Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Richmond Hill பகுதியில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

Posted: 07 Apr 2016 07:14 PM PDT

j

jRichmond Hill பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலை 7 மற்றும் Yonge Street இன் Dunvegan Drive பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த இடத்திற்கு அதிகாரிகள் சென்றிருந்த போது அங்கு ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.j

எனினும் அவர்களின் விபரங்கள் மற்றும் குறிப்பிட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா என்பன உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post Richmond Hill பகுதியில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று ஒன்ராறியோவின் வட பகுதிக்கு பயணம்

Posted: 07 Apr 2016 10:00 AM PDT

Justin_Trudeau_-_Parliament_Hill__-_Ottawa_-_1113

Justin_Trudeau_-_Parliament_Hill__-_Ottawa_-_1113உள்கட்டுமாண செலவீனங்கள் தொடாபிலான மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த தமது பேச்சுக்களைத் தொடர்வதற்காக கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று ஒன்ராறியோவின் வட பகுதிக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

லிபரலின் ஆதிக்கம் உள்ள இடமான Sudbury இல் ஒன்ராறியோவின் வீதிக் கட்டுமாணம் தொடர்பான செலவுக்கான முக்கிய அறிப்பு ஒன்றை பிரதமர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்ராறியோ அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கான மொத்தத் தொகை 80 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 26.7 மில்லியன் டொலர்களை அந்த திட்டத்திற்கு செலவிடுவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் தீர்மாணித்தள்ளதுடன், அந்த அபிவிருத்தித் திட்டத்தை ஈடுசெய்வதற்கானா எஞ்சிய நிதியை மத்திய அரசாங்கம் வழங்கும் என்று ஒன்ராறியோ அரசாங்கத்தின் அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டு்ள்னர்.

கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜஸ்ரின் ரூடோ தம் சுரங்க மற்றும் காட்டு வளங்களுக்காக 200 மில்லியனை ஒதுக்குவதாக உறுதியளித்திருந்தார்.Justin_Trudeau_-_Parliament_Hill__-_Ottawa_-_1113

பின்னர் அவரின் அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் முன்வைத்த போது வனத்துறை, சுரங்க மற்றும் கனியத்துறை,புவியல் விஞ்ஞானம் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளை விரிவுபடுத்தும் திட்டத்திற்காக 87.2 மில்லயின் டொலர்களை அறிவித்திருந்தார்.

எனினும் அந்த வரவுசெலவுத் திட்டம் லிபரல் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சில தரப்பினரினால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், வனத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று ஒன்ராறியோவின் வட பகுதிக்கு பயணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

முள்ளுக்கரண்டியால் குத்தப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி

Posted: 07 Apr 2016 09:06 AM PDT

stabbed_-07042016

stabbed_-07042016

நபர் ஒருவர் தலையில் முள்ளுக்கரண்டியால் குத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ரொரனரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும், எனினும் காயத்திற்கு ஆளான நபர் உயிராபத்தான காயங்களுக்கு ஆளாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்காபரோவின் Ellesmere மற்றும் McCowan வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுவிற்பனை நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பின்போதே குறித்த நபர் முள்ளுக்கரண்டியால் குத்தப்பட்டு காயங்களுக்கு ஆளானார் என கூறப்படுகிறது.stabbed_-07042016

பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

 

The post முள்ளுக்கரண்டியால் குத்தப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஆங் சான் சூச்சியைச் சந்தித்தார்

Posted: 07 Apr 2016 08:51 AM PDT

Stephane_Dion_-_07042016

Stephane_Dion_-_07042016கனேடிய வெளிவிவகார அமைச்சர் ரீபன் டியோன் மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் ஆங் சான் சூச்சியை இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளனர்.

இதில் கருத்து வெளியிட்ட கனேடிய வெளிவிவகார அமைச்சர் ரீபன் டியோன், இராணுவ ஆட்சியில் இருந்து சனநாயக ஆட்சிக்கு மாற்றப்பட்டதற்கும், தசாப்பதங்களின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள மியன்மாரின் புதிய சிவில் அரசாங்கத்திற்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறினார்.

ஆங் சான் சூச்சி வெளிவிவகார அமைச்சராக சென்ற வாரம் பதவி ஏற்றதன் பின்னர் அவர் முதல் உயர்நிலைச் சந்திப்பாக சீனாவின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்திருந்தார்.Stephane_Dion_-_07042016

அதனைத் தொடர்ந்து இத்தாலியின் வெளிவிவகார அமைச்சருடனும் இந்த வார ஆரம்பத்தில் சந்தித்து பேச்சு நடாத்தியிருந்த நிலையிலேயே இன்று கனேடிய வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்துள்ளார்.

The post கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஆங் சான் சூச்சியைச் சந்தித்தார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™