ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விலங்குகள் நல மண்டலி உறுப்பினராக அமலா தேர்வு
- குளியல்!
- நவீன கம்ப்யூட்டர் ஜோசியம்…..
- புதுக்கவிதை
- மழை வர நடந்தது கழுதைக் கல்யாணம்…
- நாம் செய்யும் நற்காரியங்களின் பலன்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்?
- அஞ்சாத சிங்கம் என் காளை, இது...
- வலையிருந்தும் மீன் பிடிக்க முடியாது…
- பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்
- இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் - ருத்ர வீணை பாகம் 3 மற்றும் 4
- குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
- எனது இலங்கைப் பயணம் .
- வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!
- விஜயகாந்த் ஸ்பெஷல் - காணொளி
- ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
- காரணம் தெரிந்தது
- தேர்தல் 2016 - தொடர் பதிவு
- புகைப்படம் கூறும் திரைப்பட பாடல் என்ன?
- சென்னை விமான நிலையத்தில் இது 63-வது முறை.....
- சிரிக்கத் தெரியுமா - காணொளி
- அங்கே தேவைப்பட்டது வெளிச்சம்…!
- துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
- தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
- உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
- 10 தமிழறிஞர்களுக்கு பாவேந்தர் விருது
- மழை நின்ற பிறகும் தூறல் …
- காலந்தோறும் பொன்!
- ஒரு கேள்வி - ஒரு மனசு
| விலங்குகள் நல மண்டலி உறுப்பினராக அமலா தேர்வு Posted: 02 May 2016 12:43 PM PDT - தெலங்கானா மாநில விலங்குகள் நல மண்டலியின் உறுப்பினராக நடிகை அமலா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் விலங்குகள் நலனைப் பாதுகாக்க அம்மாநில கால்நடைத் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு ஒரு மண்டலியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகை அமலா, மாநில டிஜிபி, மாநில தலைமை செயலர், சென்னையைச் சேர்ந்த பாரத விலங்குகள் நல மண்டலியின் தலைவர் உள்பட 13 பேர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு, இந்த மண்டலி விலங்குகள் நலத்துக்காக ஏற்படுத்தப்பட்ட பிசிஏ ... |
| Posted: 02 May 2016 12:42 PM PDT உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....! மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம். சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும். இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. சோப்பு போடுவதற்கு ... |
| Posted: 02 May 2016 12:41 PM PDT - காலிக்குடங்களுடன் சாலை மறியல் நீரை பீய்ச்சி அடித்து துரத்தியது அரசு…… – நவீனத்திற்கு மாறியது மூடத்தனம் கம்ப்யூட்டர் ஜோசியம்….. – வெள்ளையனானார் காந்தி காகம் போட்ட எச்சத்தில்….. – பசியால் இறந்தவனுக்கு பத்து நாள் விருந்து – பாலுக்கு வழியன்றி அழுதது குழந்தை பக்கத்து கோவிலில் பாலாபிஷேகம்….. – கள்ள நோட்டிலும் கபடமற்ற சிரிப்பு காந்தி தாத்தா…. – ——————————- by arun bharathi |
| Posted: 02 May 2016 12:40 PM PDT பொறுப்பு…!! * இன்று விடிந்ததிலிருந்தே வெளுத்தப்படியே இருக்கிறது மேகங்களற்ற வெப்ப வானம். இன்று விடிந்ததிலிருந்தே தகிக்கும் வெப்பம் மனிதர்களையும் பறவைகளையும் வெளியில் போக வேண்டாமென அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள். இன்று விடிந்ததிலிருந்தே எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ? எந்தத் திசைவழியாயும் சென்றும் திரும்புகின்றது வெப்பக் காற்று. இப்பவே இப்படியென்றால், இன்னும் கத்திரித் தொடங்கினால் எப்படி அனல் பறக்குமோ? வெயில் என்றாலே மனிதர்களுக்கு நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு நெருப்பு. அதுவும் ... |
| மழை வர நடந்தது கழுதைக் கல்யாணம்… Posted: 02 May 2016 12:39 PM PDT - மழை வர நடந்தது கழுதைக் கல்யாணம் வந்தது கழுதைக் குட்டி…. – "யார் என்னைத் தத்தெடுப்பார்கள்" ஏக்கத்தில் என் கவிக்குழந்தைகள் மரணப்படுக்கையில் நான்…. – சோதனைக்குழாய் குழந்தை பிறப்பதை விசித்திரமாய் பார்த்தது அநாதை இல்லக் குழந்தை…. – யாரிடம் கடன் வாங்க? என் மனதில் கற்பனைப் பஞ்சம்…. – வேட்டையாடப்பட்டது பறவைகள் அநாதையானது மரம்……. – அருண்பாரதி |
| நாம் செய்யும் நற்காரியங்களின் பலன்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்? Posted: 02 May 2016 12:38 PM PDT நாம் செய்யும் நற்காரியங்களின் பலன்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்? 1. பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் ...3 தலைமுறைக்கு. 2. புண்ணிய நதிகளில் நீராடுதல் ...3 தலைமுறைக்கு. 3. திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ...........5 தலைமுறைக்கு. 4. அன்னதானம் செய்தல் .............5 தலைமுறைக்கு. 5. ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் ...........5 தலைமுறைக்கு. 6. பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது .................6 தலைமுறைக்கு. 7. திருக்கோயில் புனர்நிர்மாணம் ..................7 ... |
