Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பாடசாலை பேருந்து விபத்து

Posted: 14 May 2016 10:17 PM PDT

kgj

kgjமொன்றியலின் கிழக்குப் பிராந்தியத்தில் பதின்மவயதுடைய 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த விபத்து சம்பவித்தாக தெரிவிக்கப்படுகிறது.

காரில் பயணம் செய்த நபர் ஒருவரே உயிரிழந்து விட்டதாகவும், அதில் பயணித்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.kgj

உயர் பாடசாலை மாணவர்கள் 24 பேர்வரையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்த விபத்திற்கு வாகனத்தின் வேகம் காரணமாக இருக்கலாம் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post பாடசாலை பேருந்து விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Pickering பகுதியில் கத்திக்குத்து

Posted: 14 May 2016 06:46 PM PDT

h

hPickering பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றின் அருகில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், Liverpool மற்றும் Kingston வீதிகளை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட சண்டையில் இந்த கத்திக்குத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்h

இந்த கத்திக்குத்தில் காயமடைந்த இருவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒரு சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து வாகனம் ஒன்றில் தப்பி ஓடிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

The post Pickering பகுதியில் கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கனி

Posted: 14 May 2016 08:54 AM PDT

j

jகொய்யா பழத்தில் வைட்டமின் பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.

இதர பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இக்கனி ஒரு வரப் பிரசாதமாகும்.

மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன்(Lycopene)மற்றும் கரோட்டினாய்டுகள்(Carotenoids) புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.

குறிப்பு

இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.

கொய்யா பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் தோல் வியாதி அதிகரிக்கும்.

The post வளரும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கனி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அவகேடாவின் முக்கியத்துவம் நீங்கள் அறிந்ததுண்டா?

Posted: 14 May 2016 08:47 AM PDT

j

jகடந்த 2014 இல் லண்டனில் மட்டும் இது 4 பில்லியன் அளவில் நுகரப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இதைவிட அதிகமாக இதன் நுகர்வு உள்ளது.

வருங்காலத்தில் அதற்கு தேசிய பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பிருப்பதால் அது நுகர்வோரிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவகேடாவில் நமக்கென்ன அத்தனை பிரியம்?

இது அதிக சுவையை கொண்டது மட்டுமன்றி சலட்டுகள், ரொட்டி மற்றும் சுஷி ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்படக் கூடியது. அவை மிகவும் நல்ல பயனை தரக்கூடியன.

அவை நார்த் தன்மை கூடியது. நிரம்பிய கொழுப்பமிலங்களை கொண்டது. அன்ரியொக்சிடன், விட்டமின் B6, E, கொழுப்புக்கள் அத்துடன் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளதிலும் இரு மடங்கான கல்சியத்தையும் கொண்டுள்ளது.opoj

இது முன்னைய காலங்களில் யானை, குதிரை, மமத் போன்ற விலங்குகளால் உண்ணப்பட்டது.

ஆய்வுகளின் படி கிட்டத்தட்ட 13,000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு அரைக்கோளத்தில் இவ்வினத்தின் பெரும்பகுதி இல்லாமல் போயுள்ளது. வட மெரிக்காவில் 68 வீதம் வரையிலும், தென்னமெரிக்காவில் 80 வீதமானவையும் காணமல் போயுள்ளது.

இது பரம்பலடைவதற்கும், இனம்பெருகுவதற்கும் போதுமான பொறிமுறை இல்லாதமையே இவ்வினம் அழிவடைந்து வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

The post அவகேடாவின் முக்கியத்துவம் நீங்கள் அறிந்ததுண்டா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீரிழிவு நோயாளிகளே கறிவேப்பிலை சாதம் சாப்பிடுங்கள்!

Posted: 14 May 2016 08:43 AM PDT

h

hநீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்‌தத்தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

தொடர்ந்து, 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் என்பது தெ‌ரி‌ந்த ‌விடய‌ம்.

அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அதிகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் முடி கருப்பாகும்.

கறிவேப்பிலையில் விட்டமின் ஏ, பி,பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள்.மேலும் கைகால் வலி கண்பார்வைகுறைபாடு உண்டாகும்.

இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கறிவேப்பிலை சாதம்

பச்சரிசியை நன்றாக அலசி சுத்தம் செய்துபோதுமான அளவு தண்ணீர் விட்டு உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை உருவிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும் உருவி வைத்திருக்கும் கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

வாணலியில் போதுமான அளவு நெய்யை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து முந்திரிப் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்கவும்.

இவற்றை உதிரியாகப் பரப்பி வைத்திருக்கும் சாதத்தில் கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

சத்தான கறிவேப்பிலை சாதம் ரெடி.

The post நீரிழிவு நோயாளிகளே கறிவேப்பிலை சாதம் சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 14 May 2016 08:40 AM PDT

jkh

jkhநேற்று இரவு பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பர்ககிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது ஆண் ஒருவர் சுய நினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Dixie வீதி மற்றும் Queen வீதிக்கு அருகில் Lisa Streetஇல் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாம் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போது, 17 வயதான அந்த ஆண் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சுய நினைவற்ற நிலையில் கிடந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்தள்ளனர்.

காயமடைந்த அந்த பதின்மவயது ஆண் நபர் உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதை காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்களும் உடனடியாக காவல்த்துறையினரால் வெளியிடப்படவில்லை.

விசாரணைகளில் ஈடுபட்டுவரும் காவல்த்துறையினர், தடயங்கள் சாட்சிகளைத் தேடி வருவதுடன், தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post பிரம்டன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொழிற்றுறை காப்புறுதி சலுகைகளை விரிவுபடுத்துவதாக பிரதமர் அறிவிப்பு

Posted: 14 May 2016 08:27 AM PDT

igk

igkமத்திய அரசாங்கம் அதன் தொழிற்றுறை காப்புறுதி சலுகைகளை மூன்று பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்துவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட அல்பேட்டா மாநிலத்திற்கான பயணம் ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்த நிலையிலேயெ தனது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எட்மண்டன், தென் சாஸ்சாச்சுவான் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பகுதிகளுக்கே தொழிற்றுறை காப்புறுதி சலுகைகளை விரிவுபடுத்துவதாக நேற்றைய அந்த அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேலதிக பிராந்தியங்களை இணைத்துக்கொண்டுள்ளதன் மூலம் அதிகளவிலான மக்கள் தங்களுக்கான மேலதிக தொழில் காப்புறுதி உதவிகளை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.igk

இதேவேளை மத்திய அரசாங்கத்திற்கு அல்பேர்ட்டா மிகவும் துணையாக இருந்துவரும் நிலையில், மத்திய அரசும் மிகப்பெரும் தொகையினை அல்பேர்ட்டாவின் மேம்பாடுகளுக்காக செலவிடும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போது காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட இடங்கள் விரைவில் மீளக் கட்டியெழுப்பப்படுவதுடன் மட்டுமின்றி, இவ்வாறான காட்டுத்தீ அழிவுகள் ஏனைய பகுதிகளிலும் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தொழிற்றுறை காப்புறுதி சலுகைகளை விரிவுபடுத்துவதாக பிரதமர் அறிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™