Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆளுங்கட்சியை அதிரவைத்த ரிப்போர்ட்

Posted: 01 May 2016 08:32 AM PDT

'கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளையே காணோம்' - இது கடந்த லோக்சபா தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளை ஏளனமாக பார்த்து, ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள். தேர்தலுக்கு முன் நடந்த கட்சி பொதுக் குழுவிலும், இதே வார்த்தைகளை பிரயோகித்தார். தேர்தல் பிரசாரத்தின் போதும் உரக்கச் சொன்னார்.

தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் பிரிந்து கிடக்க, பா.ஜ., தலைமையில், ஒரு வலுவான அணி உருவானது எல்லாமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்க, அந்த தேர்தல் முடிவுகள், ஜெ., வார்த்தைகளை நிஜமாக்கின.பா.ஜ., அமைத்த கூட்டணியில் மட்டும், இருவர் வெற்றி பெற்று விட, மற்ற எல்லா தொகுதிகளையும் அப்படியே அ.தி.மு.க., ...

தலைநகர் டில்லியில் மாசு அளவு 23 சதவீதம் உயர்வு:வாகன கட்டுப்பாடு திட்டத்தால் பலன் இல்லை?

Posted: 01 May 2016 10:17 AM PDT

புதுடில்லி:'டில்லியில் அமல்படுத்தப்பட்ட, வாகனக் கட்டுப்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை; காற்று மாசு அளவு, 23 சதவீதம் உயர்ந்துள்ளது' என,

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
உலகில், அதிகமாசு நிறைந்தநகரங்களில் முதல் இடத்தில் உள்ளது டில்லி. இங்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், காற்று மாசுபடுவதை தடுக்கவும், வாகனக் கட்டுப்பாட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பதிவெண் அடிப்படையில்...அதன்படி, 'ஒற்றை இலக்க எண் உள்ள ...

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் 'காஸ்' :திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி

Posted: 01 May 2016 10:22 AM PDT

லக்னோ;நாடு முழுவதும், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, சமையல், 'காஸ்' இணைப்பை இலவசமாக வழங்கும், 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

உ.பி., மாநிலம், பாலியா நகரில், சமையல் காஸ் இணைப்புகளை, ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்ட துவக்க விழா, மே தினமான நேற்று நடந்தது. இத்திட்டத்தின் கீழ், ஐந்து கோடி ஏழைகள் பயன்பெறுவர். இதற்கு, 8,000 கோடி ரூபாய் செலவிடப்படும் எனத் தெரிகிறது.
திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: முந்தைய அரசுகள் வகுத்த திட்டங்கள், ஏழைகளை மனதில் வைத்து ...

இறுதிப் பட்டியல் இன்று வெளியாவதால் வேட்பாளர்கள் 'திக் திக்':கூடுதல் பறக்கும் படைகளுடன் தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பு

Posted: 01 May 2016 11:07 AM PDT

தமிழகம் முழுவதும், இன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பணம் வினியோகத்தை தடுக்க, கூடுதல் பறக்கும் படைகளுடன், தேர்தல் கமிஷன்சுறுசுறுப்பாக செயல்படத் துவங்கி உள்ளது. இதனால், தேர்தல் செலவை எப்படிசமாளிப்பது எனத் தெரியாமல், 'திக்... திக்...' மனதுடன், வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்., 22ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஏப்., 29ம் தேதி நிறைவு பெற்றது. நான்கு திருநங்கையர், 794 பெண்கள், 6,358 ஆண்கள் என, மொத்தம், 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை ...

திட்டமிட்டபடி நடந்தது மருத்துவ பொது நுழைவு தேர்வு:கம்மல், மூக்குத்தி, வளையலுக்கு தடை

Posted: 01 May 2016 11:42 AM PDT

சென்னை:திட்டமிட்டபடி, நேற்று நடந்த, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில், தமிழகத்தில், 26 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. மத்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அகில இந்திய அளவில், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாநில இடங்களுக்கும் சேர்த்து, மே, 1 மற்றும் ஜூலை, 24ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்,
மத்திய இடைநிலை ...

