Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தேர்தல் தினத்துக்கு 'குடி'மகன்களுக்கு 'ஜாக்பாட்' '5 புல்!' வீட்டிலேயே 'சரக்கு' அடிக்க சட்டம் அனுமதி

Posted: 09 May 2016 09:54 AM PDT

தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், 'குடி' மகன்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்கும் விதமாக, ஒவ்வொருவரும் தலா, ஐந்து, 'புல்' பாட்டில்கள் வாங்கி கொள்ளவும், வீட்டிலேயே, 'சரக்கு' அடிக்கவும், தமிழ்நாடு மதுபான சட்டம் அனுமதி அளித்துள்ளது.

ஓட்டுக்காக பணம், பரிசு மற்றும் மதுபானம் கொடுத்து, வாக்காளர்களை கவனிப்பது, தமிழக கட்சிகளின் வழக்கம். இம்முறை, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷன் போராடுகிறது. பட்டுவாடாவை தடுக்க, வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஆவணங்கள் இல்லாமல் எடுத்து ...

நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹரிஷ் ராவத்..வெல்வாரா? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திடீர் திருப்பம்

Posted: 09 May 2016 10:01 AM PDT

புதுடில்லி,: உத்தகண்ட் மாநில சட்டசபையில், ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு மீது, இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை, சுப்ரீம் கோர்ட் மீண்டும் உறுதி செய்தது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது பேர், இதில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றும், கோர்ட் திட்டவட்டமாகக் கூறியது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அரசுக்கு எதிராக, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் திடீரென போர்க்கொடி துாக்கியதால், அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில், மே, 10ல், ஹரிஷ் ராவத் அரசு ...

மோடி வாங்கிய பட்டம்: வெளியிட்டது பா.ஜ.,: கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க கோரிக்கை

Posted: 09 May 2016 10:06 AM PDT

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, படித்து வாங்கிய பட்டங்களை, நேற்று வெளியிட்ட, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, ''மோடி மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.டில்லி பல்கலையில், 1978ல், பி.ஏ., பட்டத்தையும், குஜராத் பல்கலையில், 1983ல் எம்.ஏ., பட்டத்தையும், மோடி வாங்கியதாக தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், 'இது பொய்யான தகவல்' என, ...

ஜெ., சாபம்: தீர்க்குமா யாகம்?

Posted: 09 May 2016 10:07 AM PDT

'அதாவது மக்கழே... இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கிற போர். இதை நான் எதுக்கு சொல்றேன்னா... ஜெயலலிதாவும், கருணாநிதியும்... நேரம் அதிகமாயிட்டே இருக்கு. சீக்கிரமா பேசி முடிக்கணும். நான் ஆட்சிக்கு வந்ததும்...ஆங்...ஷ்ஷ்...யாரும் பேசக்கூடாது. அப்புறம் நான் என்ன பேசணுங்கிறதையே மறந்துடுவேன். அதாவது மக்கழே...'

உளுந்துார்பேட்டை தொகுதியில், நேற்று இரவு, ஒரு இளவட்டம் இப்படி பேசி முடிக்க, சுற்றி நிற்கும் நண்பர்கள், 'ஹேய்ய்ய்...' என, கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். 'நாளைக்கும் நம்ம கேப்டன் பிரசாரம் இங்கே இருக்குல்ல?' ஒரு குரல் கேட்க, 'ஏய்... தேர்தல் முடியுற வரைக்கும் ...

சோனியா குறித்த பிரதமர் பேச்சால் பார்லிமென்டில் கடும் அமளி

Posted: 09 May 2016 10:19 AM PDT

புதுடில்லி,:தேர்தல் பிரசார கூட்டத்தில், ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியாவின் பெயரை, பிரதமர் மோடி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று பார்லிமென்டில் கடுமையாக கோஷம் எழுப்பினர்; இதனால், இரு சபைகளும் முடங்கின.

கேரளா மற்றும் தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாக, இத்தாலி கோர்ட் கூறியுள்ளதாக, பிரதமர் மோடி பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கடுமையாக கோஷமிட்டனர். இதனால், ...

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்: கமிஷன் தீவிர ஆய்வு

Posted: 09 May 2016 10:25 AM PDT

தமிழக கட்சிகளின் தேர்தல் அறிக்கையை, தேர்தல் கமிஷன் கேட்டிருப்பது அரசியல் கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை எவ்வாறு அமைய வேண்டும் என, தேர்தல் கமிஷன் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்து தெரிவிக்க வேண்டும். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக வாக்காளர்கள் நம்பிக்கை பெற வேண்டும்.
கடன் தள்ளுபடி
ஆனால், சட்டசபை தேர்தலைஒட்டி, கட்சிகள் வெளியிட்ட ...

திருவாரூர் மாநகராட்சியாகும் பிரசாரத்தில் ஸ்டாலின் உறுதி

Posted: 09 May 2016 10:33 AM PDT

திருவாரூர் :''திருவாரூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர் அருகே, கொரடாச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் பொதுமக்களை சந்திப்பவர்கள் தி.மு.க.,வினர் அல்ல. வயதான காலத்திலும், சாலை வழியாக வாகனத்தில் வந்து, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பவர் தி.மு.க., தலைவர்கருணாநிதி.ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும், ஹெலிகாப்டரில் பறந்து வந்து, எப்போதாவது மக்களை ...

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு

Posted: 09 May 2016 10:41 AM PDT

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்; மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக கூறியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது.'இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில், 'மே, 1 மற்றும் ஜூலை, 24 ஆகிய தேதிகளில், ...

எல்லாம் ரெடியா இருக்கா? : ஜைதி இன்று ஆலோசனை

Posted: 09 May 2016 11:32 AM PDT

சென்னை: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, இன்று, தமிழக அரசு அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடு, பாதுகாப்புகுறித்து, தமிழக அரசு தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., உள்துறை செயலர், மதுவிலக்கு அமல் பிரிவு கமிஷனர், வருமானவரித் துறை கமிஷனர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருடன்,இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, இன்று காலை 11:00 மணிக்கு, வீடியோ கான்பரன்சிங் மூலம், ஆலோசனை நடத்த உள்ளார்.பணப் பட்டுவாடாவை தடுப்பது தொடர்பாக, ...

எம்.பி.,க்கள் 'ஆப்சென்ட்' சபாநாயகர் காட்டம்

Posted: 09 May 2016 11:49 AM PDT

புதுடில்லி:லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, தொடர்புடைய இரு எம்.பி.,க்கள், சபைக்கு வராததற்கு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்தார்.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, ஏப்., 25ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடப்பதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சபைக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கூட, பிரசாரத்திற்காக சென்று விட்டனர். இதனால், எம்.பி.,க்களின் எண்ணிக்கை மிக ...

இத்தாலி என்றாலும் இந்தியா தான் என் வீடு: மோடி பேச்சுக்கு சோனியா பதில்

Posted: 09 May 2016 01:43 PM PDT

திருவனந்தபுரம்: ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்.தலைவர் சோனியாவை பா.ஜ. பார்லி.யில் வறுத்தெடுத்து வருகிறது. தமிழகம், கேரள சட்டசபை தேர்தல்களில் பிரசாத்தின் போது, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்.தலைவர் சோனியாவிற்கு தொடர்பு இருப்பதாக இத்தாலி யின் மிலன் கோர்ட் கூறியுள்ளது. சோனியா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என மோடியும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக காங். தலைவர் சோனியா திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் வாய்திறந்து பேசினார்.

அவர் கூறியது, எனது குடும்பம் இத்தாலியில் உள்ளது. எனது தாய் இன்னும் உயிருடன் உள்ளார். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™