Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மே 21-ல் தரமணி டீசர்

Posted:

கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கி தந்தவர் இயக்குனர் ராம். இவர் இப்போது ''தரமணி'' என்ற படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்க, ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய ரோலில் அஞ்சலி ...

கங்கனாவிடம் வாய்ப்பு கேட்கும் அமிதாப்

Posted:

பாலிவுட் நடிகை கங்கனாவிற்கும், நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கடந்த ஒரு மாதமாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டனர். இதுஒருபக்கம் இருந்தாலும் நடிப்பில் தான் எப்பவும் 'குயின்' என நிரூபித்து வருகிறார் கங்கனா. அதன்வெளிப்பாடாக சமீபத்தில் தேசிய விருதும் பெற்றார். இந்தச்சூழலில் பாலிவுட்டின் ...

டாக்டர் பட்டத்தால் சமூக பொறுப்பு அதிகரிப்பு - நாசர்

Posted:

நடிகர் நாசருக்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் "கல்யாண அகதிகள்" என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ...

செந்தில் இறந்ததாக வதந்தி - திருஷ்டி கழிந்துவிட்டதாக செந்தில் பேட்டி

Posted:

காமெடி நடிகர் செந்தில் இறந்துவிட்டதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரவியது, இதற்கு செந்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் செந்திலும் ஒருவர். கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து செய்த பல காமெடி படங்கள் என்றும் ரசிக்கத்தக்கது. தற்போது படங்களில் ...

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ராஜ்கிரண் - ராகவா லாரன்ஸ்

Posted:

நடன இயக்குனரான ராகவா லாரன்ஸை திரையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சரண். அஜித் நடித்த அமர்க்களம் படத்தில ஒரு பாடலுக்கு அவரை நடனம் ஆட வைத்தார் சரண். அந்தப் படத்தில் லாரன்ஸுக்குக் கிடைத்த வரவேற்பு தான், பின்னால் அவர் கதாநாயக நடிகராக உயர காரணமாக அமைந்தது. ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தவகையில் பலராலும் நடிராக அறியப்பட்ட ராகவா ...

ஜெயம் ரவியின் 25 ஆவது படம் எது?

Posted:

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய படம் தனி ஒருவன். ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் கடந்த ஆண்டு வெளியானபோது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதன் காரணமாக இந்தப்படத்தின் பிற மொழிக்கான ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் இப்படத்தின் ...

விக்ரம் உடன் மோத சிவகார்த்திகேயன் முடிவு

Posted:

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் என்ற புதியவர் இயக்கும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் காமெடியனாக சதீஷ் நடிக்கிறார். தங்கமகன் படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்த ...

விஷால், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்

Posted:

விஷால் நடித்த மத கஜ ராஜா படமும், மருது படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இவற்றில் மத கஜ ராஜா படம் முடிவடைந்தநிலையில் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் படம். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் வாய்ப்பு உள்ளது. 'டார்லிங்' படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷும், சாம் ஆண்டனும் மீண்டும் ...

தன்ஷிகாவின் கூந்தலுக்காக காத்திருக்கும் கிட்ணா

Posted:

சமுத்திரகனியின் கனவு படமான கிட்ணா தன்ஷிகாவின் தலைமுடி வளர காத்துக்கொண்டிருக்கிறது. சமுத்திரகனி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு கிட்ணா படத்தை ஆரம்பித்தார். இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டு, தகவல்கள் திரட்டி திரைக்கதை அமைத்தார். கிட்ணா என்ற நடுத்தர மலைவாழ் மனிதனாக அவர் நடிக்கிறார். அவரது மனைவியாக தன்ஷிகா ...

கவலையில் 'கயல்' ஆனந்தி

Posted:

கயல், சண்டிவீரன், விசாரணை போன்ற படங்களில் நடித்தும் முதல்வரிசை கதாநாயகியாக வரமுடியாமல் இருப்பவர் ஆனந்தி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்த நிலையில் தான் பொறியாளன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து கயல், சண்டிவீரன் ஆகிய படங்களில் நடித்தும் அவரால் க்ளிக்காக முடியவில்லை.

த்ரிஷா இல்லைனா ...

பிருத்விராஜ் மலையாளப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது

Posted:

2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் சப்தமஷ்ரி தஷ்கரகா. பிருத்விராஜ், ஆசிப் அலி, சுதீர் கரமன்னா, செம்பன் நீரஜ் மாதவ், நெடுமுடி வேனு, சனுஷா, லியோ ஜோஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரெக்ஸ் விஜயன், சுஷின் ஷயாம் இசை அமைத்திருந்தனர். ஜெயஷ் நாயர் ஒளிப்பதிவு செய்திருந்தார். அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கி ...

