Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அடிப்படை பணிகளை முடிக்க... வேகம்! சட்டசபை தேர்தலில் பட்ட அடியை சமாளிக்க அரசு திட்டம்

Posted: 28 May 2016 07:40 AM PDT

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சிகளில் நிலுவையில் உள்ள, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை முடிக்க, தமிழக அரசால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு முன், இப்பணிகளை முடித்து, சட்டசபை தேர்தலில் பட்ட அடியை போக்கவும், கடந்த உள்ளாட்சி தேர்தலைப் போல, முழு வெற்றியை உறுதி செய்யவும், அ.தி.மு.க., அரசு தீவிரம் காட்டி வருகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில், சாலை அமைத்தல், கட்டடம் கட்டுதல், குடிநீர் திட்டங்கள், கழிவுநீர் பாதை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள், ...

'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு

Posted: 28 May 2016 07:52 AM PDT

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், போட்டியிட்ட, 104 தொகுதிகளில், ஒன்றில் மட்டுமே, தே.மு.தி.க., 'டிபாசிட்' பெற்றுள்ளது.

இதனால், கட்சியின் எதிர்காலம் குறித்து, கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் நிலை தொண்டர்கள் வரையில், பலரும் அச்சம் கொண்டுள்ளனர்.இதனால், தோல்வி குறித்து ஆய்வு செய்யும் பணியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறங்கி உள்ளார்.
அதற்காக, கட்சியின் மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம், விஜயகாந்த் பேசி வருகிறார்.அப்போது, 'கட்சியில் நிறைய உள்ளடி வேலைகள் நடந்துள்ளது. அதற்கு, மாவட்ட செயலர்கள்தான் ...

'காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம்:' தி.மு.க., செயற்குழுவில் வெடித்த நிர்வாகி

Posted: 28 May 2016 08:01 AM PDT

'கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்; தயவு செய்து, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டாம்' என, தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில், குளித்தலை சிவராமன் ஆவேசமாக பேசினார்.

சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, தி.மு.க., செயற்குழுக் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.
பொது செயலர் க.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி மாநில செயலர்
கனிமொழி, முதன்மை செயலர் துரைமுருகன், துணை பொது செயலர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி மற்றும் வெற்றி பெற்ற ...

மத்திய அரசு 'சர்வே'யில் ரயில்வே துறை... அசத்தல்! தூய்மை இந்தியா திட்டத்துக்கு பின்னடைவு

Posted: 28 May 2016 08:44 AM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று

இரண்டாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில்வே துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக சமீபத்திய, 'சர்வே'யில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களான, 'டிஜிட்டல் இந்தியா' மற்றும் துாய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்கள்,பொதுமக்களிடையே போதிய வரவேற்பை பெறத் தவறியுள்ளன.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு, 2014 மே, 26ல், பதவியேற்றது. பார்லிமென்ட் தேர்தலின்போதே, பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் பல வாக்குறுதிகளை அளித்தன.
இதனால், மோடி ...

வெயில் கொளுத்தினாலும் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு உறுதி திட்டவட்டம்! ஒத்திவைப்பு கோரிக்கையை நிராகரித்தது பள்ளி கல்வித்துறை

Posted: 28 May 2016 09:30 AM PDT

'கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி முதல், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும், மே, 1ம் தேதி முதல் விடுமுறை ...

30 சதவீத பெண்களுக்கு சிறுவயதில் திருமணம் கொடுமை! மத்திய அரசின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

Posted: 28 May 2016 11:05 AM PDT

புதுடில்லி: இந்தியாவில், 30 சதவீத பெண்கள், 18 வயது நிறைவதற்கு முன் திருமணம்

செய்து கொள்வதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலர், 10 வயது கூட
நிறைவடையாதோர் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நம் நாட்டில், பெண்ணின் திருமண வயது, 18 ஆகவும், ஆணின் திருமண வயது, 21 ஆகவும் உள்ளது. இந்த வயதுக்கு முன் திருமணம் செய்வது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ், குற்றமாக கருதப்படும்.
இந்நிலையில், 'நாட்டில், தற்போது திருமணமாகும் பெண்களில், 30 சதவீதத்துக்கு மேல், 18 வயது நிரம்பாதோர்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொகை கணக்கீடு அலுவலகம் தகவல் ...

தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Posted: 28 May 2016 11:05 AM PDT

ஷில்லாங்: வட கிழக்கு மாநிலமான, மேகாலயாவுக்கு சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பழங்குடி மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து மகிழ்ந்தார்.

இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஷில்லாங்கில், மூன்று புதிய ரயில் சேவைகளை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ''தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக விளங்கும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக,போக்குவரத்து வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.
பின், வடகிழக்கு பிராந்திய கவுன்சிலின், 65-வது மாநாட்டிலும் பங்கேற்றார். இதையடுத்து, நேற்று ...

கருணாநிதி பிறந்த நாளுக்கு பின் களையெடுப்பு - கொங்கு மண்டல தோல்வி குறித்து விசாரணை

Posted: 28 May 2016 11:12 AM PDT

தமிழகத்தில், கொங்கு மண்டலமான, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களில், தி.மு.க., கூட்டணி, 47 தொகுதிகளில் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி

பெற்றுள்ளது.
அதே நேரத்தில், இந்த மண்டலத்தில், 42 தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதால், அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.கொங்கு மண்டல தோல்வி குறித்து, தி.மு.க., தலைமை விசாரணை நடத்தி வருகிறது.
இதையடுத்து, விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலுக்குள், கொங்கு மண்டலத்தில் கட்சியை சீரமைக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.இப்போதுள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் நீடித்தாலோ ...

ஜெட்லி சென்னைக்கு வராதது ஏன்? அம்பலமாகும் 'அழைப்பு அரசியல்'

Posted: 28 May 2016 11:18 AM PDT

கோல்கட்டாவுக்கு சென்று, மம்தாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, சென்னைக்கு வராத காரணம் என்ன என்ற கேள்வியால், டில்லி அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யம் நிலவுகிறது.

பல்வேறு கேள்வி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த, 23ல், தமிழக முதல்வராக, ஜெயலலிதா பதவியேற்றார். மத்திய அரசு சார்பில், அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன்
பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோல்கட்டாவில், மேற்கு வங்க ...

சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்

Posted: 28 May 2016 02:00 PM PDT

அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது, கடந்த ஆண்டு ஜூன், 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர், 1 முதல், 'துாய்மை பாரதம்' திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 'கிரிஷி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™