Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரெக்ஸ்டேல் பகுதியில் கத்திக்குத்து

Posted: 02 May 2016 09:12 AM PDT

j

jரொரன்ரோவின் ரெக்ஸ்டேல் பகுதியில் நேற்று இரவு கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11 மணியளவில் Rexdale Boulevard மற்றும் Humberwood Boulevard பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கத்திக்குத்துக் காயத்திற்கு ஆளான ஆண் நபர் ஒருவர் தானாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதனை அடுத்து காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கத்திக்குத்துக்கு ஆளான குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரெக்ஸ்டேல் பகுதியில் கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று

Posted: 02 May 2016 09:08 AM PDT

oi

oiகனடாவில் வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று என்ற வகையில், இதுவரையில் தமது அரசாங்க வரிகளைச் செலுத்தாவர்கள் இன்றே அதற்கான ஏற்பாடுகளை செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக கடந்த 30ஆம் திகதியுடன் வரி செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த போதிலும், 30ம் திகதி சனிக்கிழமையில் வந்தமை காரணமாக, கால எல்லை இன்று இரண்டாம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுய தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கான (வரி மீதம் எவையும் இல்லாதவர்கள்) கால எல்லை எதிர்வரும் யூன் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய கால எல்லைக்குள் தமது வரித் தொகையினைச் செலுத்தத் தவறுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன், கட்டவேண்டியுள்ள தொகைக்குரிய வட்டியையும் சேர்த்து செலுத்தவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோவின் வடக்கே வெள்ள அபாயம் – மக்கள் வெளியேற்றம்

Posted: 02 May 2016 08:29 AM PDT

p

pஒன்ராறியோவின் வடபகுதி பழங்குடியின மக்கள் பிராந்தியமான காஷெசுவன்(Kashechewan) பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதனை அடுத்து, 400ற்கும் அதிகமானோர் அங்கிருந்து ஏற்கனவே வெளியேறியுள்ளதுடன், மேலும் 300ற்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெள்ளப் பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அதிக பாதிப்பினை எதிர்கொள்ளக்கூடிய சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்கள் உள்ளிட்டோர் ஜேம்ஸ் பே குடியிருப்பு பகுதியில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக வெளியேற்றப்பட்டு, காப்புஸ்காசிங் மற்றும் தண்டர்பே உள்ளிட்ட பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.p

தேவை ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள மக்களை கிரீன்ஸ்டோன் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள ஒன்ராறியோ மாநில அரசாங்கம், அல்பானி ஆற்றில் படிந்துள்ள பனிகட்டி விரைவாக உருகி வருவதனாலேயே இந்த வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்ளூர் பழங்குடியின அமைப்புக்கள் மற்றும் தேசிய வளங்கள் அமைச்சின் துணையுடன் தீயணைப்பு படையினர் மற்றும் அவசரகால முகாமைத்துவ அதிகாரிகள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில், சுமார் 1,200 பேர் அங்கிருந்து இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

The post ஒன்ராறியோவின் வடக்கே வெள்ள அபாயம் – மக்கள் வெளியேற்றம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்விக்டஸ் போட்டிக்கான நேரக் கணிப்பு ஆரம்பம்: இளவரசர் ஹென்றியும் கலந்துகொள்கிறார்

Posted: 02 May 2016 08:25 AM PDT

o

o2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இன்விக்டஸ் விளையாட்டு போட்டியின் நேரக் கணிப்பு இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நேரக் கணிப்பு ஆரம்பத்திற்கான நிகழ்வுகள் ஃபெயர்மவுண்ட் றோயல் யோர்க்(Farimont Royal York) நடைபெறவுள்ளது.

இந்த இன்விக்டஸ் விளையாட்டு, பரா ஒலிம்பிக் போலவே உடல் பாதிப்புக்கு உள்ளான மற்றும் அங்கவீனர்களான இராணுவ படை வீரர்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த விளையாட்டை பிரிதானிய இளவரசர் ஹென்றியே அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரொரன்ரோவில் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டு இன்விக்டஸ் (Invictus Games) விளையாட்டு போட்டி நிகழ்வுக்கான நேரக்கணிப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கனேடியப் பிரதமருடன் பிரிதானிய இளவரசர் ஹென்றியும் பங்குகொள்ளவுள்ளார்.o

இதற்காக கனடாவிற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரித்தானிய இளவரசர் ஹென்றி ரொரன்ரோவை வந்தடைந்துள்ளார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து றைசன்(Ryerson) பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஹொக்கி விளையாட்டு நிகழ்வு ஒன்றிலும் பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் இணைந்து இளவரசர் ஹென்றியும் கலந்துகொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

The post இன்விக்டஸ் போட்டிக்கான நேரக் கணிப்பு ஆரம்பம்: இளவரசர் ஹென்றியும் கலந்துகொள்கிறார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™