Tamil Star |
- தொடருந்துடன் கார் மோதி விபத்து – ஒருவர் பலி
- வேலையற்ரோர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் குறைவடைந்தது
- தாய் உணவகத்தில் ஆயுத முனையில் கொள்ளை
- பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா?
- பாசிப்பயறு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!
- கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்து
| தொடருந்துடன் கார் மோதி விபத்து – ஒருவர் பலி Posted: 08 Apr 2016 06:41 PM PDT
Van Kirk Drive மற்றும் Hurontario வீதிக்கு இடையில் உள்ள Sandalwood Parkway பேருந்துத் தடப் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு சற்று முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மோசமான காயங்களுக்கு ஆளான மற்றொரு ஆண் நபர் மீட்கப்பட்டு அவசர உலங்கு வான்னூர்தி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. The post தொடருந்துடன் கார் மோதி விபத்து – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வேலையற்ரோர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் குறைவடைந்தது Posted: 08 Apr 2016 09:30 AM PDT
வேலைச் சந்தையில் புதிதாக பகுதிநேர மற்றும் முழு நேர வேலைகள் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டமையாலேயே வேலையற்றோரின் எண்ணிக்கையில் குறைவேற்றபட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் கனடாவின் வேலையற்றோர் சதவீதம் 7.3 ஆக இருந்த நிலையிலேலேயே சடுதியான குறைவாக மார்ச் மாத்தில் வேலையற்றோரின் சதவீதம் 7.1ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை கனேடியப் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள குறித்த புள்ளிவிபர அறிக்கையில் கடந்த மார்ச் மாதத்தில் 40,600 வேலைகள் வழங்கப்பட்டவுள்ளதாகவும், அவற்றுள் 35,300 வேலைகள் முழு நேர வேலைகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. The post வேலையற்ரோர் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் குறைவடைந்தது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாய் உணவகத்தில் ஆயுத முனையில் கொள்ளை Posted: 08 Apr 2016 09:24 AM PDT
குறித்த அந்த உணவகம் Midland அவனியூவிற்கு அருகில் கிழக்கு Eglinton Avenue பகுதியில் அமைந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு உணவகத்தினுள் நுளைந்து பணம் வழங்குமாறு அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் குறித்த அந்த சந்தேக நபர் ஒருதொகைப் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. The post தாய் உணவகத்தில் ஆயுத முனையில் கொள்ளை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா? Posted: 08 Apr 2016 08:48 AM PDT
நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் பூசணிக்காயை சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது. பூசணி விதை இதன் விதைகளை காயவைத்து, பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும், இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெரும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடியதுமான பூசணி விதையில் அதிக அளவு மக்னீஷியம் சத்து உள்ளது. பூசணியில் உள்ள துத்தநாகச் சத்து, உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்தும். பூசணி விதைகளும், இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் போன்ற பாதிப்புகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள், பூசணி விதையை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல் குறையும். ஆண்கள் பூசணி விதையைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் விந்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கும். பூசணி விதையை நசுக்கி கஷாயமாக்கிப் பருகினால், வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும். The post பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாசிப்பயறு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! Posted: 08 Apr 2016 08:40 AM PDT
வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். அடங்கியுள்ள சத்துக்கள் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள் கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். காய்ச்சல் குணமாகும். சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது. மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். The post பாசிப்பயறு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்து Posted: 08 Apr 2016 08:15 AM PDT
உயிராபத்தான காயங்களுக்கு ஆளான குறித்த நபர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Caldow வீதிக்கு அருகில் St. Clements Avenue பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்புறமாக காலை 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பான செய்திகள் எவையும் வெளியாகவில்லை. The post கார் ஒன்று மரத்துடன் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரம்ரன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை தொடருந்தும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் கடந்து மார்ச் மாதத்தில் வேலையற்ரோரின் சதவீதம் 7.1 ஆக குறைவடைந்துள்ளது.
ஸ்காபரோவில் உள்ள "தாய்" உணவங்களில் வியாழக்கிழமை பின்னிரவில் இடம்பெற்ற ஆயுத முனைக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூசணிக்காயில் உள்ள சத்துக்களை போலவே பூசணி விதையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
