Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம்

Posted: 09 May 2016 09:22 AM PDT

o

oகட்டடத்துடன் மோதி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ரொரன்ரோ காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நகரின் கிழக்குப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Kingston வீதி மற்றும் Victoria Park Avenue பகுதியில் இந்த விபத்து இன்று அதிகாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன சாரதி சம்பவிடத்தில் நிற்காது சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.o

அதேவேளை விபத்தில் யாரும் காயமடைந்தார்களா என்பது தொடர்பில் தகவல் எவையும் வெளியாகவில்லை.

The post கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபோர்ட் மக்முர்றி: சேதங்களை மதிப்பிடும் பணியில் காப்புறுதி நிறுவனங்கள்

Posted: 09 May 2016 09:19 AM PDT

po

poதீயினால் பாதிக்கப்பட்ட ஃபோர்ட் மக்முர்றியில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை காப்புறுதி நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

நாட்டில் உள்ள பல காப்புறுதி நிறுவனங்கள் அந்த பகுதிக்கு தமது குழுக்களை அனுப்பி வைத்துள்ளதுடன், மதிப்பீட்டு பணிகளும் நேற்றைய நாளிலிருந்து ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத் தீ ஏற்பட்டதை அடுத்து மக்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்றே, காப்புறுதி நிறுவனங்களின் அவரகால நடவடிக்கைப் பணியகங்கள் குறித்த அந்த பகுதிகளில் இயங்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.po

இதேவேளை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள எட்மண்டன், நோர்த்லான்ட் இடம்பெயர்ந்தோர் முகாமில், சுமார் 16 காப்புறுதி நிறுவனங்கள் தமது தற்காலிக அலுவலகங்களை அமைத்து பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

The post ஃபோர்ட் மக்முர்றி: சேதங்களை மதிப்பிடும் பணியில் காப்புறுதி நிறுவனங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்ரனில் இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 09 May 2016 09:15 AM PDT

jhb

jhbபிரம்டனில் இன்று காலையில் இடம்பெற்ற இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர்.

Elizabeth Street North பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று நண்பகல் அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.jhb
ஒருவர் மோசமான காயங்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றையவர் உள்ளுர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவி்ககப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் எவரையும் தேடவில்லை என்றும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post பிரம்ரனில் இரட்டைக் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபோர்ட் மக்முரே தீ பரவல் ஓரளவு தணிந்துள்ளது

Posted: 09 May 2016 09:11 AM PDT

p

pஅல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரே காட்டுத் தீ பரவல் தற்போது ஓரளவு தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீப் பரவல் தணிந்துள்ளதனை அடுத்து, இன்று திங்கட்கிழமை அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு சேதாரங்களை மதிப்பிடுவதற்கு அல்பேர்ட்டா மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

தீயணைப்பு பணிகள் தற்போது ஒரு நிலைத்தன்மையை அடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைககள் குறித்து திட்டமிடுவதற்கும், மக்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப அனுமதிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.p

இதேவேளை அந்த பகுதிக்கு சென்று பார்த்துத் திரும்பிய உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் யுர்திகா(David Yurdiga)அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பரம்பலால் சுமார் 20 சதவீதமான வீடுகள் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தீயினால் அழிவடைந்துள்ள அந்த நகர் வழமைக்கு திரும்ப பல ஆண்டுகள் பிடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அந்த பகுதிகளுக்கு மக்கள் திரும்புவது இன்னமும் ஆபத்தானதாகவே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் யுர்திகா(David Yurdiga) தெரிவித்துள்ளார்.

ஃபோர்ட் மக்முரேயில் கடந்த ஒரு வாரமாக எரிந்து பரவி வருகின்ற இந்த காட்டுத் தீ காரணமாக நகரிலும், அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளிலும் இருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஃபோர்ட் மக்முரே தீ பரவல் ஓரளவு தணிந்துள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™