Tamil Star |
- தாக்குதலுக்கு உள்ளான நபர் ஆபத்தான நிலையில்
- Oakridge பகுதியில் துப்பாக்கிச் சூடு
- கனடா நோக்கி புறப்பட்டுள்ள தென்னாபிரிக்க தீயணைப்பு வீரர்கள்
- வெளிப்படையான, திறந்த அரசியல் இயக்கமாக லிபரல் கட்சியை மாற்றும் திட்டத்திற்கு உறுப்பினாகள் ஆதரவு
| தாக்குதலுக்கு உள்ளான நபர் ஆபத்தான நிலையில் Posted: 29 May 2016 09:01 PM PDT
இன்று அதிகாலை 1.30 மணியளவில் McCaul வீதிக்க அருகில் உள்ள குயின் வீதியில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர் குறித்த நபர் ஒரு குழுவைச் சேர்ந்த ஆண்களினால் தாக்கப்பட்டு்ள்ளார் என்றும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள அவரின் நிலைமை மோசமடைந்து செல்வதாகவும் தெரிவித்தள்ளனர். எனினும் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் எவற்றையும் அவர்கள் வெளியிடவில்லை. இது தொடர்பில் யாரேனும் தகவல் தெரிந்தால் 416-808-5200 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. The post தாக்குதலுக்கு உள்ளான நபர் ஆபத்தான நிலையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Oakridge பகுதியில் துப்பாக்கிச் சூடு Posted: 29 May 2016 07:48 AM PDT
இது தொடர்பில் ரொரன்ரோ காவல்த்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில், அதிகாலை 2.45 மணியளவில் இந்த து்பபாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கூறியுள்ளனர்.. Danforth Avenue மற்றும் Warden Avenue பகுதியில் உள்ள மர்யூனா மருந்தகம் ஒன்றின் வெளியில் வெற்றுத் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் குறித்தோ, காயமடைந்தமை தொடர்பிலோ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. The post Oakridge பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா நோக்கி புறப்பட்டுள்ள தென்னாபிரிக்க தீயணைப்பு வீரர்கள் Posted: 29 May 2016 07:44 AM PDT
தென்னாபிரிக்காவின் டாம்போ அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அவர்கள் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தமது நாட்டின் தீயணைப்பு படை வீரர்க்ள மிகவும் சிறப்பான பயிற்சிகளை பெற்றவர்கள் என்பதனால், அவர்கள் கனடாவிலும் சிறந்த முறையில் செயற்படுவார்கள் என்று இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க வீரர்கள் கனடாவில் தீயணைப்புப் பணியில் ஈடுபடுவதன் மூலம் தென்னாபிரிக்காவுக்கு பெருமை சேர்ப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முர்றி பகுதியில் சுமார் ஒரு மாதகாலமாக தொடரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கனேடிய தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த தீயணைப்புப் பணிகளில் அமெரிக்காவின் தீயணைப்புப் படையினரும் முதல் முறையாக பங்களிப்புச் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post கனடா நோக்கி புறப்பட்டுள்ள தென்னாபிரிக்க தீயணைப்பு வீரர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளிப்படையான, திறந்த அரசியல் இயக்கமாக லிபரல் கட்சியை மாற்றும் திட்டத்திற்கு உறுப்பினாகள் ஆதரவு Posted: 29 May 2016 07:39 AM PDT
குறித்த இந்த திட்டத்தினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமராக ஜஸ்டின் ரூடே பதவியேற்ற பின்னர் நடைபெற்ற கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று நடைபெற்றிருந்தது. அந்த மாநாட்டிலேயே குறித்த திட்டத்தை லிபரல்கட்சியின் முக்கிய மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ முன்வைத்திருந்ததுடன், அந்த திட்டம் குறித்தும் விளக்கமளித்துள்ளார். இந்த புதிய திட்டம் கட்சி உறுப்பினர்களின் அதிகாரத்தினை பறிப்பதாக உறுப்பினர்கள் கருதுவார்களாக இருந்தால், தாமும் கட்சி உறுபபினர்களுடன் இணைந்து அதனை எதிர்ப்பேன் என்றும், ஆனால் இந்த திட்டம் அவ்வாறானது அல்ல என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடைசிநேரத்தில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட குறித்த திட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த திட்டம் வாக்களிப்பி்ற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியின் பிரதானிகளுள் 1,988 பேர் பிரதமரின் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், 66 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். The post வெளிப்படையான, திறந்த அரசியல் இயக்கமாக லிபரல் கட்சியை மாற்றும் திட்டத்திற்கு உறுப்பினாகள் ஆதரவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மேற்கு குயின் வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்த நபர் அபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காபரோவின் Oakridge குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஃபோர்ட் மக்முர்றி காட்டுத் தீணைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ள தெனினாவிபரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடா நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
லிபரல் கட்சியை வெளிப்படையான, திறந்த அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்திற்கு லிபரல் கட்சி உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.