Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஊஃபர் சவாரி பகிர்வு சேவைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்

Posted: 03 May 2016 08:49 PM PDT

o

oஊஃபர் போன்ற சவாரி பகிர்வு சேவைகள் தொடர்பான சட்டமூல முன்மொழிவுக்கு ஆதரவாக ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

தரைப் பேக்குவரத்து விதிமுறைகளை உள்ளடக்கி குறிப்பிட்ட எண்ணிக்கையான சட்டமூலப் பரிந்துரைகளை நகரபிதா யோன் ரொறி முன்வைத்திருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு அது தொடர்பான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டிருந்தது.

இரண்டு வாரங்களின் முன்னர் குறித்த இந்த பரிந்துரைகள் நகர பிதா யோன் ரொறி யினால் முன்வைக்கப்பட்டபோது, அவற்றில் சிலவற்றை உரிமை வழங்கும் குழுவின் உறுப்பினர்கள் நிராகரித்திருக்கும் நிலையிலேயே, குறித்த சட்டமூலம் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.o

எனினும் நகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட சில மாற்றங்களும் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமூலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மக்கள் பாதுகாப்பாகவும், உரிய வாடகை தொகையுடனும் தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும், அதற்கு ஏற்ற வகையில் ஊபர் வாடகை சேவையும், வழக்கமான வாடகை வாகனங்களும் சம பலன்களை பெறும் வகையில் விதிமுறைகள் அமைய வேண்டும் எனவும் ரொறி தெரிவித்திருந்தார்.

The post ஊஃபர் சவாரி பகிர்வு சேவைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேட்டாவின் வடக்கு பிராந்திய காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

Posted: 03 May 2016 07:05 PM PDT

k

kகனடாவின் மத்திய நகர் பகுதியில் அமைந்துள்ள Fort McMurray நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமா ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீயில் குறிப்பிட்ட எண்ணிக்கையான வீடுகள் எரிந்தழிந்ததுடன், எரிந்த சாம்பல்கள் அல்பேட்டா மாநிலத்தின் நகரில் உள்ள வீதிகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் அழிவுகள் ஏற்பட்டுள்ள போதிலும் அதனை தற்போதைக்கு மதிப்பிட்டுக் கூறப்பட முடியாதுள்ளதாக அல்பேட்டாவின் பேரிடர் மூகாமைத்துவ அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர்.k

அல்பேட்டா மாநிலத்தின் வடக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த நகரில் 60,000 இற்கும் மேலான மக்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பேரிடரினால் சுமார் 30,000 இற்கும் மேலான மக்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அல்பேட்டாவின் வடக்கு பிராந்திய காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தசைகள் வலிக்கிறதா? தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள்

Posted: 03 May 2016 08:31 AM PDT

download

downloadவளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விட்டமின் ஏ, பி, சி, டி,இ என்று உடலுக்குத் தேவையான அனைத்து வகையான விட்டமின்களும் முட்டையில் உண்டு.

மேலும், தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.

உடற்பயிற்சியில் நாட்டமுள்ள ஆண்கள், தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்கள் தினமும் பல முட்டைகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.hj

தசைகளின் வலிமைக்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

ஓரிடத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு முட்டை எடுத்துக்கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம்.

முட்டை குழம்பு

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்துவிட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப்தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்கவிடவும்.

பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் வேக வைத்து முட்டையை போடவும்.

குழம்பு கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டையை அவித்து சாப்பிடுவது பிடிக்கவில்லையென்றால் இவ்வாறு குழம்பு செய்து அன்றாடம் சாப்பிடுங்கள்.

இதனால், உடலில் ஆங்காங்கே ஏற்படும் தசைகளின் வலிக்கு தீர்வு கிடைக்கும்.

The post தசைகள் வலிக்கிறதா? தினமும் முட்டை குழம்பு சாப்பிடுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்ட்டி கியூபெக்கொய்ஸ் கட்சியின் தலைவர் பதவி விலகினார்

Posted: 03 May 2016 08:10 AM PDT

l

l"பார்ட்டி கியூபெக்கொய்ஸ்" கட்சியின் தலைவர் பதவி விலகியுள்ளமையானது கியூபெக் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரஞ்சுமொழி மாநிலமான கியூபெக்கை பிரிவினை நோக்கி வலியுறுத்தி வரும் கட்சியாக "பார்ட்டி கியூபெக்கொய்ஸ்" (Parti Quebecois)இருந்து வருகிறது.

கட்சியின் தலைவரான 54 வயது பியர் கார்ல் பலடோ(Pierre Karl Peladeau), பதவியேற்றிருந்தார் 2015ஆம் ஆண்டின் மே மாதத்தில் கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருந்த போது கியூபெக்கினை கனடாவில் இருந்து பிரித்து தனி நாடாக மாற்றுவேன் என்ற உறுதிமொழியளித்திருந்தார்.

எனினும் அவர் பதவி ஏற்று இன்னமும் ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில், நேற்று தனது இந்த பதவி விலகலை அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது குடும்பமா அரசியலா என்ற முடிவினை மேற்கெர்ளள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தான் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பார்ட்டி கியூபெக்கொய்ஸ் கட்சியின் தலைவர் பதவி விலகினார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சித்திரவதைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கனடாவும் சேர்ந்துகொள்கிறது

Posted: 03 May 2016 08:06 AM PDT

Stephane_Dion_--_01042016

Stephane_Dion_--_01042016ஐ.நாவின் உலகளாவிய சித்திரவதைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கனடாவும் சேர்ந்துகொள்ளவுள்ளது.

குறித்த இந்த திட்டம் முதன் முறையாக 2002ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் கடந்த போதிலும் கனடா அதில் இணைந்தகொள்ளாது இருந்துவந்துள்ளது

கடந்த ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான ஆட்சிக் காலத்தின் போது, குறித்த இந்த இணக்கப்பாட்டில் கையெழுத்திடுவதாக இரண்டு முறை கனேடிய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,அது நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையிலேயே ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கம் அதில் இணைந்துகொள்ள தயாராகியுள்ளது.

ஐ.நாவின் உலகளாவிய சித்திரவதைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கனடா இணைந்துகொள்ள இருப்பதாக இந்த தகவலை கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டியோனின் பேச்சாளர் வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக ரீதியிலும் குறிப்பாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதை நிறுத்துவதை நோக்கமாக கொண்டதாக இந்த ஒப்பந்தம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது

The post சித்திரவதைகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கனடாவும் சேர்ந்துகொள்கிறது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™