Tamil Star |
- நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட நபர் உயிரிழப்பு
- வர்த்தக போட்டித்துவ நாடுகளுக்கான தரவரிசை பட்டியலில் கனடா பின்னடைவு
- ஃபோர்ட் மக்முறியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறுவதில் தாமதம்?
- நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்கும் ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்
| நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட நபர் உயிரிழப்பு Posted: 31 May 2016 08:57 AM PDT
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேர்லிங்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு Country Club Drive பகுதியில் உள்ள முகவரிக்கு காவல்த்துறையினரும், அவசர மருத்துவப் பிரிவினரும் விரைந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தடாகத்தில் விழுந்து குறித்த நபர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்த உடனடியகாவே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார் என்றும், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 70 வயதான முதியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. The post நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட நபர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வர்த்தக போட்டித்துவ நாடுகளுக்கான தரவரிசை பட்டியலில் கனடா பின்னடைவு Posted: 31 May 2016 08:52 AM PDT
இந்த தரவரிசைப் பட்டியலை சுவிட்சர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் IMD எனப்படும் அனைத்துலக வர்த்தக போட்டித்துவ நிலையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தால் கணிப்பீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தர வரிசைப் பட்யியலில் 5ஆவது இடத்தில் காணப்பட்ட கனடா இந்த ஆண்டு பத்தாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் கனடா சந்தித்துள்ள பாரிய பின்னடைவு இது என கருதப்படுகிறது. மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் கனேடிய பொருளாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளமை காரணமாகவே வியாபாரப் போட்டி தொடர்பான இந்த பட்டியலிலும் கனடா பின்னடைவைச் சந்திக்க நேர்ந்துள்ளதாகவவும் கூறப்படுகிறது. கனடாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பே இந்த தரவரிசைப் பட்டியலில் கனடா பின்னடைவைச் சந்திக்க காரணமாக அமைந்துள்ளதாக, இந்த தரப்படுத்தலை மேற்கொண்ட IMD நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாம் நிலையில் இருந்த ஹொங்கொங் இந்த ஆண்டு முதலாவது இடத்துக்கும், கடந்த ஆண்டு நான்காவது நிலையில் காணப்பட்ட சுவிட்சர்லாந்து இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை கடந்த ஆண்டு முதலாவது இடத்தில் காணப்பட்ட அமெரிக்கா மூன்றாம் நிலைக்கும், மூன்றாது நிலையில் காணப்பட்ட சிங்கப்பூர் நான்காவது நிலைக்கும் பின்தள்ப்பட்டுள்ளன. The post வர்த்தக போட்டித்துவ நாடுகளுக்கான தரவரிசை பட்டியலில் கனடா பின்னடைவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஃபோர்ட் மக்முறியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறுவதில் தாமதம்? Posted: 31 May 2016 08:48 AM PDT
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் உள்ள சாம்பலில் ஆசனிக் நச்சுப் பதார்த்தம் காணப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முறியில் பகுதியில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்த 80,000 பேர் இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகளை அடுத்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் நாளை முதலாம் திகதியில் இருந்து பகுதி பகுதியாக தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே மக்கள் குடியேறுவதற்கு வீடுகள் பொருத்தமானவையா என்பது தொடர்பில் ஆய்வு செய்துள்ள அதிகாரிகள் ,அங்கிருந்து பெறப்பட்ட சாம்பல் மாதிரிகளில் ஆசனிக் உள்ளிட்ட நச்சுப் பதார்த்தங்கள் காணப்படுவதாகவும், இவ்வாறான நச்சுப் பதார்த்தங்களை அந்த பகுதியில் இருந்து முற்றாக அகற்ற செப்டம்பர் மாதம் வரையில் ஆகலாம் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக குறைந்தது 2,000 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு தற்போதைக்கு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு யூன் மாதம் முற்பகுதியில் அவர்கள் வீடு திரும்ப முடியாது என்றும் அல்பேட்டா முதல்வர் தெரிவித்துள்ளார். அத்துடன் சுமார் 500 வீடுகள் உள்ள பகுதி பாதுகாப்பற்றவையாக காணப்படுவதாக தற்போது அறிவித்துள்ளனர். The post ஃபோர்ட் மக்முறியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறுவதில் தாமதம்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்கும் ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் Posted: 31 May 2016 08:04 AM PDT
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் தேவையான பொருட்கள் பாகற்காய் – 1 பெரியது தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் கைகளால் அதனை அழுத்தி பாகற்காயை மென்மையாக்கும் பின்பு அதனை 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும் ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும் அதை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் மீண்டும் அவற்றை பாதியாக வெட்டவும், விதைகளை நீக்கவும் பின்பு அதனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் இப்போது பாகற்காய் மென்மையாகி விட்டது பாகற்காயை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாறினை நீக்கி விடவும் பிழியப்பட்ட பாகற்காயினை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் ஆப்பிள், இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும் பின்பு அதனை வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ளவும் பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு , உப்பு சேர்க்கவும் பின்பு குளிர்ந்த நீர் சேர்த்து, டம்ளரில் விட்டு குடிக்கலாம். The post நீரிழிவு நோயின் வீரியத்தை குறைக்கும் ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நீச்கல் தடாகம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டுக்கான வர்த்தக போட்டித்துவ நாடுகளுக்கான தரவரிசை பட்டியலில் கனடா பத்தாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முறியில் சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது தாமதமாகியுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் அதன் வீரியத்தை குறைக்க ஆப்பிள் பாகற்காய் ஜுஸ் குடிக்கலாம்.