| அஞ்சாத சிங்கம் என் காளை, இது... Posted: 02 May 2016 12:37 PM PDT பாடல்: அஞ்சாத சிங்கம் என் காளை திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம் இசை: ஜி. ராமநாதன் பாடியோர்: : பி. சுசீலா, குழுவினர் 1959ஆண்டு: 1959 - - -------------------------- அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த ஆபத்தை நாடிவரும் மாவீரன் பாரிலே யாரடி? அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை - கும்மாளம் போடும் உன் காளை இது கொட்டம் அடங்குமடி நாளை அங்கே கூசாமல் போராடும் மாவீரனை நேரிலே பாரடி - கும்மாளம் போடும் ... |
| வலையிருந்தும் மீன் பிடிக்க முடியாது… Posted: 02 May 2016 12:32 PM PDT - விழித்திருந்து வாங்கிவிட்டோம் வாங்கியதும் உறங்கிவிட்டோம் சுதந்திரம்….. – மாதந்தோறும் பிரசவிக்கிறது என் கடன் வட்டி…. – மாணவன் அழுவதற்கு முன்பே மரம் அழுதது பிரம்புக்குச்சி….. – குளம் வெட்ட வந்த நிதி பாதியை வெட்டிக் கொண்டார் மந்திரி….. – என்னைக் கடலில் கரையுங்கள் அலறியது பிள்ளையார் சிலை அங்கே மதக் கலவரம்….. – வீட்டில் வலையிருந்தும் மீன் பிடிக்க முடியாது சிலந்தி வலை…. ———————– அருண்பாரதி |
| பாம்பை கனவில் கண்டால் என்ன பலன் Posted: 02 May 2016 12:30 PM PDT 1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். 2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும். 3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும். 5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும். 6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள். 7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம். 8. ... |
| இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் - ருத்ர வீணை பாகம் 3 மற்றும் 4 Posted: 02 May 2016 12:11 PM PDT |
| குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு Posted: 02 May 2016 12:09 PM PDT ஈகரை நண்பர்களுக்கு வணக்கம் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம். |
| Posted: 02 May 2016 10:34 AM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்! Posted: 02 May 2016 10:32 AM PDT தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று. பெரும்பாலான ... |
| Posted: 02 May 2016 09:51 AM PDT |
| ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி Posted: 02 May 2016 09:34 AM PDT ஆதிரா முல்லை - பேராசிரியர் / எழுத்தாளர் நான்... உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு அம்மாவாக இருப்பதில் தொடங்கு கிறது என் மனிதப் பிறவிக்கான பயன். இந்தத் தாய்மை தவமிருந்தாலும் பலருக்கும் கிடைக்காதது. தாய்மைக்கு அடுத்து அக்கா என்பது அழகான உறவு. அக்காவாகவே என் வலைத்தள உறவுகளுக்கு அறியப்பட்டிருப்பதில் ஆனந்தம். வெகு சிலருக்குத் தோழியாகவும் இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். பள்ளியும் ஆசிரியர்களும் ஐந்தாம் ... |
| Posted: 02 May 2016 09:15 AM PDT காரணம் தெரிந்தது நான் தினமும் போகும் பூங்கா . ஒரு நீளமான பெஞ்ச் .எப்போதும் 4/5 பெண்மணிகள் உட்கார்ந்து , மிகவும் சத்தம் போட்டுக்கொண்டும் கேலியாக சிரித்துக் கொண்டு பொழுதை போக்குவார்கள் .சந்தோஷமான அந்த கூட்டத்தைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கும் . நேற்று போனப் போது மிகவும் அமைதியாக இருந்தது அந்த கும்பல் . மனதிற்கு சிறிது கஷ்டமாகவும் இருந்தது . இன்று பழைய சிரிப்பும் கும்மாளமும் திரும்பி இருந்தது . சிறிது தைரியத்துடன்,அவர்களை அணுகி , நேற்றைய அமைதிக்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா ... |
| Posted: 02 May 2016 06:55 AM PDT லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்! - சென்னை: 'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால் லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. - தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். - விகடன் |
| புகைப்படம் கூறும் திரைப்பட பாடல் என்ன? Posted: 02 May 2016 05:44 AM PDT - - |
| சென்னை விமான நிலையத்தில் இது 63-வது முறை..... Posted: 02 May 2016 04:36 AM PDT சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடர்ந்து 63வது முறை கண்ணாடி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. 4-வது நுழைவு வாயிலில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் நொறுங்கி விழுவது தொடர்கதையாக மாறி வருகின்றது. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். - ------------ தினமணி |
