Tamil News | Online Tamil News |
- 2வது முறை மேற்கு வங்க முதல்வராக மம்தாபதவியேற்பு:மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்பு
- பா.ஜ.,வின் அடுத்த இலக்கு உ.பி., நவீன பிரசார திட்டம் 'ரெடி'
- ஐ.சி.யு.,விலிருந்து ரயில்வேயை மீட்பேன் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி
- அவசர சட்டத்துக்கு தடையில்லை:மருத்துவ நுழைவு தேர்வு வழக்கில் அதிரடி
- வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க சட்ட திருத்தம்... அதிரடி:ஐகோர்ட்டிற்கு அதிகாரம் வழங்கி புது விதிகள் பிறப்பிப்பு
- ஸ்டாலின் தலைமையில் நிழல் அமைச்சரவை :அமைச்சர்களை கண்காணிக்க தி.மு.க., ஏற்பாடு
- காங்., ரெண்டுபடும் அபாயம்:4 எம்.எல்.ஏ.,க்களை இழுக்க ரகசிய முயற்சி
- பாதி வழியிலேயே வீடு திரும்பிய முதல்வர்
- கோவிலுக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் மீது தாக்குதல்
- ''டாஸ்மாக்' கடையை மூடுங்க' படையெடுக்கும் மக்கள்: * அதிகாரிகள் திணறல்
| 2வது முறை மேற்கு வங்க முதல்வராக மம்தாபதவியேற்பு:மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்பு Posted: 27 May 2016 09:53 AM PDT கோல்கட்டா:மேற்கு வங்க மாநில முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 61, நேற்று பதவியேற்றார். அவருடன், 41 அமைச்சர்களும் பதவியேற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பூடான் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன், மேற்கு வங்க சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள, 294 தொகுதிகளில், 211 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் வென்றது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக மம்தா பானர்ஜி ... |
| பா.ஜ.,வின் அடுத்த இலக்கு உ.பி., நவீன பிரசார திட்டம் 'ரெடி' Posted: 27 May 2016 09:55 AM PDT உத்தர பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமித் ஷா தலைமையில் பா.ஜ., இப்போதே பணிகளை துவங்கி விட்டது. நவீன தொழில்நுட்ப உதவியுடன், பா.ஜ., பிரசார களத்தில் இறங்கவுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், அசாமில் ஆட்சியை, பா.ஜ., கைப்பற்றியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அதன் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றியால் கிடைத்த உற்சாகத்துடன், தற்போது உத்தர பிரதேசத்தில், பா.ஜ., கவனத்தை திருப்பியுள்ளது. இங்கு, 2017ல், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், பா.ஜ.,வுக்கு முக்கியமானதாக ... |
| ஐ.சி.யு.,விலிருந்து ரயில்வேயை மீட்பேன் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி Posted: 27 May 2016 09:56 AM PDT புதுடில்லி;''தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ரயில்வேயை, சொந்தமாக சுவாசிக்கும் அளவுக்கு தேற்றி, விரைவில் மீண்டு வர, தீவிர சிகிச்சை நடந்து வருகிறது,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, ரயில்வே அமைச்சகத்தின் செயல் பாடுகள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:ரயில்வே துறை,இன்றல்ல, நேற்றல்ல; கடந்த, 30 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ராகேஷ் மோகன் கமிட்டி அறிக்கையிலேயே, இது குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அதற்கு ... |
| அவசர சட்டத்துக்கு தடையில்லை:மருத்துவ நுழைவு தேர்வு வழக்கில் அதிரடி Posted: 27 May 2016 10:00 AM PDT புதுடில்லி:மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு, மாநில அளவிலான நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டு நடத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. நாடு முழுவதும், 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந் தது. இதற்காக, மே, 1, ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வை நடத்தவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.மாநிலங்கள் வலியுறுத்தல்:'மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு ... |
| Posted: 27 May 2016 10:30 AM PDT சென்னை:நீதிமன்ற வளாகத்தில், ஊர்வலம், முற்றுகை போராட்டம் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில், அதிரடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, புது விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும், வழக்கறிஞர்கள் மீது விசாரணை நடத்தி, அவர்களை தற்காலிக நீக்கம் செய்யவோ அல்லது தொழில் புரிய தடை விதிக்கவோ, பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. தற்போது அமலில் உள்ள வழக்கறிஞர்கள் ... |
| ஸ்டாலின் தலைமையில் நிழல் அமைச்சரவை :அமைச்சர்களை கண்காணிக்க தி.மு.க., ஏற்பாடு Posted: 27 May 2016 10:41 AM PDT சட்டசபையில், ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கவும், அரசின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவும், தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், விரைவில் நிழல் அமைச்சரவை உருவாகிறது. சட்டசபையில், தி.மு.க., - காங்., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 98 ஆக உள்ளது. தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைக்க இன்னும், 20 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். சட்டசபையில் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக, தி.மு.க., இடம் பெற்றுள்ளது.தி.மு.க., பொருளாளர் ... |
| காங்., ரெண்டுபடும் அபாயம்:4 எம்.எல்.ஏ.,க்களை இழுக்க ரகசிய முயற்சி Posted: 27 May 2016 10:46 AM PDT நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்., எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எட்டு எம்.எல்.ஏ.,க்களில், பழைய முகங்கள் நான்கு பேரும், புதுமுகங்கள் நான்கு பேரும் இடம் பெற்றுள்ளனர். சட்டசபையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கு, கடந்த முறை போல, சிறிய கட்சிகள் அதிகம் இல்லை. எனவே, எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைக்க, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரிடம், ரகசிய பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.தகவல் கசிந்தது:தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்த த.மா.கா.,வினர், இந்த பேச்சை நடத்தி உள்ளனர். இதுபற்றிய தகவல் கசிந்ததும், காங்., வட்டாரத்தில் பரபரப்பு ... |
| பாதி வழியிலேயே வீடு திரும்பிய முதல்வர் Posted: 27 May 2016 10:48 AM PDT சென்னை;சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சென்ற முதல்வர் ஜெயலலிதா, பாதி வழியில் வீடு திரும்பியது, போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. 'இசட்' பிரிவு படையினர் மற்றும் மாநில போலீசாரின் பாதுகாப்புடன், முதல்வர் ஜெயலலிதா, நேற்று மதியம், 12:31 மணிக்கு, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக, தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டார். அவரது காருக்கு முன், 'பைலட்'வாகனங்கள் சென்றன. முதல்வரின், 'கான்வாய்' வாகனங்கள், 12:38 மணிக்கு, காமராஜர் சாலையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகம் அருகே சென்ற போது, முதல்வர், ... |
| கோவிலுக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் மீது தாக்குதல் Posted: 27 May 2016 12:12 PM PDT நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு காரில் செல்லும் வழியில், பிரபல சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வழிபட தடை: மஹாராஷ்டிராவில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - - சிவசேனா கூட்டணி அரசு நடக்கிறது. இங்கு, அகமது நகர் அருகே உள்ள, சனி சிங்னாப்பூர் கோவிலிலும், நாசிக் அருகே உள்ள திரியம்பகேஸ்வரர் கோவிலிலும், கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி, திருப்தி தேசாய் தலைமையிலான, 'பூமாதா ரன்ராகினி பிரிகேடு' என்ற பெண்கள் அமைப்பு, போராடி ... |
| ''டாஸ்மாக்' கடையை மூடுங்க' படையெடுக்கும் மக்கள்: * அதிகாரிகள் திணறல் Posted: 27 May 2016 01:07 PM PDT 'மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில் உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில், மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து, டாஸ்மாக் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |