Tamil News | Online Tamil News |
- மஹாராஷ்டிரா ஆயுத கிடங்கில் நிகழ்ந்த தீ விபத்தில்... சதியா? அதிகாலை சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 20 பேர் பலி
- மோடி தொகுதியில் அமித் ஷா களைகட்டும் உ.பி., அரசியல்
- மோடி பிரதமர் தான்; மன்னர் இல்லை: மருமகன் மீதான புகாரால் சோனியா ஆவேசம்
- தமிழக முதல்வரின் டில்லி 'விசிட்' எப்போது?
- உலகில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்: ஜெட்லி
- அங்கீகாரம் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி... ஊசலாட்டம்1:மூடக்கோரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
- ஜெயலலிதா வெற்றி செல்லுமா: கமிஷனுக்கு கருணாநிதி கேள்வி
- பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது? சி.பி.ஐ., விசாரணை கேட்குது தி.மு.க.,
- திருப்பரங்குன்றத்தில் போட்டியா? * விஜயகாந்த் மறுப்பு
- பிணமாக மீட்கப்பட்ட குழந்தை: அகதிகளின் துயரம் உலகுக்கு உணர்த்துமா ?
| Posted: 31 May 2016 09:49 AM PDT நாக்பூர், :மஹாராஷ்டிர மாநிலம், புல்காவில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளவாட கிடங்கில், நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட, 20 பேர் பலியாகினர்; 17 பேர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ராணுவம், சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், நாட்டின், 15 இடங்களில் உள்ள மத்திய ஆயுதக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரியதும், ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய ராணுவத் தளவாட கிடங்கு, மஹாராஷ்டிர மாநிலம், வார்தா ... |
| மோடி தொகுதியில் அமித் ஷா களைகட்டும் உ.பி., அரசியல் Posted: 31 May 2016 09:51 AM PDT வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில், மதிய உணவு சாப்பிட்டார். உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல், அடுத்தாண்டு நடக்கிறது. இதனால், மத்திய அமைச்சர்களும், பா.ஜ., தலைவர்களும் இப்போதே தேர்தல் களத்தில் இறங்கி விட்டனர். அலகாபாத்தில் நேற்று விவசாயிகள் பங்கேற்ற பேரணிநடந்தது. இதில், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி யான, வாரணாசிக்கு உட்பட்ட ஜோகியாபூருக்கும், அமித் ஷா சென்றார். அங்கு, கிரிஜா பிரசாத் பின்ட் என்ற ... |
| மோடி பிரதமர் தான்; மன்னர் இல்லை: மருமகன் மீதான புகாரால் சோனியா ஆவேசம் Posted: 31 May 2016 10:05 AM PDT புதுடில்லி: ''என் மருமகன் ராபர்ட் வாத்ரா, ஆயுத டீலர் சஞ்சய் பண்டாரி இடையே, ரகசிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, விசாரணை நடத்த தயாரா?'' என, மத்திய அரசுக்கு, காங்., தலைவர் சோனியா சவால் விடுத்துள்ளார். மேலும், ''நரேந்திர மோடி, பிரதமர் தான்; மன்னர் இல்லை,'' என்றும், அவர், ஆவேசமாக கூறியுள்ளார். ஆயுத டீலர் சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில், கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும், அதில் கிடைத்த ஆவணங்கள் மூலம், சஞ்சய்யுடன், சோனியா மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. ... |
| தமிழக முதல்வரின் டில்லி 'விசிட்' எப்போது? Posted: 31 May 2016 10:06 AM PDT பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, எப்போது டில்லிக்கு வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சியமைத்த பின், ஒவ்வொரு மாநில முதல்வரும், டில்லிக்கு வந்து, பிரதமர் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்திப்பது மரபு. மரியாதை நிமித்தமாக நடக்கும் இந்த சந்திப்பின்போது, தங்கள் மாநிலங்களுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை, பிரதமரி டம், முதல்வர்கள் வைப்பதும் வழக்கம்.தமிழக முதல்வராக, ஜெயலலிதா, மீண்டும் சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமரை மரியாதை நிமித்தமாக ... |
