Tamil Star |
- Oakville பகுதியில் இரண்டு கார்கள் மோதி விபத்து
- சவுதியுடனான ஆயுத உடன்பாட்டை இரத்து செய்ய கோரிக்கை
- சத்துக்கள் நிறைந்த கம்பு கூழ்
- ஹமில்ரன் குடியிருப்பு பகுதியில் தீ சம்பவம்
- பிணைத்தொகை ஒருபோதும் கொடுக்க முடியாது – கனடா
| Oakville பகுதியில் இரண்டு கார்கள் மோதி விபத்து Posted: 27 Apr 2016 08:29 PM PDT
படுகாயமடைந்த அந்த நபர் உடனடியாகவே அவசர உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை பிற்பகல் அளவில் இந்த விபர்து இடம்பெற்றுள்ளதக. விபத்துத் தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். The post Oakville பகுதியில் இரண்டு கார்கள் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சவுதியுடனான ஆயுத உடன்பாட்டை இரத்து செய்ய கோரிக்கை Posted: 27 Apr 2016 08:26 PM PDT
அனைத்துலக மன்னிப்புச் சபை கனடா,மத்திய கிழக்கில் உள்ள நீதி மற்றும் சமாதானத்துக்கான கனேடியர் அமைப்பு என்பவற்றுடன் ஏனைய முகவர் அமைப்புக்களும் இணைந்து குறித்த அந்த கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர். பயங்கரமான மனித உரிமை மீறல்களுடன் உள்ள சவுதிப் படையினருக்கு அவ்வாறனா பெருந்தொகை ஆயுதங்களை வழங்குவதானது முறைகேடான மற்றும் நியாயமற்ற செயல் என்றும் அந்த குழுவினர் பிரதமருக்கு எழுதிய கடித்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் முன்னைய பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் போது ஏற்படுத்திக்கொண்ட இந்த ஒப்பந்தத்தை கடினயப் பிரதமா இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். The post சவுதியுடனான ஆயுத உடன்பாட்டை இரத்து செய்ய கோரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Apr 2016 08:30 AM PDT
மேலும் வயிற்று புண், மலச்சிக்கலை தடுக்கிறது. தேவையான பொருட்கள் கம்பு மாவு - 1 கப் சாதம் ஊற வைத்த தண்ணீர்- தேவையான அளவு சின்ன வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 1 மோர் -1 கப் சாதம்- 1 கப் உப்பு- தேவையான அளவு செய்முறை முதலில் சாதம் ஊற வைத்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கம்பு மாவை போட்டு சுமார் 8 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்புடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நன்கு களி போன்று வந்தவுடன் வேறொரு பாத்திரத்தை மாற்றிவிட வேண்டும். ஆறியவுடன் இதில்சாதம், மோர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்தால் சுவையான கம்புகூழ் ரெடி!!! The post சத்துக்கள் நிறைந்த கம்பு கூழ் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹமில்ரன் குடியிருப்பு பகுதியில் தீ சம்பவம் Posted: 27 Apr 2016 07:57 AM PDT
Main மற்றும் Wellington வீதிகளுக்கு அருகில் Ford வீதியில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடிக் கட்டத்தில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புக் கட்டத்தில் வசிக்கும் ஒருவர் இந்த தீ சம்பவத்தினால் தாம் தமது ஐந்துவயது மகனுடன் யன்னைலை உடைத்து தப்பியிருந்தமை தொடர்பில் விபரித்துள்ளார். குறித்த தீ பரம்பல் காரணமாக பெரும் புகைமூட்டம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் தமது வீட்டின் முன்புறமாக தப்பித்துக்கொள்ள முடியாது போனதாகவும், அப்போது தாம் யன்னர் அருகில் இருந்து கூச்சல் இட்டதை கேட்ட அயலவர்களே யன்னலை உடைத்து வெளியே பாயுமாறு தெரிவித்திருந்தாகவும், தாம் வெளியேறுவதற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். The post ஹமில்ரன் குடியிருப்பு பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிணைத்தொகை ஒருபோதும் கொடுக்க முடியாது – கனடா Posted: 27 Apr 2016 07:53 AM PDT
பிலிப்பீன்சில் பிணைபிடிக்கப்பட்ட கனேடியர்களில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவ்வாறு கிளர்சியாளர்களால் கோரப்படும் பிணைத் தொகையைக் கொடுத்தால் அது வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கனடியர்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பிலிப்பீன்ஸுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த கனேடியர்கள் உள்ளிட்ட நால்வர் பிலிப்பைன்ஸில் உள்ள அபு சயாஃப் கிளர்ச்சியாளர்களால் சுமார் ஏழு மாதங்களின் முன்னர் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவரான ரிட்சல் என்பரே தற்போது தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிலிப்பீன்ஸ் நாட்டில் செயல்வடும் அபு சயாஃப் கிளர்ச்சியாளர்களால் பிணைப்பிடிக்கப்பட்டிருந்த கனடியரான 68 வயதுடைய ரிட்சல் பிணைத்தொகை அளிப்பதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் முடிந்த நிலையில் அவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். The post பிணைத்தொகை ஒருபோதும் கொடுக்க முடியாது – கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

Oakville பகுதியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சவுதியுடன் கனடா மேற்கொண்டுள்ள 15 பில்லியன் பெறுமதியான ஆயுத உடன்படிக்கையை கனடா இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனித உரிமைக் குழுக்கள் கனேடியப் பிரதமருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.
![jh]](http://news.tamil.com/wp-content/uploads/2016/04/jh-3.jpg)
ஹமில்ரன் அடுக்குமாடிக் கட்டத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ சம்பவம் காரணமாக அங்கிருந்த வீடுகளில் இருந்த பலர் வெளியேற்றப்பட்டனர்.
பிணையாளிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள தனது குடிமக்களை விடுவிப்பதற்கு ஒருபோதும் பிணைத்தொகை கொடுக்க முடியாது என்று கனடா அறிவித்துள்ளது.