'24' படத்தின் நீளம் குறைப்பு

Posted:

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள '24' திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் நீளம் பற்றிய ஒரு பேச்சு எழுந்தது. 2 மணி நேரம் 44 நிமிடம் 31 வினாடிகள் நேரம் ஓடும் நேரத்தில் படம் இருந்தால் ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இருந்தாலும் ...

ஜூன் மாதம் திரைக்கு வரும் “ஜக்கன்னா”

Posted:

நகைச்சுவை நடிகராக வெற்றி கண்டு பின்னர் நாயகனாக மாறியுள்ள சுனில், தற்போது ஜக்கன்னா எனும் படத்தில் நடித்து வருகின்றார். சுனிலின் இறுதிப் படமான கிரிஷ்னாஸ்டமி எனும் திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் ஜக்கன்னா படத்தில் அதிக நம்பிக்கையுடன் சுனில் நடித்து வருகின்றார். ராக்ஷா படப்புகழ் இயக்குனர் வம்சி கிருஷ்ண அகீலா ...

ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படம்

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஜனதா கேரேஜ் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோஸில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்படப்பிடிப்பிற்கான பணிகளில் ...

மே 11ல் தெலுங்கில் மருது பாடல்கள் வெளியீடு

Posted:

கொம்பன் படப்புகழ் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடிசேர்ந்து நடித்திருக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் மருது தமிழ் மற்றும் தெலுங்கில் மே 20ல் திரைக்கு வரவுள்ளது. விஷால் படங்களுக்கு ஆந்திரா தெலுங்கானாவில் நல்ல மார்கெட் உள்ளது. பெரும்பாலுமான விஷாலின் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து ...

வெங்கடேஷின் 75வது படத்தை இயக்கும் பூரி ஜெகன்நாத்?

Posted:

இயக்குனர் மாருதி இயக்கத்தில் வெங்கடேஷ் தற்போது பாபு பங்காராம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். வெங்கடேஷ் நகைச்சுவை வேடமேற்று நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வெங்கடேஷின் 75வது ...

இயக்குனர் ஆகிறார் நிழல்கள் ரவி

Posted:

கோயமுத்தூர் ரவிச்சந்திரன், பாரதிராஜாவால் நிழல்கள் ரவி ஆக்கப்பட்டார். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் அற்புதனமாக கேரக்டரில் நடித்ததன் மூலம் படத்தின் பெயர் கூடவே ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சில படங்களில் நிழல்கள் ரவி ஹீரோவாக நடித்தாலும், அவரால் ஹீரோவாக தொடர முடியவில்லை. அதற்காக மனம் தளராமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார். ...

சசிகுமாருடன் மீண்டும் இணைகிறார் நிகிலா

Posted:

கேரளாவிலிருந்து வரும் தேவதைகளில் தற்போதைய வரவு நிகிலா. வெற்றிவேல் படத்தில் நடித்தவர். பாக்ய தேவதா என்ற மலையாளப் படத்தில் ஜெயராம் தங்கையாக சினிமா அறிமுகம். அதன் பிறகு லவ் 24 இண்ட் 7 என்ற படத்தில் திலீப் ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் போகவே தமிழ் பக்கம் கவனம் செலுத்தினார் ஒன்பது குழி சம்பத் என்ற சிறிய ...

சிங்கப்பூரில் 5வது சைமா விருது விழா

Posted:

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா (சைமா) கடந்து 4 ஆண்டுகளாக துபாய், சார்ஜா, மலேசியா ஆகிய நாடுகளில் நடந்தது. 5வது சைமா விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 30ந் தேதியும், ஜுலை 1ந் தேதியும் சிங்கப்பூரில் உள்ள சன்டெக் கன்வென்ஷன் செண்டரில் நடக்கிறது.

இதற்கான அறிவிப்பு விழா நேற்ற சிங்கப்பூரில் நடந்தது. நடிகை ஸ்ருதிஹாசன், இசை ...

றெக்க படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் றெக்க படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள புது பிள்ளையார் கோவிலில் நடந்தது. முதல் காட்சியில் விஜய் சேதுபதியும், லட்சுமி மேனனும் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார், இயக்குனர் ரத்தன் சிவா ஆக்ஷன் சொன்னார், இயக்குனர் பன்னீர் செல்வம் கிளாப் அடித்தார். ஒளிப்பதிவளார் தினேஷ் கிருஷ்ணன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™