Tamil Star |
- Harwood-area park இல் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு இனங்காணப்பட்டுள்ளது
- ஒன்ராறியோவில் மின்சார வாகனங்களை மின்னேற்ற 500 நிலையங்கள் நிறுவப்படவுள்ளன
- கனேடியப் பிரதமர் சஸ்கச்சுவான் முதவர்வரிடையே சந்திப்பு
- Harwood பகுதியில் மண்டையோடு கண்டுபிடிப்பு: விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறை
| Harwood-area park இல் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு இனங்காணப்பட்டுள்ளது Posted: 28 Apr 2016 08:33 PM PDT
கடந்த புதன்கிழமை பிற்பகல் அளவில் ரொரன்ரோவின் Harwood பகுதியில் இருந்து மனித மண்டையோடும் என்புகளும் மீட்கப்பட்டதை அத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனா. பின்னர் குறித்த என்புகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட 28 வயதான Rigat Ghirmay என்ற பெண்ணினது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட இந்த பெண்ணின் உடற்பாகம் ஒன்று மூன்று ஆண்டுகளின் முன்னர் குறித்த அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது ஏனைய உடற்பாகங்களின் என்புகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. The post Harwood-area park இல் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு இனங்காணப்பட்டுள்ளது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவில் மின்சார வாகனங்களை மின்னேற்ற 500 நிலையங்கள் நிறுவப்படவுள்ளன Posted: 28 Apr 2016 07:47 PM PDT
2017 ஆம் ஆண்டு இந்த நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன், அவற்றின் நிர்மாணப்பணிகளுக்காக 20 மில்லியன் டொலர் நிதியையும் மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. 250 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் இவை நிறுவப்படவிருப்பதாகவும், இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 27 நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்ரிபன் டெல் டுகா தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள், நகர்பகுதி, பணியிடங்கள், கூட்டுரிமை வீடுகளை கொண்ட குடியிருப்புக்கள், சில பொது இடங்கள் என்பவற்றை அண்டி வாகனங்களுக்கு மின்னேற்றுவதற்கான இந்த நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். The post ஒன்ராறியோவில் மின்சார வாகனங்களை மின்னேற்ற 500 நிலையங்கள் நிறுவப்படவுள்ளன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடியப் பிரதமர் சஸ்கச்சுவான் முதவர்வரிடையே சந்திப்பு Posted: 28 Apr 2016 07:46 AM PDT
மூடிய அறையில் இடம்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து உடவியலாளர்களைச் சந்தித்திருந்த இரு தலைவர்களும், தங்களின் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். பிரதமரின் இந்த வருகைக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் சஸ்கச்சுவான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சஸ்கச்சுவான் மாநிலத்தில் உள்ள கல்வி சேவைக்கான நிதி இடைவெளியை குறைப்பதற்கு தமது மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்கும் என் பிரதமர் உறுதியளித்தாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் எரிபொருள் விநியோகக் குழாய் திட்டம், வேலைவாய்ப்பு காப்புறுதி திட்டம் உள்ளிட்ட பழங்குடி மக்களுக்கான நிதி உதவிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post கனேடியப் பிரதமர் சஸ்கச்சுவான் முதவர்வரிடையே சந்திப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Harwood பகுதியில் மண்டையோடு கண்டுபிடிப்பு: விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறை Posted: 28 Apr 2016 07:42 AM PDT
Westonவீதி மற்றும் Humber Boulevard North பகுதியில் குடித்த மண்டையோடு நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Hilldale வீதி Symes Road Park Trail அருகில் அமைந்துள்ள பூங்காப் பகுதியினுள் நடந்துசென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் இதனைக் கண்டிருந்ததுடன், பிரேத பரிசோதனையாளர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு குறித்த மண்டையோடு மனிதனுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்க அருகில் வேறு என்புகளும் காணப்பட்டதுடன், அவையும் மனிதனுடையது என்று ரொரன்ரோ காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். The post Harwood பகுதியில் மண்டையோடு கண்டுபிடிப்பு: விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Harwood-area parkஇல் கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புகள் 2013 இல் கொலைசெய்யப்பட நபர் ஒருவரினது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மின்னேற்றுவதற்கான சுமார் 500 நிலையங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவுவதற்கு ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சஸ்கச்சுவான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுக்கும் அந்த மாநிலத்தின் முதல்வர் பிரட் வோலுக்கும் (Brad Wall ) இடையில் நேற்றுப் புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
Harwood பகுதியில் மனித மண்டையோடு கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அது தொடர்பான விசாரணைகளில் ரொரன்ரோ காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.