Jun 2016 01:00 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே செவ்வாய்க்கிழமை மிதிவண்டியில் குடிநீர் எடுக்கச் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| பரமக்குடி அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா Posted: 28 Jun 2016 01:00 PM PDT பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வட்ட சட்டப் பணிகள் பயிற்சி முகாம் Posted: 28 Jun 2016 12:59 PM PDT சிவகங்கை மாவட்டம், வையகளத்தூரில் செவ்வாய்க்கிழமை வட்ட சட்டப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 13 பேருக்கு மீண்டும் சிறைக்காவல் நீட்டிப்பு Posted: 28 Jun 2016 12:59 PM PDT இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 12 ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| இலங்கை சிறையிலுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் வட்டாட்சியரிடம் நிவாரணம் கோரி மனு Posted: 28 Jun 2016 12:59 PM PDT இலங்கை சிறையிலுள்ள 6 மீனவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் கோரி, ராமேசுவரம் வட்டாட்சியர் மற்றும் மீன்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். |
| நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு Posted: 28 Jun 2016 12:58 PM PDT திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நடிகர் கருணாஸ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கல்லூர், அரசூர், மாவூர், தினையத்தூர்,கீழ்க்குடி, தளிர்மருங்கூர், தேளூர், நகரிகாத்தான், பாண்டுகுடி, கோடனூர், கிளியூர், கூகுடி, நீர்குன்றம், கவலைவென்றான், மங்களக்குடி, வெள்ளையபுரம், ஓரியூர், எஸ்.பி. பட்டினம், தொண்டி நம்புதாளை, சோழியக்குடி, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றார். |
| இலங்கை அகதிகள் மீது போலீஸார் தாக்குதலை கண்டித்து மானாமதுரையில் போராட்டம் Posted: 28 Jun 2016 12:58 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை இரவு இலங்கை அகதிகள் முகாமில் போலீஸார் சிலரை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து, அகதிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஜூலை 5 இல் ஆனித் திருவிழா தொடக்கம் Posted: 28 Jun 2016 12:57 PM PDT ராமநாதபுரம் அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழா ஜூலை 5 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| சாத்தூர் பகுதியில் வாறுகாலை சுத்தம் செய்ய வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல் Posted: 28 Jun 2016 12:57 PM PDT சாத்தூரில் பகுதியில் வாறுகாலை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர் மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கக் கூட்டம் Posted: 28 Jun 2016 12:57 PM PDT அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| போலி நகை, ஆவணத்தை வைத்து ரூ. 50.55 லட்சம் மோசடி: வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது Posted: 28 Jun 2016 12:56 PM PDT விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் உள்ள அரசு கிராம வங்கியில் போலி நகை, ஆவணங்கள் மூலம் ரூ.50.55 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். |
| அருப்புக்கோட்டையில் சிறப்பு துப்புரவுப் பணி: நகராட்சித் தலைவர் வேண்டுகோள் Posted: 28 Jun 2016 12:56 PM PDT அருப்புக்கோட்டை நகரில் சிறப்பு துப்புரவுப் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: |
| நரிக்குடியில் சோலார் பேனல்கள் திருட்டு Posted: 28 Jun 2016 12:55 PM PDT விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள சோலார் பேனல்கள் மற்றும் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விருதுநகர் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 28 Jun 2016 12:55 PM PDT விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விருதுநகரில் குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி Posted: 28 Jun 2016 12:54 PM PDT விருதுநகரில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு,பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| விடுதலைச் சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டம் Posted: 28 Jun 2016 12:54 PM PDT சாத்தூர் அருகே மரிய மைக்கேல் என்பவர் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |