Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றம்?

Posted: 02 May 2016 09:35 AM PDT

பா.ம.க., மீது விழுந்த ஜாதி மற்றும் வன்முறை முத்திரையை அழிக்க, அன்புமணி ரொம்ப சிரமம் எடுத்தார். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவரை முன்னிறுத்தியதும், அவரது பேச்சும் செயலும், பா.ம.க.,வுக்கு புதிய அடையாளத்தை தேடி தந்தது. படித்தவர்கள் புழங்கும் சமூக வலை தளங்களில், அன்புமணி பேச்சும் நடத்தையும் பெரிதாக கவனிக்கப்பட்டது. ஆதரவு விமர்சனங்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

* சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கூனாண்டிபுதுாரில், நேற்று முன்தினம் மதியம், மக்கள் தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்திபன் ஓட்டு சேகரிக்க சென்றபோது, பா.ம.க.,வினருக்கும், ...

ஹெலிகாப்டர் பேர ஊழல்: 'மாஜி' தளபதியிடம் சி.பி.ஐ., பல மணி நேரம் விசாரணை

Posted: 02 May 2016 09:37 AM PDT

புதுடில்லி,: ஹெலிகாப்டர் பேர மோசடி குறித்து, இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி, எஸ்.பி.தியாகியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த, ஐ.மு.,கூட்டணி ஆட்சியின்போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் செய்வதற்கு, இந்திய அரசியல்வாதிகள், உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியைச்சேர்ந்த இடைத்தரகர் மூலம், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, இத்தாலி கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. ...

50 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுள்ளது : ஸ்டாலின் பேச்சு

Posted: 02 May 2016 09:39 AM PDT

வாழப்பாடி: ''ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது,'' என, வாழப்பாடியில் நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், வாழப்பாடியில், ஏற்காடு தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வனை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது; பெண் போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. ஜெ., ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து விட்டது. முதல்வரை காணொலி காட்சியில் மட்டுமே காண முடிந்தது. 2011 தேர்தலுக்கு பின், ஜெயலலிதாமக்களை சந்திக்க வரவில்லை.ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ...

'அதிகாரிகள் மாற்றத்தை நிறுத்துங்கள்': அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மனு

Posted: 02 May 2016 09:43 AM PDT

'அதிகாரிகள் இடமாற்றத்தை திரும்பப் பெற வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம் அளித்த புகார் மனு:தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தேர்தலுக்கு என தனி டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் அனைவரும், அவரது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகள் அனைவரும், தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் ...

ரூ.1,500 கோடி நிலக்கரி ஊழல்: அரசுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 02 May 2016 09:54 AM PDT

சென்னை:'நிலக்கரி இறக்குமதியில் நடந்த, 1,500 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை, மின்வாரியம் ஏன் மறுக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:நிலக்கரி இறக்குமதியில் மட்டும், ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஊழல் நடந்துள்ளது என்றும், இந்தப் பணம், இந்தோனேஷியா வங்கிகளில் குவித்து சேமிக்கப்படுகிறது என்றும், ஒரு தகவலை, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு, 200 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதில், 140 லட்சம் டன் ...

கோவிலுக்கு பெண்கள் வருவது அய்யப்பனுக்கு பிடிக்காதாம் புதுமை? சுப்ரீம் கோர்ட்டில் திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம்

Posted: 02 May 2016 10:01 AM PDT

புதுடில்லி:சபரிமலை கோவிலில், 10 முதல், 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 'பெண்கள் கோவிலுக்கு வருவது அய்யப்பனுக்கு பிடிக்காது; இது, 1,000 ஆண்டு கால பாரம்பரியம்; பெண்களுக்கு தடை விதிக்கவில்லை, கட்டுப்பாடு தான் விதிக்கப்பட்டுள்ளது' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது, உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு செல்ல, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.'சபரிமலை ...

பிரசாரத்தை ரத்து செய்து விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை ஓட்டம்

Posted: 02 May 2016 10:09 AM PDT

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, ஏப்., 11ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.அவர், தனது மூன்றாம் கட்ட பிரசாரத்தை, கன்னியாகுமரி மாவட்டத்தில், ஏப்., 29ம் தேதி துவங்கி, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்தபடியே, திருச்சி வந்தார்.

நேற்று அவர் லால்குடி, மண்ணச்சநல்லுார், முசிறி, துறையூர் தனி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, மணச்சநல்லுாரிலும்; பெரம்பலுார் தனி, குன்னம், அரியலுார், ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர்களுக்காக, அரியலுாரிலும், பிரசாரம் செய்வதாக இருந்தார். இதற்காக, போலீஸ் அனுமதி பெற்று கூட்ட ஏற்பாடுகளை, தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சி ...

மாபெரும் கருத்துக்கணிப்பு ! 'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை

Posted: 02 May 2016 10:46 AM PDT

தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பு, இன்றைய சூழலில், ஊடகங்களுக்கு ஒரு மரபாக மாறிவிட்டது. இந்த மரபை, தமிழகம் தழுவிய அளவில், 'தினமலர்', இதுவரை பின்பற்றியது இல்லை.இப்போது, முதல் முறையாக, தமிழக மற்றும் புதுச்சேரியின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 'நியூஸ் 7' தொலைக்காட்சி ஊடகமும், 'தினமலர்' நாளிதழும் இணைந்து, இந்த கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளன.வழக்கமாக இத்தகைய கருத்துக்கணிப்புகளில், ஒவ்வொரு தொகுதிக்கும், 100 வாக்காளர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். 'தினமலர் - நியூஸ் 7' கருத்துக்கணிப்பில், ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 வாக்காளர்களின் கருத்துக்கள் ...

பிரபலங்களுக்கு தனி வரிசை ராஜேஷ் லக்கானி மறுப்பு

Posted: 02 May 2016 11:28 AM PDT

சென்னை, : ''ஓட்டு போட பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:

ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்காக, ஆண்கள் , பெண்கள் என, இரண்டு வரிசை ஏற்படுத்தப்படும். பிரபலங்களுக்கு என, தனி வரிசைஎதுவும் கிடையாது. யாராக இருந்தாலும், வரிசையில் நின்று ஓட்டளிக்க வேண்டும்.மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் வரிசையில் நிற்காமல், நேராகச் சென்று ஓட்டளிக்கலாம்.வாகனசோதனையில், நேற்று வரை, 80 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 24 ...

மாநில அளவில் மருத்துவ நுழைவு தேர்வு? சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை

Posted: 02 May 2016 02:55 PM PDT

புதுடில்லி :'ஏற்கனவே திட்டமிட்டபடி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில அளவில் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று, பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி, 'மே, 1ம் தேதி மற்றும் ஜூலை, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™