Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


ஃபோர்ட் மக்மெர்றியில் தீவிரமடைந்துள்ள தீ பரவல்

Posted: 04 May 2016 01:09 PM PDT

h

hஅல்பேர்ட்டா மாகாணத்தின் ஃபோர்ட் மக்மெர்றி(Fort McMurray) நகரில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ காரணமாக சுமார் 80,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த காட்டுத் தீ பரவலால் அங்குள்ள நூற்றுக் கணக்காண வீடுகள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதிஸ்டவசமாக எவருக்கும் காயங்களோ, உயிரிழப்புக்களோ ஏற்பட்டதான முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது மோசடைந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லபேட்டாவின் தீயணைப்புப் படையினர் தொடர்ந்தம் முயற்சித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த தீ பரம்பல் கட்டுப்பாட்டை மீறிக் காணப்படுவதாக அந்த மாநில முதல்வர் Rachel Notley தெரிவித்துள்ளார்.h

இதேவேளை அண்டை மாநிலங்கள் பலவற்றின் தீயணைப்புப் படையினர் அல்பேட்டாவில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கான தங்களின் விருப்பங்களை வெளியிட்டுள்ளனர். மிசிசாகா, வோன் தீயணைப்புப் படையினரே இவ்வாறு தமது இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் இயற்கை வள அமைச்சு தாம் 100 தீயணைப்புப் படையினரையும் 19 மேற்பார்வை அதிகாரியையும் அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது.

அதேவேளை கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அல்பேட்டாவிற்கு வழங்க முடிந்த உதவிகள் அனைத்தையும் மத்திய அரசாங்கம் வழங்கும் என தெரிவித்துள்ளார்.

The post ஃபோர்ட் மக்மெர்றியில் தீவிரமடைந்துள்ள தீ பரவல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

Posted: 04 May 2016 08:25 AM PDT

download

downloadதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.

கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயிற்றுப் போக்கு, சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.

இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது, சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

இப்போது ஆப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – ஒரு கப்,

துவரம்பருப்பு – அரை கப்,

தக்காளி – கால் கப்,

கடுகு, சீரகம் – தலா அரைத்தேக்கரண்டி

மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் துவரம் பருப்பு 2 தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-2, தனியா 4 தேக்கரண்டி ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்தி பின்னர் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஆப்பிள், தக்காளியை பொடியாக நறுக்கவும், மீதமுள்ள துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை வேகவிடவும்.

இதில் தக்காளி, மசித்த பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கொதிவந்ததும் இறக்கவும்.

இதில் கடுகு, சீரகம் தாளித்து ஊற்றிக் கொள்ளவும், பின்னர் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான ரசம் ரெடி.

The post கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

Posted: 04 May 2016 08:22 AM PDT

j

jசிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.

உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.

இதன் மற்ற பலன்கள்,

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

The post தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடியர் உள்ளிட்ட ஏனைய பணயக் கைதிகளையும் கொல்லப்போவதாக மிரட்டல்

Posted: 04 May 2016 08:19 AM PDT

yu

yuபிலிப்பீன்சின் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாம் பிடித்துவைத்துள்ள கனேடியர் உள்ளிட்ட ஏனைய பணயக் கைதிகளையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிலிப்பீன்சிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இரண்டு கனேடியர் உள்ளிட்ட நான்கு பேரை அந்த நாட்டில் உள்ள அபு சயாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி கடத்திச் சென்றுள்ளதுடன் அவர்களை விடுவிப்பதற்காக பிணைத் தொகையை கோரியிருந்தனர்.

அவர்கள் கேட்ட பிணைத் தொகை வழங்காததை அடுத்து அந்த நால்வரில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த ஜோன் றிட்ஸ்டேலர் என்பவரை அண்மையில் படுகொலை செய்திருந்தனர்.

அத்துடன் அவர் சிரச்சதேம் செய்யப்பட்டு கொல்லப்படும் காணொளிப் பதிவினை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், ஜிகாதிய இணையத் தளங்களை கண்காணித்துவரும் அமெரிக்க நிறுவனம் குறித்த காணொளிப்பதிவு வெளியாகியுள்ள தகவலை தெரிவித்துள்ளது.yu

இதேவேளை அவர்கள் வெளியிட்டள்ள பிறிதொரு காணொளி ஒன்றில் ஏனைய மூன்று பணயக் கைதிகளையும் காட்சிப்படுத்தியுள்ளதுடன், தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்களையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்தள்ளனர்.

தீவிரவாதிகளின் துப்பாக்கி முனையில் தரையில் அமர வைக்கப்பட்டுள்ள அந்த மூவரும், தமது உயிரைக் காப்பாறுமாறு கனேடிய அரசாங்கத்திடமும், பிலிப்பீன்ஸ் அரசாங்கத்திடமும் மன்றாடும் காட்சிகள் அநத காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

The post கனேடியர் உள்ளிட்ட ஏனைய பணயக் கைதிகளையும் கொல்லப்போவதாக மிரட்டல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

டவுண்ரவுனில் கத்திக்குத்துச் சம்பவம்: காயமடைந்த நபர் மருத்துவமனையில்

Posted: 04 May 2016 08:15 AM PDT

o

oரொரன்ரோ டவுண்ரவினில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

Bay மற்றும் Grosvenor வீதிகள் அமைந்துள்ள பகுதிக்கு வருமாறு தாம் அழைக்க்பபட்டதாகவும், மூன்று ஆண்களிடையே கைகலப்பு இடம்பெறுவதாகவும், அவர்களில் ஒருவர் கையில் கத்திவைத்திருப்பதாக தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், தகவல் கிடைத்ததும் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.o

அங்கு தாம் சென்ற போது ஒரு ஆண் நபர் கத்திக்குத்துக் காயத்துடன் காணப்பட்டார் என்றும், உடனடியாவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post டவுண்ரவுனில் கத்திக்குத்துச் சம்பவம்: காயமடைந்த நபர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™