Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையில் கொள்ளை சம்பவம்

Posted: 20 May 2016 10:36 AM PDT

oi

oiபியேசன் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த கொள்ளைச் சம்பவம் அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றதாகவும், கொள்ளைச் சம்பவத்திற்காக வந்தவர்கள் துப்பாக்கியால் தாக்கியதில் குறித்த நபருக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்பது தொடர்பில் உறுதியாக தெரியவில்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்..

அத்துடன் அவர்கள் எதையேனும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்களா என்பது தொடர்பிலும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் இருவரைத் தேடி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலாவது சந்தேக நபர் வெள்ளையினத்தை சேர்ந்த 18 வயது மதிக்கத் தக்க ஐந்து அடி ஆறு அங்குலம் உயரமான ஆண் நபர் என்றும், இரண்டாவது சந்தேக நபர் கறுப்பு இனத்தைச் சேர்ந்த 18 வயது மதிக்கத் தங்க ஆண் நபர் என்றும் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

The post வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடையில் கொள்ளை சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகாலையில் Oakville பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted: 20 May 2016 10:28 AM PDT

jk

jkOakville இன்று அதிகாலையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Canadian வீதி மற்றும் Royal Windsor Drive பகுதியில் இன்று அதிகாலை 4.20மணிக்கு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த உந்துருளி ஓட்டுனர் வீதி வழைவில் தனது வாகனத்தின் வேகக் கட்டுப்பாட்டை இழந்திருந்தார் என்றும், அதனால் அவர் உந்துருளியில் இருந்து தூக்கி வீசப்பட்டிருந்தார் என்பதுடன், உந்துருளியும் மரம் ஒன்றில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்ட குறித்த உந்துருளி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என கூறப்படுகிறது.jk

இந்த விபத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் சம்பவத்தை பார்த்த குறிப்பிட்ட சாட்சிகள் இருப்பதாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

The post அதிகாலையில் Oakville பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புகையால் பாதிப்பை எதிர்கொள்ளும் எட்மண்டன்

Posted: 20 May 2016 09:42 AM PDT

yu

yuஅல்பேட்டாவின் ஃபோட் மக்முரேப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகையினால்எட்மண்டன் பகுதியில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகவும், தெளிவாக பார்க்கக் கூடிய தன்மை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் மற்றும் அல்போட்டா சுகாதார சோவைகள் திணைக்களம் ஆகியன தலைநகருக்கும், அதனைத் சுற்றியுள்ள இடங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கான காற்றுத் தரம் தொடர்பிலான அறிவுறுத்தலை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவுறுத்தலில், இருமல், தொன்ணை அரிப்பு தலையிடி அல்லது சுவாசக் குறைவு போன்ற அறிகுறிகளை மக்கள் உணர நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், இதய மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள், அஸ்மா போன்ற நோய் உள்ளவர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

The post புகையால் பாதிப்பை எதிர்கொள்ளும் எட்மண்டன் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனைத்துலக விசாரணைகள் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்

Posted: 20 May 2016 09:34 AM PDT

iu

iuமுள்ளிவாய்க்கால் பேரவலத்தினையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில் உலகில் உள்ள தமிழ் மக்கள் கடந்த மே 18 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

கனடாவிலும் அத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை முன்னிட்டு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளியிட்டிருந்த அறிக்கையில், அனைத்துலக மற்றும் பொதுநலவாய நீதிக் கட்டமைப்பின் தலையீட்டுடனான அர்த்தமுள்ள விசாரணைகள் மூலம், இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில், 26 ஆண்டுகால போரில் பாதிக்ப்பட்ட அனைத்து மக்களும் நினைவுகூரப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த பேரினால் பாதிக்கப்பட்ட பலரையும் கடந்த ஏழு ஆண்டுகளில் தான் சந்தித்துள்ளதாகவும், அவர்களின் வீரம் செறிந்த கதைகளும், துயரம் நிறைந்த அனுபவங்களும் இழப்புக்களும் தன்னை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை ஆற்றுவதற்கும், நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும், மீள் நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கும் இலங்கையில் பெருமளவு பணிகள் ஆற்றப்படவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒரு பாகமாக இணைந்து போயுள்ள கனேடிய தமிழர்களும் இந்த போரில் பல்வேறு இன்னல்களையும் சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆதரவினையும் தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக் கூறலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடனும், அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் முன்வந்திருப்பதனை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறையானது அனைத்துலக மற்றும் பொதுநலவாய நாடுகளின் நீதியாளர்கள், சட்டவாளர்களின் அர்த்தபுஷ்டியான தலையீட்டுடன் மேற்கொள்ளப்படுவதன் மூலம், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் மீதான விசாரணைகளுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து கனடாவும் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார்.

The post அனைத்துலக விசாரணைகள் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – கனேடிய பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™