Tamil Star |
| சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை: 90 பேர் கைது Posted: 28 May 2016 09:15 AM PDT
போதைப் பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலேயே இந்த சுற்றிவளைப்ப மேற்கொள்ள்பபட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தமை குறி்ப்பிடத்தக்கது. அதன் பின்னர் ரொரன்ரோ காவல்த்துறைய தலைமையகத்தில் நேற்று தகவல் வெளியிட்ட போதே அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். ரொரன்ரோ முழுவதிலும் உள்ள 88 மரிஜுவானா விற்பனை நிலையங்களில், 43 விற்பனை நிலையங்களை இலக்குவைத்தே "புரஜெக்ட் க்ளெவ்டியா"(Project Claudia) எனப்படும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் போது 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 186 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 530கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் 1,70,000 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. The post சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை: 90 பேர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் தீ Posted: 28 May 2016 09:11 AM PDT
இதன் காரணமாக அங்கிருந்தவர்களும், குறித்த அந்த பகுதியைச் சூழவுள்ள இடங்களில் இருந்தவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பீல் பிராந்திய காவல்த்துறையினர், குறித்த அந்த கட்டிடத்தின் தென்மேற்கு பகுதியில் தீ மூண்டதாகவும், எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. குறித்த அந்த கட்டிடத்தில் இரசாயன பொருட்கள் வைக்க்பபட்டிருந்தாகவும், தீ விபத்தினால் அந்த இரசாயனங்கள் எரிந்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்குமா என்பதனை ஆராய்வதற்கான நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீப் பரவல் தொடர்பில் அதிகாரிக்ள தொடர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். The post பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் தீ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரொரன்ரொவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் 90 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பிரம்டன் விக்டோரியா பார்க் அரங்கப்பகுதியில் நேற்று இரவு தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.