| உலகில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்: ஜெட்லி Posted: 31 May 2016 10:21 AM PDT டோக்கியோ,:''சீனப் பொருளாதாரம் மந்தமாகி வருவதால், உலக நாடுகளில், இந்தியா அதிக சக்திவாய்ந்த, பொருளாதார உந்து சக்தியாக உருவாக முடியும்,'' என, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவரும், நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, டோக்கியோவில் நடந்த, 'ஆசியாவின் எதிர்காலம்' என்ற மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளில், உலகின், 50 சதவீத பொருளாதார வளர்ச்சியை, சீனா, தன் தோள்களில் தாங்கிக் கொண்டது. தற்போது, சீனப் பொருளாதாரம், மந்தநிலையில் உள்ளது. இச் சூழ்நிலையில், இந்திய ... |
| Posted: 31 May 2016 10:55 AM PDT தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது. இப்பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அளித்த அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், இப்பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும். .தமிழகத்தில், 6,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், பள்ளி கல்வி துறையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள், நில அளவு, கட்டடங்கள் குறித்த விதிமுறைகளை, 2004ல், கல்வியாளர் ... |
| ஜெயலலிதா வெற்றி செல்லுமா: கமிஷனுக்கு கருணாநிதி கேள்வி Posted: 31 May 2016 11:14 AM PDT சென்னை,: தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:' கடந்த, 1971ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, முன்னாள் பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம், 1975ல் தீர்ப்பளித்தது.அந்தத் தீர்ப்பை அளித்தவர் நீதிபதி ஜகன் மோகன்லால் சின்ஹா. அவர், இந்திரா, தன் தேர்தல் வெற்றிக்காக, இந்திய அரசின், 'கெஜட்' பதிவு பெற்ற அதிகாரியாக பணியாற்றிய யஷ்பால் கபூரை, தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திய விதி மீறலையும், தேர்தல் கூட்டங்களில், உத்தர பிரதேச அரசு செய்த ... |
| பிடிபட்ட ரூ.570 கோடி யாருடையது? சி.பி.ஐ., விசாரணை கேட்குது தி.மு.க., Posted: 31 May 2016 11:15 AM PDT சென்னை:'சட்டசபை தேர்தல் நேரத்தில், கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோருக்கு, தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்மனு அனுப்பி உள்ளார். அவரது மனு விவரம்:மே, 13 நள்ளிரவு, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுகா செங்கபள்ளி என்ற இடத்தில், தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு குழு, மூன்று கன்டெய் னர் லாரிகளை மடக்கி பிடித்தது. அதில், 570 கோடி ... |
| திருப்பரங்குன்றத்தில் போட்டியா? * விஜயகாந்த் மறுப்பு Posted: 31 May 2016 11:23 AM PDT 'திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், நீங்கள் போட்டியிட வேண்டும்' என, கட்சியினர் தெரிவித்த ஆலோசனையை, விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்ததோடு, 'டிபாசிட்'டையும் இழந்தது. உளுந்துார்பேட்டையில் போட்டியிட்ட விஜய காந்தும், 'டிபாசிட்' இழந்தார். இது, தே.மு.தி.க.,வினர் மத்தியில், பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.இந்நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சீனிவேல் மரணம் மற்றும் ஏற்கனவே தேர்தல் ... |
| பிணமாக மீட்கப்பட்ட குழந்தை: அகதிகளின் துயரம் உலகுக்கு உணர்த்துமா ? Posted: 31 May 2016 01:34 PM PDT மிலன்: இத்தாலி அருகே அகதிகள் சென்ற 3 படகுகள் லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக வெளியான தகவலில், பிணமாக மீட்கப்பட்ட ஒரு வயது பச்சிளம் குழந்தை புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி கல் நெஞ்சையும் கரைய வைத்தது. சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா, சூடான், எரித்ரியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வழியி்ன்றி வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறும் பரிதாப நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது.. இவர்களில் ஆண்கள்,பெண்கள்,முதியோர், பச்சிளம் குழந்தைகள் என ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |