Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மனித உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது

Posted: 30 Apr 2016 06:39 PM PDT

k

kRiverdale பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்றில் நபர் ஒருவரின் உடற்பாகம் ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த மாதம்(ஏப்பிரல்)19 ஆம் திகதி குறித்த மனித உடற்பாகம் Broadview அவனியூ மற்றும் Gerrard வீதியில் அமைந்துள்ள இறைச்சி கடை ஒன்றின் பின்புறமாக உள்ள குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த இறைச்சிக் கடையில் வேலைசெய்யும் நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்த காவல்த்துறையினர் அதனை மீட்டிருந்ததுடன், அது குறித்த விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணைகளில் இருந்து குறித்த அந்த மனித உடல் சில வாரங்களின் முன்னர் காணமல் போயிருந்த 30 வயதான Melissa Cooper என்பவரின் உடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த உடற்பாகத்தை கண்டுபிடித்தமையுடன் தொடர்புடைய 38 வயதான நபர் ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்திருந்ததுடன், அவரை இன்று நீதிமன்றில் முன்னிலையாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களை அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post மனித உடல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலை ஸ்லிமாக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள்!

Posted: 30 Apr 2016 07:36 AM PDT

k

kஅதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உடலில் சதை வளர்ச்சியை அதிகரிக்கசெய்து அவலட்சணமான தோற்றத்தை உருவாக்கும் என்பது மட்டுமே நம்மில்பலருக்கு தெரியும்.

ஆனால் அதே கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தி கவர்ச்சியான தோற்றத்தை பேணவும் முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்ட போதிலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பமிலங்களும் இருக்கத்தான்செய்கின்றன.

அதன்படி பின்வருவனவற்றினை உட்கொள்ளுதல் மூலம் இடையை ஸ்லிம்மாகபேண முடியும்.

அவகோடா

இது ஒரு நிரம்பாத கொழுப்பமிலஉணவாக இருப்பதுடன், இதில் காணப்படும் ஒலீயிக் அமிலமானது அளவுக்கு மீறிய பசி தூண்டப்படலை கட்டுப்படுத்துகின்றது. தவிர உடலிலுள்ள அதிககொழுப்புச் சத்தினை எரிக்க உதவும்புரதம் மற்றும் நார்ச்சத்து என்பன அதிக அளவில் காணப்படுகின்றது.k

தேங்காய்

அதிக அளவில் நிரம்பிய கொழுப்பமிலஉணவாக காணப்படுவதுடன், லாரிக் அமிலத்தை அதிகளவில்உற்பத்தி செய்யக்கூடியது. இவ் அமிலமானது உடலில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்படுத்துவதுடன், அடி வயிறு பருத்தலையும் குறைக்கின்றது.u

பாதாம் பருப்பு

இதற்குஇடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது உடல் பருமனை தூண்டும் கொழுப்புக்களை உறுஞ்சுவதை தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.h

யோகட்

கிரேக்க நாட்டில் தயாரிக்கப்படும் யோகட் சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காரணம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் அதில் நிறைந்த கொழுப்பு காணப்படுவதனாலுமாகும்.

தவிர இதில் புரோபயாடிக் பக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதால் அவை அடி வயிற்று பருமனையும் தடுக்கின்றது.gt

The post உடலை ஸ்லிமாக்கும் கொழுப்பு நிறைந்த உணவுகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

Posted: 30 Apr 2016 07:32 AM PDT

i

iஸ்காபரோவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பார்க்வே பிளாசாவின் வாகனத் தரிப்புப் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு சற்று முன்னராக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர் என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.i

இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அசைவற்ற நிலையிலேயே இருந்தனர் என்றும், பின்னர் இருவரும் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடாபில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™