Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


* 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என உறுதிமொழி 1.64 கோடி பேர்! * தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் முயற்சிக்கு வெற்றி

Posted: 10 May 2016 09:49 AM PDT

'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுப்போம்' என, 1.64 கோடி பேர் நேற்று உறுதிமொழி எடுத்தனர்.

தமிழகம் முழுவதும், தேர்தல் கமிஷன் எடுத்த முயற்சிக்கு, இதன்மூலம் வெற்றி கிடைத்துள்ளது.
1.64 கோடி பேர்
சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்துடன் பொதுமக்கள், பணம் வாங்குவதை தடுக்கவும், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது.அதன்படி, நேற்றைய தினம், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நாளாக அறிவிக்கப்பட்டது. 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்; பணம் ...

கட்டாயம் தொகுதிகளில் தங்க வேண்டும் ஒரு வாரம் பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி உத்தரவு

Posted: 10 May 2016 09:55 AM PDT

புதுடில்லி:பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, இரண்டு ஆண்டு நிறைவடைவதை ஒட்டி, ''பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும், தங்கள் தொகுதிகளில் ஒருவாரம் தங்கியிருந்து, அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்து, வரும், 26ம் தேதியுடன், இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை, ஒரு மாதம் கொண்டாட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது, மத்திய அமைச்சர்களும், அரசின் சாதனைகளை நாடு முழுவதும் மக்களிடையே விளக்கி, பிரசாரம் செய்ய ...

ஹரிஷ் ராவத் அரசுக்கு வெற்றி? : உத்தரகண்ட் ஓட்டெடுப்பில் நம்பிக்கை

Posted: 10 May 2016 09:59 AM PDT

டேராடூன்:உத்தரகண்ட் மாநில சட்டசபையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று, ஹரிஷ் ராவத் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

இதில், ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்., அரசு வெற்றி பெற்றதாக, அந்த கட்சியினர் தெரிவித்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அரசுக்கு எதிராக, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் திடீரென போர்க் கொடி துாக்கியதால், அரசியல் குழப்பம் ஏற்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
இதுதொடர்பான வழக்கில், ஹரிஷ் ராவத் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு ...

கொட்டுது பனமழை!

Posted: 10 May 2016 10:12 AM PDT

'அம்மா, நம்ம வேட்பாளரை உங்களுக்கு நல்லாவே தெரியும். நல்ல மனிதர்; பண்பாளர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர்றவர். அவரு ஜெயிச்சா, நாம எல்லாருக்கும் நல்லது. அவர ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களோடது.நீங்க எதையும் சும்மா செய்யக் கூடாதுங்கறதுதான், அண்ணனோட விருப்பம். அதுக்காக, இந்த சின்ன அன்பு பரிசை உங்ககிட்ட குடுக்க சொன்னாரு. மறுக்காம வாங்கிக்கணும்; மறக்காம அண்ணனுக்கு ஓட்டுப் போட்டுடணும். பரிசு நிறைவா இருந்தா சந்தோஷப்படுங்க. இல்லைன்னா, சொல்லியனுப்புங்க. இங்கதான் இருக்கோம். எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க...' - இப்படி வீடு வீடாக வரும் ஆளும் கட்சியினர், ...

நுழைவுத்தேர்வு ரத்து கருணாநிதி வாக்குறுதி

Posted: 10 May 2016 10:15 AM PDT

சென்னை,: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நுழைவுத்தேர்வு இல்லாமல், மருத்துவ கல்லுாரிகளில், உயர்கல்வி பயில முயற்சி மேற்கொள்ளப்படும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மருத்துவ கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகள் ஆகியவற்றில், மாணவ, மாணவியர் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, அனைத்து மாநிலங்களிலும் நடத்தியே ஆக வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வருமானால், தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து, நடைமுறையில் இருந்து வரும்சட்டத்தின் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட ...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: எதிர்க்கட்சிகளுக்கு ஜெ., பதிலடி

Posted: 10 May 2016 10:17 AM PDT

''தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:தொடர்ந்து, 20 ஆண்டுகளாக பணிபுரிந்து, 60 வயது நிறைவடைந்த கிராமப் பூசாரிகளுக்கு, 250 ரூபாய் மாத ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, அ.தி.மு.க., அரசு. இந்த ஓய்வூதியம், காலத்திற்கேற்ப உயர்த்தப்படும். கிராம கோவில் பூசாரிகளுக்கு ஊதியம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., அரசின் மீது குறைகள் கூறுவதை நிறுத்தி, தேர்தல்அறிக்கையை ...

'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்

Posted: 10 May 2016 10:20 AM PDT

சென்னை: தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

'ரிப்போர்ட் பீ' எனப்படும் தனியார் அமைப்பு, கல்வித் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கல்வி முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.தமிழக அரசு நடத்தும், 10வது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், கடந்த நான்கு ஆண்டு தேர்ச்சி விகிதங்கள் குறித்து, இந்த அமைப்பு ஆய்வு செய்தது.அந்த ஆய்வு அறிக்கையில் ...

தொகுதி கோயில்களில் விஜயகாந்த் வழிபாடு

Posted: 10 May 2016 10:39 AM PDT

உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று, விஜயகாந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அங்கேயே முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று காலை, 10:10 மணிக்கு, உளுந்துார்பேட்டைஅடுத்த உளுந்தாண்டார்கோவிலில் உள்ள, மாஷபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற விஜயகாந்தும் மனைவி பிரேமலதாவும் அங்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின் இருவரும், பரிக்கலில் உள்ள, பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் சுவாமிகோவிலுக்கு சென்று சிறப்பு ...

தேர்தல் கமிஷன் அதிரடி ரூ.92 கோடி பறிமுதல்

Posted: 10 May 2016 11:16 AM PDT

சென்னை:தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 92 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், 12ம் தேதி முதல், பறக்கும் படையாக செயல்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒருநாள் முன்னதாக, 11ம் தேதியேகளமிறங்க உள்ளனர்.ஓட்டுச்சீட்டுஒவ்வொரு தொகுதியிலும், மூன்று, 'ஷிப்ட்'களாக, 24 மணி நேரமும், 25 பறக்கும் படையினர், ரோந்து வந்தபடி இருப்பர். பாதுகாப்புக்கு, 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்வந்துள்ளனர். ஓட்டுப்பதிவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™