Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிரியா தாக்குதலில் கனேடிய நிதியுதவியில் இயங்கிய மருத்துவமனை அழிப்பு

Posted: 29 Apr 2016 07:28 PM PDT

mk

mkசிரியாவில் இடம்பெற்ற வான் தாக்குதலில் கனடாவின் நிதி உதவியில் இயங்கிவந்த சுகாதார வைத்திய நிலையம் ஒன்றும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலப்பே பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போதே அங்கு இருந்த Al Marjeh Primary Health Care Centre என்ற மருத்துவ நிலையம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அந்த மருத்துவ நிலையம் கனடாவின் மில்லியன் டெலர் கணக்கான விநியோகங்களைப் பெற்று இயங்கிவந்தது என்றும் கூறப்பட்டு்ள்ளது.mk

இந்த தாக்குதல் சம்பந்தமாக வெளியான படங்களில் கட்டட இடிபாடுகளுக்குள் மருத்துவ விநியோகப் பொருட்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலப்பே பகுதியில் கடந்த மூன்று நாட்களில் மருத்துவமனை மீது தாக்குதல் நடாத்தப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

The post சிரியா தாக்குதலில் கனேடிய நிதியுதவியில் இயங்கிய மருத்துவமனை அழிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுவர் அபாச வெளியீடு: ஒன்ராறியோவில் பலர் கைது

Posted: 29 Apr 2016 12:35 PM PDT

b

bஒன்ராறியோ மாநிலத்தில் சிறுவர்களி்ன் ஆபாச நடவடிக்கையுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செய்தியாளர் மாநாட்டை நடாத்திய கால்த்துறையினர் இது தொடர்பிலான விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் காவல்த்துறையினர் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது குழந்தைகள் தொடர்பான ஆபாச வெளியீடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 80 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 270 இற்கும் மேலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சந்தேக நபர்களிடம் சிக்கியிருந்த 20 சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.b

The post சிறுவர் அபாச வெளியீடு: ஒன்ராறியோவில் பலர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் வாகன விபத்து

Posted: 29 Apr 2016 12:19 PM PDT

l

lஇன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் மிசிசாகாவின் மத்திய பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டார் என்றும், மற்றுமொருவர் உயிராபத்தான காயங்களுடன் காணப்பட்டார் என்றும், அவர்கள் இருவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அசைவற்ற நிலையில் இருந்தவர் உயிரிழந்து விட்டதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் 20 வயது ஆண் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிய காயங்களுக்கு ஆளான இருவருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.l

Britannia வீதி மற்றும் Latimer Drive சந்திப்புப் பகுதியில் விபத்து இடம்பெற்றதாகவும், தாம் அங்கு மாலை 7 மணியளவில் வரவழைக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், வாகனத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு தீயணைப்புப் படையினரின் உதவியும் தேவைப்பட்டதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர்.

விபத்தை அடுத்து குறித்த வீதிச் சந்திப்புப் பகுதி விசாரணை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மிசிசாகாவில் வாகன விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் தமிழ் இளைர்கள் இருவர் பரிதாப பலி!

Posted: 29 Apr 2016 09:54 AM PDT

h

hவட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர்.

கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர்.

24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் , மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் தெரிவிக்கையில்,

உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம்(Life Jacket) அணியாதிருந்துள்ளனர்.

படகு கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குறிப்பிட்ட ஏரி பனியில் இருந்து விடுபட்டிருந்ததாகவும் சம்பவம் நடந்த வேளை ஏரி நீரின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடும் குளிர் நீராக இருந்ததால் தான் அவர்களால் நீந்திக் கரை சேர முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திரு லிங்கவிஜிதன் கிருபாநாயகம்

திரு கஜன் கலாபாகன்

The post கனடாவில் தமிழ் இளைர்கள் இருவர் பரிதாப பலி! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™