Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


* மூன்று தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல். வாய்ப்பு! தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தகவல்

Posted: 30 May 2016 09:27 AM PDT

தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.சட்டசபை தேர்தல் மே 16ல் நடந்தது. தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிக அளவில் நடந்ததாக புகார் எழுந்ததால் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் மே, 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்பின் ஜூன் 13க்கு தள்ளிவைக்கப்பட்டது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில் ...

முதலீட்டு மோசடி திட்டங்களை தடுக்க அரசு...தீவிரம் புதிய சட்டம் கொண்டு வர அதிரடி திட்டம்

Posted: 30 May 2016 09:38 AM PDT

புதுடில்லி,: முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில், பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று, அதற்குரிய வட்டி மற்றும் அசலை திருப்பி தராமல் ஏமாற்றும் மோசடியை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெறும் தனிநபர்கள், நிறுவனங்கள், அடுத்தடுத்து சேரும் முதலீட்டாளர்கள் அளிக்கும் பணத்தில் இருந்தே வட்டி அளிப்பது போன்ற சலுகைகளை தருகின்றனர். புதிய முதலீட்டாளர்கள் சேராத நிலையில் இந்த நிறுவனங்கள் முடங்கி விடுகின்றன. 'பொன்சி' எனப்படும் இதுபோன்ற போலி நிதித் திட்டங்களில் சேரும் பொதுமக்கள், ...

152 அடியாக உயருமா பெரியாறு நீர்மட்டம்: கேரள முதல்வர் கருத்தால் எதிர்பார்ப்பு

Posted: 30 May 2016 09:40 AM PDT

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 152 அடியாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக- - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய, ஐந்து மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. அணையின், மொத்த உயரம், 152 அடி; நீர் கொள்ளளவு, 10.5 டி.எம்.சி.அணையின் நீர்மட்டத்தை, 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என, கேரளா பிடிவாதம் பிடித்தது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 2014 மே மாதம், அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் ...

பருப்பு விலையை கட்டுப்படுத்த அதிரடி: நேரடி இறக்குமதி செய்ய அரசு திட்டம்

Posted: 30 May 2016 09:42 AM PDT

பருப்பு விலை உயர்வு பெரும் சவாலாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த, மத்திய அரசே நேரடியாக களமிறங்குகிறது. மியான்மர் நாட்டில் இருந்து மிக அதிக அளவு, பருப்பு வகைகளை, அரசே, நேரடியாக இறக்குமதி செய்து கையிருப்பு வைத்து, விலை உயர்வின் போது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

பருப்பு வகைகளை அதிக அளவு பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. அதுபோலவே, அதிக அளவில் பருப்பு உற்பத்தியும் செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடுமையான வறட்சி, விவசாயம் நசிந்து போனது போன்ற காரணங்களால், பருப்பு உற்பத்தி, இரண்டு ஆண்டுகளாக சரிவடைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் ...

தமிழக மின் நிலைமை முதல்வர் ஜெ., ஆய்வு

Posted: 30 May 2016 09:45 AM PDT

சென்னை:தமிழகத்தின் மின் நிலைமை குறித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று ஆய்வு செய்தார்.தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் ஞானதேசிகன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை மற்றும் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலர் பழனியப்பன், மின் வாரியத் தலைவர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி, மின் வாரியத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மின் நுகர்வோருக்கு, 100யூனிட் ...

ஜெயலலிதா செயல்: கருணாநிதி விமர்சனம்

Posted: 30 May 2016 09:48 AM PDT

சென்னை:'அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இடமளித்தது தொடர்பாக, ஜெயலலிதா அளித்த விளக்கத்திற்கும், அரசியல் நாகரிகத்திற்கும் தொடர்பில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., கூட்டணி கட்சிகள், 60 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இது, 15 சதவீதம் தான். இதற்கு காரணமாக, கூட்டணி கட்சிகளை, நான் சிறிதும் குறை கூற விரும்பவில்லை.அந்த தொகுதிகளில், தி.மு.க., உறுப்பினர்கள், அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு, அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என, ...

அரசு இணையதளங்கள் மோசம் : தரச்சோதனையில் அம்பலம்

Posted: 30 May 2016 09:51 AM PDT

புதுடில்லி:மத்திய அரசின், 926 இணையதளங்கள், உரிய முறையில் செயல்படாமல் இருப்பது, சமீபத்தில் நடத்தப்பட்ட தரச்சோதனையில் தெரிய வந்து உள்ளது.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் மூலம், எளிமையான நிர்வாகம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன், மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக, இணையதளங்கள் மற்றும் இணையம் வாயிலான தொடர்பை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், மத்திய அரசின், 957 இணையதளங்களின் சேவை குறித்து, தரச்சோதனை மற்றும் தரச்சான்று இயக்குனரகம், சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், 31இணையதளங்கள் மட்டுமே, மத்திய அரசின் ...

ஏழைகளுக்கு 6.73 லட்சம் வீடுகள் :குடிசை மாற்று வாரியம் திட்டம்

Posted: 30 May 2016 10:06 AM PDT

தமிழகத்தில், நகர்ப்புற ஏழைகளுக்கு, 6.72 லட்சம் தனி வீடுகளை குறைந்த செலவில் கட்டுவதற்கான புதிய திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் உருவாக்கி உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக, குடிசை பகுதி மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. இவ்வகையில், தற்போதைய நிலவரப்படி , 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு, நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.கடந்த, 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சியில், 'தொலைநோக்கு திட்டம் - 2023' அறிவிக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததை அடுத்து,தொலைநோக்கு திட்டத்தில் கூறியவற்றை செயல்படுத்தும் பணிகள் முடுக்கி ...

ஆயுத விற்பனையாளருடன் ராபர்ட் வாத்ரா ரகசிய தொடர்பு?

Posted: 30 May 2016 10:57 AM PDT

புதுடில்லி,: லண்டனில், 'பினாமி' பெயரில் இருந்த கட்டடத்தை சீரமைப்பதில், ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரியுடன், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு, ரகசிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. இவரது கணவர் ராபர்ட் வாத்ரா. மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஹரியானாவில் இவர், பல்வேறு நில மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்த, ஹரியானாவில் உள்ள, மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த ...

தபாலில் கங்கை தீர்த்தம்; தபால் துறை நடவடிக்கை

Posted: 30 May 2016 11:51 AM PDT

புதுடில்லி : கங்கை தீர்த்தத்திற்காக, இனி காசிக்கு போக வேண்டாம்; தபாலில் பார்சல் மூலம், வீட்டிற்கே அனுப்பி வைக்கும் சேவையை, தபால் துறை விரைவில் துவக்க திட்டமிட்டு உள்ளது.

புனிதமாக கருதப்படும் கங்கை நதி தண்ணீரை, காசி போன்ற இடங்களுக்கு செல்லும் ஹிந்துக்கள் எடுத்து வருகின்றனர். இதனால், கங்கை தண்ணீரை, பார்சல் மூலம் வழங்க, தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: தபால் துறையின், இ - காமர்ஸ் பிரிவு, பல்வேறு பொருட்களை மக்களுக்கு பார்சல் மூலம் கொண்டு சேர்க்கிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™