Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Posted: 15 May 2016 05:59 PM PDT

m

mPickering பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட 21 வயது ஆண் நபரை கைது செய்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கத்திக்குத்துச் சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 1மணியளவில் Pickering பகுதியில் உள்ள மதுபானக் கடை ஒன்றின் அருகில் இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட எண்ணிக்கையான நபர்கள் இந்த சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்ததாகவும், அவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் காயமடைந்த இரண்டு நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே தற்போது 21 வயதான Alexander Cermano-Meyer என்பவர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டள்ளனர்.

The post கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

Posted: 15 May 2016 01:26 PM PDT

7u

7uஃபோர்ட் மக்முர்றி காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ட் மக்முர்றி பகுதியில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததை அடுத்து, அந்த பகுதியில் வசித்த சுமார் 25,000 மக்கள் வடக்கு நோக்கியும், 70,000 பேர் வரையில் தெற்கு நோக்கியும் இடம்பெயர்திருந்தனர்.

இதன்போது நெடுஞ்சாலைகளையும் காட்டுத்தீ பாதித்தமை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, பெருமளவானோர் தமது வாகனங்களை ஆங்காங்கே கைவிட்டுவிட்டு, வேறு மார்க்கங்கள் ஊடாக வேகமாக இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.7u

இதனால் நெடுஞசாலைகளின் ஓரங்களிலும், இரு திசை நோக்கிய வழித்தடங்களுக்கு நடுப் பகுதியிலும் ஏராளமான வாகங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக அல்பேர்ட்டா போக்குவரத்து திணைக்களத்தின் தொடர்பாடல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இவ்வாற கைவிடப்பட்ட வாகனங்களை மீட்டெடுத்து, உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃபோர்ட் மக்முர்றிக்கு தென்புறமாக நெடுஞ்சாலை 63 பகுதியில் இருந்து மாத்திரம் இதுவரை சுமார் 101 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அந்த வாகனங்கள் எட்மண்டனுக்கு வடக்கே சுமார் 230 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள Wandering River பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அந்த பகுதிக்கு நேரில் சென்று தங்களின் வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு

Posted: 15 May 2016 12:13 PM PDT

ui

uiநோர்த் யோர்க் பகுதியில் இன்று ஞாயிற்றுக் கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்தில் காவல்த்துறையினர் பிரசன்னமாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Mills வீதி மற்றும் Lawrence Avenue பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான கறுப்ப நிற வாகனம் ஒன்றை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

The post நோர்த் யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உந்துருளி மற்றும் மிதிவண்டி மோதி விபத்து: ஒருவர் காயம்

Posted: 15 May 2016 09:24 AM PDT

p

pநோர்த் யோர்க் பகுதியில் உந்துருளி மற்றும் மிதிவண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sheppard அவனியூ மேற்கு வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மிதிவண்டியில் பயணம் செய்தவரே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு" கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மிதிவண்டி ஓட்டுனர் 46 வயதான ஆண் நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உந்துருளி மற்றும் மிதிவண்டி மோதி விபத்து: ஒருவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™