Tamil Star |
- பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஃபோர்ட் மக்முர்றிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்
- 10 வயது சிறுவனைக் காணவில்லை
- ஃபோர்ட் மக்முர்றே காட்டுத் தீயில் 90சதவீதமான கட்டடங்கள் தப்பிப்பிழைத்துள்ளன
- மிலிற்றனில் பாதசாரி மீது வாகனம் மோதி விபத்து
- சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம்
| பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஃபோர்ட் மக்முர்றிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் Posted: 10 May 2016 07:04 PM PDT
சமூகத்தை மீண்டும் கட்டிபெயழுப்புவதற்கு உதவுவதாக அவருடைய லிபரல் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளமை தொடர்பில் எதிர்கொண்ட கேட்விகளக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இந்த அறிவிப்பை நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார். இதன்போது 80,000 மக்களை வெளியேறச் செய்த வடக்கு அல்பேட்டாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயைக் கட்டப்படுத்த போராடிய எண்ணற்ற தீயணைப்பு வீரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் ஏனைய நிவாரண அமைப்புக்களுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கியுள்ள கனேடிய மக்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றுத் திங்கட்கிழமை அல்பேட்டாவின் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டதுடன், அங்கிரந்த பெரும்பாலான வீடுகளையம் கட்டிடங்களையும் தீயணைப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார். எனினும் தற்போது குடியிருப்பாளர்கள் அங்கு திரும்புவது பாதுகாப்பானது அல்ல என்றும், மின்சாரம், நீர் விநியோகம், எரிவாயு விநியோகம் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் The post பிரதமர் ஜஸ்ரின் ரூடோ ஃபோர்ட் மக்முர்றிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 May 2016 12:17 PM PDT
Hamza Azeez என்ற அந்த சிறுவன் Islington Avenue மற்றும் Rexdale Boulevard பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இருந்து காலை 11.15 மணியளவில் வெளியேறியிருந்த நிலையில் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது குறித்த சிறுவனை அந்த பாடசாலையின் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர். சிறுவன் நான்கு அடி பத்து அங்குல உயரமும் நடுத்தரப் பருமனான கட்டான உடல் வாக்கும், சுருளான கறுப்பு நிறை முடியும் கொண்டவர் என்றும, சாம்பல் நிறக் காற்சட்டையும், நீல நிற ரீ சேட்டும் அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் தொடாபில் தகவல் தெரிந்தவர்கள் (416) 808-2300 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது (416) 222-TIPS (8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். The post 10 வயது சிறுவனைக் காணவில்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஃபோர்ட் மக்முர்றே காட்டுத் தீயில் 90சதவீதமான கட்டடங்கள் தப்பிப்பிழைத்துள்ளன Posted: 10 May 2016 09:43 AM PDT
தீயினால் அழிவடைந்த நகரின் பகுதிகளை நேற்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்ட அந்த மாநிலத்தின் முதல்வர் ரிச்சல் நோற்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். மருத்துவமனை மற்றும் பெரும்பாலான பாடசாலைகள் அப்படியே காணப்படுகின்றன என்றும், நகரில் காணப்பட்ட 25,000 கட்டங்களில் சுமார் 2,400 கட்டடங்களே அழிவடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இந்த தீ பரம்பலில் அந்த நகரில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட குறித்தும் அவர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஃபோர்ட் மக்முர்றே பகுதியில் ஏற்பட்ட தீ சம்பவத்தினால் அந்த நகரில் இருந்த சுமார் 80,000 இற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது காட்டுத் தீ தணிப்பு கட்டுப்பாட்டினுள் வந்துள்ள நிலையில், குறித்த பகுதி மக்கள் தங்களின் இடங்களிற்கு திரும்புவதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் பிடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். The post ஃபோர்ட் மக்முர்றே காட்டுத் தீயில் 90சதவீதமான கட்டடங்கள் தப்பிப்பிழைத்துள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிலிற்றனில் பாதசாரி மீது வாகனம் மோதி விபத்து Posted: 10 May 2016 09:07 AM PDT
நேற்று இரவு 9 மணிக்கு சற்று முன்பாக இடம்பெற்ற இந்த சம்வம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர். குறித்த விபத்தை அடுத்து விசாரணைக்காக நெடுஞ்சாலை 25 மற்றும் James Snow Parkway என்பவற்றிற்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 401 இன் வழித்தடங்கள் மூடப்பட்டிருந்ததுடன், சில மணித்தியாளங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் வாகனத்தால் மோதுண்ட பாதசாரியின் வயது பால் தொடர்பான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post மிலிற்றனில் பாதசாரி மீது வாகனம் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 May 2016 08:45 AM PDT
இதில் பல வகையான ரெசிபிக்கள் செய்யலாம், அதில் ஒன்றான மாம்பழ ஐஸ்க்ரீம் இதோ தேவையான பொருட்கள் மாம்பழம்- 4 சர்க்கரை- 300 கிராம் பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன் திராட்சை- 2 ஸ்பூன் செய்முறை நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சீவி, சதை பாகத்தை துண்டுகளாக்கி சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகிவிடும். பின்னர் இதில் பால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். இதை குளிர வைத்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி, திராட்சை தூவி பரிமாறினால் ஐஸ்கிரீம் தயார்!!! The post சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

காட்டத் தீயினால் பாதிக்கப்பட்ட அல்போட்டாவின் ஃபோர்ட் மக்முர்றி பகுதிகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை செல்ல இருப்பதாக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
Rexdale குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் இன்று காலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், சிறுவனைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அல்பேட்டா மாநிலத்தின் ஃபோர்ட் மக்முர்றே இல் கடந்த நாட்களாக எரிந்த காட்டுத் தீ பரம்பலில் இருந்து நகரின் 90சதவீதமான கட்டடங்கள் தப்பிப்பிழைத்துள்ளதாகவும், 10 சதவீதமான கட்டடங்களே தீயினால் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலிற்றனின் நெடுஞ்சாலை 401 இல் வாகனம் ஒன்று பாதசாரி ஒருவரை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும். இந்த தித்திக்கும் கனியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.