Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


கல்கரியில் ஏற்பட்ட தீ சம்பவம் ஒன்றில் ஐந்துபேர் உயிரிழப்பு

Posted: 07 May 2016 09:14 PM PDT

p

pகல்கரியில் வீடு ஒன்று தீ பற்றிய சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்தாகவும், அங்கு ஐந்து பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என நம்பப்படுவதாகவும் தீ அணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் அனைவரும் ஆண்கள் என நம்பப்படுவதாகவும், எனினும் அவர்களின் அடையாளம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த வீட்டில் தீ பற்றிக்கொண்டமைக்கான காரணமும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தகவல் அறிந்து தமது தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது குறித் வீட்டில் இருந்து புகை வெளியேறியதுடன், தீச்சுவாலை கொழுந்து விட்டு எரிந்தவாறு காணப்பட்டதுடன், குறித்த அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்கும் தீ பரவியிருந்தாக விபரித்துள்ளார்.

எனினும் அந்த இரண்டாவது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து தாமாகவே வெளியேறியிருந்தனர் என்றும், அவர்களில் யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

The post கல்கரியில் ஏற்பட்ட தீ சம்பவம் ஒன்றில் ஐந்துபேர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

15 வயது சிறுமியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது

Posted: 07 May 2016 09:10 PM PDT

jh

jhகாணாமல் போயுள்ள 15 வயது சிறுமி ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்த்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Gillian Dikio என்ற அந்த சிறுமி கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு Finch Avenue West மற்றும் Driftwood Avenue பகுதியில் புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் அந்த சிறுமி கடைசியாககக் காணப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது.

அவர் 4 அடி 4 அங்குல உயரமும் 115 இறாத்தல் நிறையும் உடைய கபில நிறக் கண்கள் கொண்டவர் என்றும், குட்டையான கறுப்புநிறத் தலைமுடி உடையவர் என்றும் விபரிக்கப்பட்டுள்ளார்.jh

காணாமல் போயுள்ள இந்த சிறுமியின் பாதுகாப்புத் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக கூறியுள்ள காவல்த்துறையினர், அவரை கண்டவர்கள் தமக்கு உடனடியகா தகவல் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 15 வயது சிறுமியைக் காணவில்லை: பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 07 May 2016 09:10 AM PDT

jh

jhRyerson பல்கலைக்கழக பகுதியில் நேற்று இரவு கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் Church Street மற்றும் Gould Street பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு தாம் சென்றிருந்த போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கத்திக் குத்துக் காயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் கூறியுள்ளனர்.

Kirk Drive மற்றும் Castlehill பகுதியிலும் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

The post கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலஸ்ட்ராலை குறைக்கும் “நட்ஸ் பிரியாணி”

Posted: 07 May 2016 08:10 AM PDT

j

jகொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ்.

சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

குறிப்பாக தினமும் 15- 20கிராம் வரை சாப்பிடலாம்.

பாஸ்பரஸ், தாது உப்புக்கள் அதிகம் நிறைந்துள்ள பாதாம் பருப்பை உட்கொண்டால் ஜீரண சக்தியை அதிகரித்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது, இதயத்தின் நண்பனான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

இப்படி பல்வேறான மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் மற்றும் முந்திரியை வைத்து சுவையான பிரியாணி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

முதலில் பாசுமதி அரிசியை (250 கிராம்) 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி (ஒரு சிறிய துண்டு), பூண்டு (8- 10பல்), மிளகாய் தூள்- தனியா தூள் (தேவையான அளவு), சோம்பு- பட்டை- கிராம்பு- ஏலக்காய் (தேவையான அளவு), தேங்காய் துருவல் (2 டீஸ்பூன்) போட்டு அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் (ஒன்று), தக்காளி (இரண்டு) பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் இதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் நெய்யில் பொன்னிறமாக வறுத்த பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து கிளறினால் சுவையான பிரியாணி ரெடி.

பாதாம் மட்டுமின்றி உங்களுக்கு தேவையான நட்ஸ் வகைகளும் சேர்த்து பரிமாறலாம்!!!

The post கொலஸ்ட்ராலை குறைக்கும் "நட்ஸ் பிரியாணி" appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பீட்ரூட் சாறு குடியுங்கள்: ரத்த அழுத்தத்தை குறையுங்கள்!

Posted: 07 May 2016 08:07 AM PDT

h

hபீட்ரூட் காய், கீரை, ஜூஸ் என பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.

பீட்ரூட்என்ற ஒற்றை உணவுப்பொருள் உடலின் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வல்லது ஆகும்.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன்கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள்உற்பத்தியாகும்.h

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது.

இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது.

அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொரு விதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.

இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில்அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.

எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது,அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

The post பீட்ரூட் சாறு குடியுங்கள்: ரத்த அழுத்தத்தை குறையுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபோர்ட் மக்மெர்றி காட்டுத் தீ மேலும் தீவிரம்

Posted: 07 May 2016 08:04 AM PDT

jk

jkஅல்பேர்ட்டா மாநிலத்தின் ஃபோர்ட் மக்மெர்றி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மேலும் தீவிரமடையலாம் என்று கூறப்படுகிறது.

இந்த காட்டுத் தீயானது நேற்று வரை சுமார் ஆயிரம் சதுர கிலோமீடடர் பரப்பளவுக்கு பரவியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்தும் பரவி வரும் இந்த தீ இன்று இரவுக்குள் தற்போது எரிந்த அளவின் இரு மடங்காக அதிகரிக்க கூடும் என முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பகல் நாள் வெப்பம் 27 பாகை செல்சியஸாகவும், காற்று வறட்சியானதாகவும் வீசும் என்று கூறப்பட்டுள்ளது.jk

இதன் காரணமாகவே காட்டுத் தீ இரட்டிப்பாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் ஞாயிறு திங்கட் கிழமைகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தென்படுவதனால், தீப்பரவல் தணியக் கூடும் எனவும் எதிர்பார்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

The post ஃபோர்ட் மக்மெர்றி காட்டுத் தீ மேலும் தீவிரம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™