| Posted: 02 May 2016 01:26 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| அங்கே தேவைப்பட்டது வெளிச்சம்…! Posted: 01 May 2016 11:50 PM PDT - சவரன்கள் இல்லாததால் வரன்கள் அமையவில்லை என் மகள் தங்கத்துக்கு…. – வெளிச்சம் கிடைக்க விளக்கை தேடினேன் விளக்கு கிடைக்க அங்கே தேவைப்பட்டது வெளிச்சம்…. – நனவாகிறது ஏழையின் கனவு சினிமாவில் மட்டும்….. – எத்தனை முறை கல்லெறிந்தாலும் நகரவில்லை குளத்தில் நிலா…. – அணையப்போகிறது மெழுகுவர்த்தி பயத்தில் சிறுவன் நாளைக்குப் பரீட்சை – மழைக்காக ஒதுங்கியும் நனைந்து விட்டோம் ஓட்டைப்பள்ளிக்கூடம்.… – ——————————– by arun bharathi |
| துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம் Posted: 01 May 2016 11:39 PM PDT - துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் தயாராகி வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு குடியேறலாம். கடலுக்கு அடியில் வீடுகள் துபாயில் உலகின் மிகப்பெரிய கட்டிடம், வணிக வளாகம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரீச்சை மரம் வடிவிலான தீவுகள் போன்ற உலகின் மிகச்சிறந்த இடங்கள் உள்ளன. இதன் காரணமாக துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நிலத்தில் உள்ள வீடுகளில் மட்டுமல்லாமல் இனி கடலுக்கு அடியில் தங்கும் வகையில், பிரமிக்கத்தக்க அளவில் ... |
| தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு Posted: 01 May 2016 11:32 PM PDT புதுடெல்லி, தூர்தர்ஷன் செய்தி சேனலை தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, புதிய தொழில்நுட்ப கருவிகள், திறமையான ஆட்களை தேர்வு செய்தல், சம்பள உயர்வு போன்ற பல நடவடிக்கைகளை விரைவில் எடுக்க உள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார். – மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரத்தோர் 'டி.டி. செய்தி சேனல் முழுமையான செய்திகளை மட்டுமே தருகிறது. ஆனால், ... |
| உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் Posted: 01 May 2016 11:22 PM PDT - ஷாங்காய், உலக கோப்பை வில்வித்தை போட்டி (முதலாம் நிலை) சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ரிகர்வ் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, சீனத்தைபேயை எதிர்கொண்டது. தீபிகா குமாரி, பம்பையலா தேவி, லட்சுமிராணி மஜி ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர், இலக்கை குறி வைத்து அம்புவை எய்வதில் சாதுர்யமாக செயல்பட தவறியதால் 2-6 என்ற புள்ளி கணக்கில் சீனத்தைபேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். இதனால் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று. ஆண்கள் ... |
| 10 தமிழறிஞர்களுக்கு பாவேந்தர் விருது Posted: 01 May 2016 10:53 PM PDT கள்ளக்குறிச்சி - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், புதுச்சேரியில் நடைபெற்ற பாரதிதாசனின் 126வது பிறந்த நாள் விழாவில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 தமிழறிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. புதுச்சேரியில் பாரதிதாசன் நினைவு இல்லத்தில் நடைபெற்ற பாரதிதாசன் 126வது பிறந்தநாள் விழாவில் கல்லை தமிழ்ச் சங்கச் செயலாளர் செ.வ.மதிவாணன், கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை முதுநிலை எழுத்தர் இ.அம்பேத்கார், திருவெண்ணைநல்லூர் கம்பன் கழகச் செயலாளர் ம.மணிக்கவுண்டர், ... |
| Posted: 01 May 2016 08:51 PM PDT - நாளை பள்ளி விடுமுறை வருத்தப்படுகிறாள் சத்துணவுச் சிறுமி…… – மழை நின்ற பிறகும் தூறல் மரக்கிளை…. – தெரியாமல் பறிபோனது கிடைக்க தெரிந்தும் பறிகொடுத்தேன் லஞ்சம்… – வாஸ்து பார்த்து கட்டியும் பறிபோனது வீடு கடன்…. – உறவினர்கள் வருகை அடகுக்காய் காத்திருக்கிறது அண்டா….. – கரையேறிய அலைகள் காவு கேட்டது உயிர்களை சுனாமி…. – ————————– by arun bharathi |
| Posted: 01 May 2016 08:47 PM PDT தக தக தங்கம் ஏ.ஆர்.சி.கீதா சுப்ரமணியம் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது தங்கம். அதன் மதிப்பைப் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசுகிறோம். இப்படிப் பேசுகிற அளவுக்கு தங்கத்துக்கு உண்மையிலேயே மதிப்பும் மரியாதையும் அந்தக் காலத்தில் இருந்திருக்குமா? இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. தங்கம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது, புழங்கப்பட்டு வந்தது என்பதற்கான சான்றுகள் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எல்லா மதங்களிலும் உள்ளன! - |
| Posted: 01 May 2016 08:33 PM PDT - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |