Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோப் பகுதியில் விபத்து

Posted: 06 May 2016 01:19 PM PDT

yu

yuஸ்காபரோப் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களின் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Danforth வீதி மற்றும் Falmouth அவனியூப் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தினுள் சிக்கிய ஒருவரை மீட்பதற்கு அங்கு அவசர மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

விபத்துக் காரணமாக Falmouth மற்றும் Winter அவனியூப் பகுதிகளுக்கு இடையிலான Danforth வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் காலை 10.30 மணியளவில் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.yu

The post ஸ்காபரோப் பகுதியில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் 840 மில்லியன் டொலர்களை முதலிடுகிறது மத்திய அரசு

Posted: 06 May 2016 12:16 PM PDT

g

gரொரன்ரோ பொதுப் போக்குவரத்துத் துறைக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து 840 மில்லியன் டொலர்கள் வரையிலான நிதியை அடுத்த மூன்று வருடங்களில் பெற்றுக்கொள்ளவுள்ளது.

இதற்கான அறிவிப்பினை கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தினால் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் பொதுப் போக்குவரத்து உட்கட்டுமானத்திற்காக 3.4 பில்லியன் டெலார் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரொரன்ரோவின் Greenwood subway பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த கனேடியப் பிரதமர், ரொரன்ரோவில் முன்னெடுக்கப்படும் தகுதியான உட்கட்டுமான செயற்திட்டங்களில் 840 மில்லியன் டொலரை மத்திய அரசாங்கம் முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

The post ரொரன்ரோவில் 840 மில்லியன் டொலர்களை முதலிடுகிறது மத்திய அரசு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™