Tamil Star |
- அல்பேட்டா காட்டுத் தீ: எண்ணெய் உற்பத்தி பாதிப்பு
- Vaughan பகுதியில் வீடு மற்றும் வாகனங்கள் தீக்கிரை
- சரும அழகில் எலுமிச்சையின் பங்கு!
- வெங்காயத்தின் மகத்துவங்கள்
- தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
- வாடகைக் காரை விட்டுச் சென்ற சாரதி: காவல்த்துறை வலைவீச்சு
- அல்பேட்டா மாகாணத்தில் மீண்டும் பரவும் காட்டுத் தீ
| அல்பேட்டா காட்டுத் தீ: எண்ணெய் உற்பத்தி பாதிப்பு Posted: 17 May 2016 09:00 PM PDT
எண்ணெய் உற்பத்தியியில் ஏற்பட்ட இந்த பாதிப்பு காரணமாக, கனடாவிற்கு கிடைக்கும் வருமானத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நட்டம் சுமார் ஒரு பில்லியன் டெலர்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. காட்டுத்தீன் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அமைப்பு ஒன்று இந்த தகலை வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றிற்க ஒரு மில்லியன் பரல்கள் என்ற ரீதியில் கடந்த இரண்டு வாரங்களாக எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்பேட்டாவின் காட்டுத் தீயினால் அங்கிருந்த 80,000 இற்கும் அதிகமாவர்கள் வெளியியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் நிலைமை சீரடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மத்திய பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டு அங்கிருந்தவாகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post அல்பேட்டா காட்டுத் தீ: எண்ணெய் உற்பத்தி பாதிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Vaughan பகுதியில் வீடு மற்றும் வாகனங்கள் தீக்கிரை Posted: 17 May 2016 08:55 PM PDT
மேற்கு Major MacKenzie Drive இன் Autumn Grove Court பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றே திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு தீயணைப்புப் படையினர் சென்றிருந்த போது வீடு தீ சுவாலையினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடம்பர சொகுசு வாகனங்கள் இரண்டும் தீயில் எரிந்துகொண்டிருந்ததாகவும் விபரித்துள்ளனர். எனினும் அந்த வீட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தனர் என்றும், அதில் அவர்கள் யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். தீ பற்றிக்கொண்டதற்கான தெளிவான காரணங்கள் எவையும் இன்னமும் கண்டறியப்படவில்லை. தீயினால் ஏற்பட்ட சேத மதிப்பீடு தொடர்பிலும் தீயணைப்புப் படையினர் உடனடியாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. The post Vaughan பகுதியில் வீடு மற்றும் வாகனங்கள் தீக்கிரை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சரும அழகில் எலுமிச்சையின் பங்கு! Posted: 17 May 2016 07:42 AM PDT
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சருமம் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரை முகத்தில் கருமை படர்ந்த இடத்தில் தேய்க்கவும். உலர்ந்த பிறகு கழுவினால் கருமை மாறும். எலுமிச்சை சாறுடன் வினிகரையும் சேர்த்து உடலில் கறுப்பான இடங்களில் தடவி வந்தால் நிறம் மாற்றம் தெரியும். எலுமிச்சை சாறை உணவில் தினமும் சேர்த்து வந்தால் முகத்திற்கு நல்லது. எலுமிச்சை சாறு, பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தில் தடவி வரவும். எலுமிச்சை சாறு பிழிந்த பிறகு அதன் தோலை தூக்கி எறியாமல், எலுமிச்சை தோலை கை, கால் விரல் நகங்களை நன்கு தேய்த்து விட்டால் நகங்களில் படிந்திருந்த அழுக்குகள் வெளியேறி நகம் பளிச்சென்று மாறும். The post சரும அழகில் எலுமிச்சையின் பங்கு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 May 2016 07:38 AM PDT
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பலநாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்? நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சமஅளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும். வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறுவெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடி வளரும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி. நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும். மாரடைப்பு நோயாளிகள். ரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்னவெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். The post வெங்காயத்தின் மகத்துவங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாய்மார்களுக்கு பூண்டு அவசியம் Posted: 17 May 2016 07:36 AM PDT
தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும். தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர். பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. The post தாய்மார்களுக்கு பூண்டு அவசியம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாடகைக் காரை விட்டுச் சென்ற சாரதி: காவல்த்துறை வலைவீச்சு Posted: 17 May 2016 07:03 AM PDT
நோர்த் யோர்க் பார்க் பகுதியில் உள்ள மரம் ஒன்றுடன் மோதிய நிலையில் குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதி அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Sheppard மற்றும் Bayview அவனியூவிற்கு அருகில் Glendora Park பகுதியில் உள்ள மரம் ஒன்றுடனேயே குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்தறையினர், இதனை முதலில் தாங்கள் அவதானித்த போது அதிகாலை 5.55 மணி என்றும், எனினும் இந்த விபத்து எப்போது இடம்பெற்றுள்ளது என்பதை உடனடியாக கூறமுடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த வாகனத்தின் சாரதியை தேடும் நடவடிக்கையில் தற்போது காவல்த்துறையினா ஈடுபட்டுள்ளனர் என கூறப்படுகிறது The post வாடகைக் காரை விட்டுச் சென்ற சாரதி: காவல்த்துறை வலைவீச்சு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அல்பேட்டா மாகாணத்தில் மீண்டும் பரவும் காட்டுத் தீ Posted: 17 May 2016 06:56 AM PDT
எட்மண்டனுக்கு வடமேற்கே சுமார் 260 கிலோமீடடர் தொலைவில் உள்ள கிறீன்வியூ மாவடடத்தில் காட்டுத்தீப் பரவல் தீவிரமடைந்து வருவதனை அடுத்து, அங்குள்ளோரை வெளியேறுமாறான உத்தரவு நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியிருந்த இருந்த சுமார் 600 பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள பகதிகளுக்க அனுப்பப்படுவதாக மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார். ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்படும் பட்சத்தில் வெளியேற்றப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அந்தப் பகுதியின் வான்பரப்பில் அடர்ந்த மஞ்சள் வண்ணப்புகை பரவி வருவதாகவும், காற்றில் அடர்த்தியாக சாம்பல் உள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ட் மெக்மர்ரி நகரைச்சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கிருந்து 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். The post அல்பேட்டா மாகாணத்தில் மீண்டும் பரவும் காட்டுத் தீ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

எண்ணெய் வயல்நிலமான அல்பேட்டாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Vaughan பகுதியில் வீடு தீப்பற்றிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு கார்களும் எரிந்துபோயுள்ளன.


குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும்.
வாடகைக் கார் ஒன்றை செலுத்தி வந்த நபர் அதனைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நோர்த்யோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அல்பேட்டா மாகாணத்தில் காட்டுத் தீ மீண்டும் பரவிவருவதனால் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கிருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.