Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பழங்குடியின குடியிருப்பு தீப்பற்றிய சம்பவம் சதிச் செயலாக இருக்க வாய்பில்லை – காவல்த்துறை

Posted: 05 Apr 2016 07:43 PM PDT

l

lஒன்ராறியோவின் வட பிராந்தியயத்தின் பழங்குடியின குடியிருப்பில் ஒன்பது பேர் உயிரிழக்க காரணமாகண தீப்பரவல் சம்பவம் சதிச் செயலாக இருப்பதற்கான வாய்புக்கள் இல்லை என காவல்த்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோவின் வட பிராந்தியயத்தில் பிக்கான்கீகம எனப்படும் பழங்குடியின மக்களின் குடியிருப்பு வீடு ஒன்றே தீபற்றியிருந்தது.

அந்த தீயில் சிக்கி ஐந்து மாத குழந்தை, ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

எனினும் இந்த சம்பவம் சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவியதுடன், காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்னர்.l

இதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று ஆய்வுகளில் இருந்து அனைவரும் புகையைச் சுவாசித்தமையாலேயே உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே இவர்களின் மரணத்தில் சதிச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் தாம் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதிலும் பழங்குடியின மக்கள் பலரது குடியிருப்புகளும் மூன்றாம் உலக நாடுகளின் நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பழங்குடியின தலைவர்கள், அது மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் உணர்த்துவதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

The post பழங்குடியின குடியிருப்பு தீப்பற்றிய சம்பவம் சதிச் செயலாக இருக்க வாய்பில்லை – காவல்த்துறை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரிட்டிஸ் கொலம்பியானின் விக்ரோரியா பகுதியில் சிறிய நிலநடுக்கம்

Posted: 05 Apr 2016 01:39 PM PDT

o

oபிரிட்டிஸ் கொலம்பியானின் விக்ரோரியா பகுதி குடியிருப்பாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிறிய நிலநடுக்கத்தை உணர்ந்தள்ளனர்.

San Juan தீவில் காலை 11 மணிக்க சற்றுப் பின்னராக குறித்த அந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஸ் கொலைம்பியாவிற்கு கிழக்காக 35 கீரோமீறறர் தூரத்தில் அதன் மையம் காணப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அந்த பகுதியில் இந்த நில அதிவு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியிருந்தாக அது தெரிவித்துள்ள நிலையில், கனடாவின் புவியியல் ஆயவு மையம் ரிக்கரல் அளவில் 3.1 ஆக இருந்தாக தெரிவித்துள்ளது.o

இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக முறைப்பாடு இல்லை என்றும், அவ்வாறு எதிர்பார்ப்புக்கள் எவையும் இல்லை என்றும் கனடா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுனாமியையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளது.

The post பிரிட்டிஸ் கொலம்பியானின் விக்ரோரியா பகுதியில் சிறிய நிலநடுக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாஸ்காச்சுவான் தேர்தல்: மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்றது சாஸ்காச்சுவான் கட்சி

Posted: 05 Apr 2016 10:17 AM PDT

Brad_Wall_-_05042016

Brad_Wall_-_05042016சாஸ்காச்சுவான் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றிருந்தது.

இதில் அந்த மாநிலத்தில் இதுவரை ஆட்சி புரிந்துவந்த சாஸ்காச்சுவான் கட்சி மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்களே சாஸ்காச்சுவான் கட்சி ஆட்சி அமைக்கக் கூடிய போதிய முன்னிலையைப் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புக்களின் பிரகாரம் புதிய சனநாயக கட்சியே இந்தமுறை தேர்தலில் வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சாஸ்காச்சுவான் கட்சி மீண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

புதிய சனநாயக கட்சி கடந்த 2007ஆம் ஆண்டில் சாஸ்காச்சுவான் கட்சியிடம் ஆட்சியை இழந்திருந்தது.

பின்னர் 2011ஆம் ஆண்டு தேர்தலின் போதும் புதிய சனநாயகக் கட்சி தோல்வி அடைந்ததுடன்,கட்சியின் தலைவரான இருந்தவரே வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.Brad_Wall_-_05042016

அதே நிலைமையே தற்போதும் புதிய சனநாயக் கட்சிக்கு எற்பட்டுள்ளதாகவம், இம்முறையும் புதிதாக கட்சியின் தலைமைப் பொறுப்பினை வகித்தவர் தனது தொகுதியில் தோல்வியினைச் சந்தித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதேவேளை சாஸ்காச்சுவான் கட்சியின் தலைமை வேட்பாளரும், மாநில முதல்வருமான பிராட் வோலின் (Brad Wall)வெற்றி உறுதியாகியுள்ளதுடன், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த பலரது வெற்றிகளும் பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post சாஸ்காச்சுவான் தேர்தல்: மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்றது சாஸ்காச்சுவான் கட்சி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அணு ஆயுதங்கள் மூலமான பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறைவடைந்துள்ளது – பிரதமர்

Posted: 05 Apr 2016 09:40 AM PDT

Justin_Trudeau_-_111162015

Justin_Trudeau_-_111162015அமெரிக்காவில் இடம்பெற்ற அணு சக்தி பாதிகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் நாடு திரும்பியுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கியுள்ளார்.

அதில் கனடா மீது அணு ஆயுதங்கள் மூலமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகாலத்திற்கு முன்னர் இருந்த நிலவரங்களுடன் ஒப்பிட்டே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அணு ஆயுதங்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பயங்கரமானதான இருக்கும் என்பதனால், அணு ஆயுத தாக்குதல் குறித்த எச்சரிக்கை நிலைப்பாடு அதி உச்ச நிலையிலேயே காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் கைகளில் இவ்வாறான அபாயகரமான ஆயுதங்கள் சென்று சேராது இதுவரை காலமும் தடுக்கப்பட்டதனை வெற்றிகரமான நடவடிக்கையாகவே கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Justin_Trudeau_-_111162015

தற்போது வோசிங்டனில் நடந்துமுடிந்த மாநாடு போன்ற கலந்துரையாடல்களும், அவற்றின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளும், அவற்றின் செயலாக்கமுமே இவ்வாறான ஒரு பாதுகாப்பு நிலைக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் விபரித்துள்ளார்.

தற்போதய பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகள் பெரும்பாலும் குழல் வெடிகுண்டுகள் போன்ற அடிப்படை மரபுசார்ந்த வகையிலேயே காணப்படுவதனையும், பாரீஸ் தாக்குதல்களில் கூட ரஸ்ய தயாரிப்பான ஏ.கே ரக துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளதனையும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

The post அணு ஆயுதங்கள் மூலமான பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறைவடைந்துள்ளது – பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™