Tamil Star |
- கத்திக்குத்தில் மாணவன் படுகாயம்
- ஈற்ரோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
- கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்!
- பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதிகளில் காட்டுத் தீ
- தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்பு: நூறுக்கம் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்
| கத்திக்குத்தில் மாணவன் படுகாயம் Posted: 16 May 2016 09:20 PM PDT
Goreway மற்றும் Morning Star drives பகுதியில் அமைந்துள்ள Lincoln Alexander இடைநிலைப் பாடசாலையின் அருகில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவன் பாடசாலைக்கு வெளியில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்காகியிருந்தார் என்றும், பின்னர் அவா பாடசாலையினுள் சென்ற உதவி தேடிய நிலையில், அங்கிருந்த ஒருவர் 911 இற்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்றிருந்த காவல்த்துறையினர் காயமடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்ககு கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேக நபரைத் தேடி வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post கத்திக்குத்தில் மாணவன் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈற்ரோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் Posted: 16 May 2016 12:25 PM PDT
ஈற்ரோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாகவும், அதில் கர்ப்பிணி ஒருவர் காயமடைந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்ப்பட்ட நிலையில் அவரின் குழுந்தை பிரசவிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, தாயார் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 35 வயதுப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கூடைப் பந்து போட்டி ஒன்றை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் பயணித் காரில் வைத்து அவர் சுடப்பட்டுள்ளார் என்றும், அப்போது அவருடன் காரில் மேலும் மூவர் இருந்தனர் எனவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். எனினும் ஏனைவர்களுக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளனர். குறித்த வாகனத்தை இலக்கு வைத்தே அந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். The post ஈற்ரோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்! Posted: 16 May 2016 08:28 AM PDT
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள். கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள். உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும். தேவையான பொருட்கள் வாழைப்பழம்- 1 ஆரஞ்சு- 1 பட்டைபொடி- அரை ஸ்பூன் சோயா மில்க் - அரைக்கப் வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம்அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது. ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும். ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது. மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும். The post கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் பானம்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதிகளில் காட்டுத் தீ Posted: 16 May 2016 08:25 AM PDT
ஃபோர்ட் சென் ஜோனின் வடக்கே விமான நிலைய வீதியில் 45 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியுள்ள தீ, இதுவரை சுமார் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவினைத் தீக்கிரையாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களின் முன்னர் ஆரம்பமான இந்த காட்டுத்தீ, சிறிய அளவிலான பகுதிகளில் மட்டுமே எரிந்துவந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையும், வேகமான காற்றும் தீப்பரவலின் வேகத்தினை அதிகரித்துள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகளில் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்களும், 13 உலங்குவானூர்திகளும், 16 கடற்படை உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. The post பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதிகளில் காட்டுத் தீ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்பு: நூறுக்கம் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் Posted: 16 May 2016 08:23 AM PDT
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெட்ரோ வன்கூவர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த தீ விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது. குறித்த தீ அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தை ஆக்கிரமித்துப் பற்றி எரியத் தொடங்கியதாகவும், 70 வீடுகளும், கீழ்த் தளமும், அங்கிருந்த வர்த்தக நிலையங்களும் முற்றாக அழிந்து போய் விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அங்கிருந்த அனைவரும் தப்பித்துக் கொண்டுள்ளதாகவும், தப்பியோடும் போது ஒருவருக்கு மாத்திரம் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தையும் இழந்த நிலையில் உள்ளனர் என வைட் றொக் நகரபிதா தெரிவித்துள்ளார். நேற்று நாள் முழுவதுமாக பற்றி எரிந்த தீ நேற்று இரவு வேளையே கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த தீப் பரவலால் அருகில் இருந்த தேவாலயம் ஒன்றும் தேசமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீச் சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சேதாரங்களின் பெறுமதி இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. The post தீக்கிரையான அடுக்குமாடிக் குடியிருப்பு: நூறுக்கம் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மிசிசாகாவின் உயர் தரப் பாடசாலை ஒன்றின் வெளியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 வயது மாணவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈற்ரோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 100பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர்.