மோடி நடவடிக்கை எடுப்பாரா?கருணாநிதி கேள்வி

Posted: 01 May 2016 12:02 PM PDT

சென்னை;'கரூர் அன்புநாதன் விவகாரத்தில், பிரதமர் மோடியின் அரசு, இனியும் மவுனம் சாதிப்பதா என்று, நாட்டு மக்கள் கருதுகின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். இதில், 10.30 லட்சம் ரூபாய்ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. காவல் துறையினரின் பார்வையிலிருந்தும் வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும், ...

பிரசாரத்தில் சொதப்பும் விஜயகாந்த்:கட்சி 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு 'கட்'

Posted: 01 May 2016 12:22 PM PDT

விஜயகாந்த் பிரசாரத்தில் சொதப்புவதால் ஏற்படும் பின்னடைவுகளை தடுப்பதற்காக, கட்சி 'டிவி'யில், அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தற்போது, தொண்டை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், அவதியடைந்து வருகிறார். அவரால், தொடர்ச்சியாக பேச முடிய வில்லை. பேச வந்த விஷயங்களை மறந்து விடுகிறார்.
மேடைக்கு கீழே இருந்து, தொண்டர்கள் குரல் கொடுத்தால், டென்ஷன் ஆகி விடுகிறார். பேச்சை நிறுத்தி விட்டு, தொண்டர்களுடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்.அது மட்டுமின்றி ...

ஈடு கொடுக்க முடியாத தலைவர்கள் எடுபடாத தமிழக பா.ஜ., பிரசாரம்

Posted: 01 May 2016 12:25 PM PDT

பெரிதும் எதிர்பார்த்த மத்திய அமைச்சர்களின் தேர்தல் பிரசாரம் எடுபடாததால், தமிழக பா.ஜ.,வினர் கவலை அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் களத்தில், ஜெயலலிதா, கருணாநிதி, விஜய காந்த் போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள், பா.ஜ.,வில் இல்லை. பரபரப்பாக பேசும் எச்.ராஜா, தமிழிசை போன்றோர் இருந்தாலும், கூட்டம் சேருவதில்லை. எத்தனையோ பிரயத்தனங்கள் செய்தும், உள்ளூர் தலைவர்கள் பேச்சு எடுபடவில்லை.

வெங்கையா வருகை:இதை உணர்ந்த டில்லி மேலிடம், மத்திய அமைச்சர்களை வரிசைகட்டி அனுப்பி வருகிறது. தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ...

ஹெலிகாப்டர் பேர ஆவணங்களை பார்லி.,யில் சமர்ப்பிக்க அரசு முடிவு

Posted: 01 May 2016 12:48 PM PDT

புதுடில்லி;''ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், வரும், 4ல், பார்லிமென்டில் தாக்கல் செய்வேன்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.

மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த போது, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, நவீன ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும், 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்துக்காக, இந்தியாவை சேர்ந்த சில ...

ரயில்வே நிலங்களில் 5 கோடி மரக்கன்றுகள்

Posted: 01 May 2016 12:55 PM PDT

புதுடில்லி : நாடு முழுவதும், ரயில்வே நிலங்களில், ரயில் பாதையின் இருமருங்கிலும், ஐந்து கோடி மரக்கன்றுகளை நட, திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின், சுற்றுச்சூழல் பிரிவின் மூத்த அதிகாரி கூறியதாவது: இந்தாண்டு, பருவமழை துவங்கும் முன், ரயில்வே நிலங்களில், ரயில் பாதையின் இரு புறமும், ஐந்து கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. வேம்பு, நாவல், அத்தி உள்ளிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிராந்தியங்களுக்கு ஏற்றபடி, வெவ்வேறு மரக்கன்றுகளை நட திட்டமிட்டு உள்ளோம்.
மரங்களின் கிளைகள், ரயில் பாதைகளுக்கு இடையூறு செய்யாத வகையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™