Tamil Star |
- சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் சமத்துவமின்மை அதிகரிப்பு!
- சஸ்கச்சுவான் மாநில சட்டசபைக்கான வாக்கெடுப்பு நிறைவு
- இந்தியா வருமாறு கனேடியப் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு
- Downsview இல் கத்திக்குத்து
| சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் சமத்துவமின்மை அதிகரிப்பு! Posted: 04 Apr 2016 10:06 PM PDT
பழக்குடியின கனேடியர்களுக்கும், பழங்குடியினர் அல்லாத கனேடியர்களுக்கும் கிடைக்கும் சுகாதார வசதிகளில் இந்த இடைவெளிகளை வெள்பிபடையாக அவதானிக்க முடியும் என நிபுணர்களது கருத்துக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது கனடாவின் சுகாதார சமத்துவத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுவது அரிதாகவே உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக வருவாய், கல்வி வசதி, குடியிருப்பு வசதி, உணவுப் பாதுகாப்பு, சுத்தமான குடிநீர் வசதி போன்றவற்றினைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு காணப்படும் நிலைமைகளை உரிய முறையில் அணுகி அவற்றுக்கான தீர்வு காணப்படாது விடின், சுகாதார சமத்துவத்தில் கனடா முன்னேற்றம் காண்பது கடினம் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். The post சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் சமத்துவமின்மை அதிகரிப்பு! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சஸ்கச்சுவான் மாநில சட்டசபைக்கான வாக்கெடுப்பு நிறைவு Posted: 04 Apr 2016 08:21 PM PDT
இன்று இரவு 8 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது. கஸ்கச்சுவான் கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான பிராட் வோல் (Brad Wall ) மூன்றாவது தடவையாகவும் முதலமைச்சரா போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் வாக்களிப்பில் ஈடுபட்ட பின்னர் கருத்து தெரிவித்த அவர், தமது கட்சி மூன்றாவது தடவையாகவம் வெற்றி பெரும் என்று நம்புவதாக கூறியுள்ளார். எனினும் அந்த மாநிலத்தின் NDP கட்சியினர் (புதிய சனநாயகக் கட்சியினர்)எதிபாராத வகையில் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் வெளியாகியுள்ளன. The post சஸ்கச்சுவான் மாநில சட்டசபைக்கான வாக்கெடுப்பு நிறைவு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா வருமாறு கனேடியப் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு Posted: 04 Apr 2016 09:21 AM PDT
வோசிங்டன் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் போது கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவைச் சந்தித்து கலந்துரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்தியப் பிரதமரின் இந்த அழைப்பை கனேடியப் பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இருநாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம் என்பன தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது கனடாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமான பிணைப்பைக் கொண்ட நாடுகள் என்றும், இரு நாடுகளுக்குள் உள்ள இந்த நெருக்கமான பிணைப்பை மேலும் விரிவு படுத்த வேண்டும எனவும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இரண்டு முக்கிய உடன்படிக்கைகள் தொடர்பில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு அந்த உடன்படிக்கைகளுக்கான இணக்கப்பாடுகளை காண வேண்டும் எனவும் அவர் விருப்பம் வெளியிட்டுள்ளார். இதேவேளை இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு உடன்பாடு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு தரப்புக்களும் தயாராக உள்ளதாக கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் விஷ்ணு பிரகாசும் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல், பின்னர் கடந்த ஆண்டு இடம்பெற்ற கனேடிய தேர்தல் உள்ளிட்ட காரணிகளினால் 2010ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் மந்தமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. The post இந்தியா வருமாறு கனேடியப் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Apr 2016 07:55 AM PDT
இதில் ஒருவர் காயமடைந்தார் என்றும், அவர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. Keele வீதி மற்றும் Keelegate Drive பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர் தொடர்பான பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. அத்துடன் சந்தேக நபர் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. The post Downsview இல் கத்திக்குத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


சஸ்கச்சுவான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றுள்ளது.

