Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


மார்க்கம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Posted: 12 May 2016 09:20 AM PDT

iu

iu7-11 மார்க்கம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Steeles Avenue இற்கு அருகில் 7380 McCowan வீதி பகுதியில் நேற்று இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்த நிலையத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, அங்கிருந்த அதிஸ்ரலாபச் சீட்டும், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்ற போதிலும், சந்தேக நபர்கள் யாரையும் அவர்கள் தடுத்து வைத்துள்ளனரா என்பது தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post மார்க்கம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் விபத்து: ஒருவர் படுகாயம்

Posted: 12 May 2016 09:16 AM PDT

y

yபிரம்டன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் நெடுஞ்சாலை 410 இன்று வடக்கு நோக்கிய வழித்தடத்தில், குயீன் விதிக்கு அருகே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த காவல்த்துறையினர், இந்த விபத்தில் ஒரு வாகனம் மட்டுமே தொடர்பு பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோசமான காயங்களுக்கு ஆயான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.y

விபத்துக்கான காணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விபத்தில் காயமடைந்தவர் தொடர்பிலான மேலதிக விபரங்களோ உடனடியாக அறிந்துகொள்ளமுடியவில்லை.

The post பிரம்டனில் விபத்து: ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தல்: பலர் கைது

Posted: 12 May 2016 09:13 AM PDT

hj

hjகொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பில் 15 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் கனடா அதிகாரிகள் 220 கிலோகிராம் கொக்கையின் மற்றும் அமெரிக்காவில் இருந்து போதைப் பெருட்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவிருந்த 2மில்லியன் டொலர் பணத்தையும் கைப்பற்றியதாக கனேடிய மத்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டள்ளனர்.

இது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மற்றொருவர் இத்தாலியில் இருக்கம் இடத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும், 15ஆவது நபர் தப்பிஓடியவிட்டதாகவும் காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.hj

குறித்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் மொத்தமாக 1.4 தண் போதைப் பொருட்களைக் இறக்குமதி செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மொன்றியல் பகுதியில் வசிக்கின்றனர் என்றும், ஒருவர் தற்போது ஒன்ராறியோவின் கிங்ஸ்ரனில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணக் காவல்த்துறை, Montreal அதிகாரிகள், கனடா எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, கனடா வருமானவரித்துறை பிரிவு என்பனவும் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளில் பங்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

The post கொக்கெய்ன் போதைப் பொருள் கடத்தல்: பலர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அல்பேட்டா காட்டுத் தீ: நிவாரண நிதியாக 500,000 டொலர்களை வழங்குகிறது ஒன்ராறியோ

Posted: 12 May 2016 09:02 AM PDT

io

ioஅல்பேட்டா மாநிலத்திற்கு உதவும் வகையில் அரை மில்லியன் டொலரை நிவாரண நிதியாக ஒன்ராறியோ அரசாங்கம் வழங்கவுள்ளது.

இதற்கான அறிவிப்பைஒன்ராறியோ முதல்வர் கதலின் வின் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய அந்த அறிவிப்பில் ஃபோட் மக்மரே காட்டுத் தீயினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரண முயற்சிகளுக்கு உதவும் வகையில் 500,000 டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நிவாரண நிதியை கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அல்பேட்டாவின் காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்ராறியோ தீயணைப்பு வீரர்களும் பங்களிப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் என 119 பேரை அல்பேட்டாவிற்கு அனுப்புவதாக ஒன்ராறியோ அரசாங்கம் உறுதியளித்திருந்த நிலையில், அவர்களில் 82 பேர் தீப் பரவலைக் கட்டுப்படுத்தும் அல்பேட்டாவின் பகுதிகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

The post அல்பேட்டா காட்டுத் தீ: நிவாரண நிதியாக 500,000 டொலர்களை வழங்குகிறது ஒன்ராறியோ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™